Published:Updated:

``காக்கும் கடவுளாக காவல்துறை துணிவுடன் செயலாற்றியது” - கோவை கார் வெடிப்பு சம்பவம் குறித்து அண்ணாமலை

அண்ணாமலை

``உளவுத்துறை ஜமேஷா முபின் பெயரைக் குறிப்பிட்டு எச்சரித்தும், கோட்டைவிட்டிருக்கிறோம். அலர்ட் என்பதைப் பொத்தம் பொதுவாகச் சொல்கிறார்கள்.” - அண்ணாமலை

``காக்கும் கடவுளாக காவல்துறை துணிவுடன் செயலாற்றியது” - கோவை கார் வெடிப்பு சம்பவம் குறித்து அண்ணாமலை

``உளவுத்துறை ஜமேஷா முபின் பெயரைக் குறிப்பிட்டு எச்சரித்தும், கோட்டைவிட்டிருக்கிறோம். அலர்ட் என்பதைப் பொத்தம் பொதுவாகச் சொல்கிறார்கள்.” - அண்ணாமலை

Published:Updated:
அண்ணாமலை

கோவை கார் வெடிப்பு நடந்த கோட்டை ஈஸ்வரன் கோயிலில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கந்த சஷ்டி பாடி வழிபாடு நடத்தினார். பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அண்ணாமலை, “1998 குண்டு வெடிப்புக்குப் பிறகு கோவை பின்னோக்கிச் சென்றிருக்கிறது. இந்த நேரத்தில் இந்தத் தாக்குதல் திட்டமிட்டபடி நடந்திருந்தால் கோவை இன்னும் 20 ஆண்டுகள் பின்னோக்கிச் சென்றிருக்கும்.

அண்ணாமலை
அண்ணாமலை

தற்கொலைப் படைத் தாக்குதல் என்று தெரிந்தும், காக்கும் கடவுளாகக் காவல்துறை நண்பர்கள் மிகத் துணிச்சலுடன் குற்றத்தில் சம்பந்தப்பட்டவர்களைப் பிடித்து, உயிரைப் பணயம்வைத்து வேறு அசம்பாவிதம் எதுவும் நடக்காமல் பார்த்துக்கொண்டனர். அவர்களுக்கு நன்றி மற்றும் பாராட்டுகள். அதேநேரத்தில் மாநில அரசுக்குப் பல கேள்விகளை வைத்தோம்.

அது மாநில அரசு சரியாகச் செயல்பட வேண்டும் என்பதற்குத்தானே தவிர, அவர்களை தொந்தரவு செய்வதற்காக அல்ல.  மதத்தால் பிளவுபடுத்த நினைத்தால்கூட, மக்கள் ஒற்றுமையாக இருப்பது நம் பலம். கோவை நகரில் எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், வன்முறையைக் கையில் எடுப்பவர்களை ஊக்குவிக்கக் கூடாது.” என்றவர் பாக்கெட்டில் இருந்து சில ஆணிகள் மற்றும் கோலிக்குண்டுகளை எடுத்துக் காண்பித்து,

அண்ணாமலை
அண்ணாமலை

“கோயில் அருகே இருந்த மக்கள் இதைக் கொடுத்தனர். இதை வைத்து மிகப்பெரிய உயிர்ச் சேதத்தை ஏற்படுத்தத் திட்டமிட்டிருந்தனர். இன்னும் சிலிண்டர் விபத்து என்று சொல்வதற்குக் காரணம் என்ன... மக்களை எச்சரிப்பது காவல்துறையின் முதன்மையான பணி.

பொதுமக்களிடம் உண்மை சொல்லத் தயங்கியது ஏன்... ஐ.எஸ்.ஐ.எஸ் சிந்தனையைப் பின்பற்றுவர்களை விடக் கூடாது. காவல்துறையில் குறைகள் இருக்கின்றன. உளவுத்துறை ஜமேஷா முபின் பெயரைக் குறிப்பிட்டு எச்சரித்தும், கோட்டைவிட்டிருக்கிறோம். அலர்ட் என்பதைப் பொத்தம் பொதுவாகச் சொல்கிறார்கள். அதை எப்படி ஏற்க முடியும்?

கோவை கார் வெடிப்பு
கோவை கார் வெடிப்பு

செப்டம்பர் வரை கோவையில் உளவுத்துறைக்குத் தனி உயரதிகாரி இல்லை. காவல்துறையில் நிறைய பணிச்சுமைகள் உள்ளன. காவல்துறையில் அனைவரையும் குற்றம்சாட்டவில்லை. முடிவு எடுக்கவேண்டிய அதிகாரிகள்தான் சிறப்பாகச் செயல்படவில்லை” என்றார்.