கோவை பாஜக அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அந்தக் கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை, “இலங்கையில் நிலைமை மோசமாக இருக்கிறது. இலங்கைக்கு அண்டை நாடு என்கிற அடிப்படையிலும், தமிழக மக்களின் நலன் கருதியும் உதவி செய்கிறோம். இங்குள்ளவர்கள் இலங்கையைவைத்து அரசியல் செய்துவருகிறார்கள்.

இலங்கையில் ஏற்பட்ட புண்ணுக்கு இந்தியா மருந்து கொடுத்துவருகிறது. அங்கிருக்கும் தமிழர்களின் எண்ணிக்கை குறைந்துகொண்டேயிருக்கிறது. யாழ்ப்பாணம் தமிழர்கள் நலமாக இருக்க தொழில் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
தமிழ்நாட்டில் இந்தியைத் திணிக்கக் கூடாது, என்பதுதான் தமிழ்நாட்டு பாஜக-வின் நிலைப்பாடு” என்றவர், இரண்டு பாஜக எம்எல்ஏ-க்களைத் தூக்குவோம் என திமுக தருமபுரி எம்.பி செந்தில் சொன்ன கருத்துக்கு, “ஜனநாயகத்துக்கு எதிரான கட்சியில் சாதாரணத் தொண்டர்கள் சேர்வதே கடினம்.

திமுக-வில் இணைவது தற்கொலைக்குச் சமம். பாஜக சித்தாந்தத்தால் ஈர்க்கப்பட்ட யாரும் வேறு கட்சிக்குப் போக மாட்டார்கள். காங்கிரஸ் அழிவதுபோல் திமுக-வும் அழியும். 10 ஆண்டுகள் கழித்து தமிழகத்தில் திமுக என்ற கட்சி இருக்காது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
காங்கிரஸ் கட்சிக்கு ஏற்பட்ட அதேநிலை திமுக-வுக்கு வரும். பிரசாந்த் கிஷோர் மீண்டும் தமிழ்நாட்டுக்கு வந்து, திமுக-வுடன் ஒப்பந்தம் போட்டு கட்சியை வளர்ப்பார். திருமாவளவனை விவாதத்துக்கு அழைத்தேன். அப்போது அந்தக் கட்சியிலிருந்து ஒரு தம்பி வந்து, ‘நான் விவாதத்துக்கு வருகிறேன்’ என்றார்.

ஆனால் திருமாவளவன், ‘அங்கு யாரும் செல்ல வேண்டாம்’ எனச் சொல்லிவிட்டார். நான் மூன்று புத்தகங்கள் அவருக்கு அனுப்பிவிட்டேன். அங்கிருந்து எதுவும் வரவில்லை. விவாதத்துக்கும் வரவில்லை.
ஆறு மாதங்களுக்கு முன்பே கோவையில் லூலு மால் கட்டுவதற்கான ஆயத்த பணிகளைத் தொடங்கிவிட்டனர். ஆனால், லூலு மால் வருவதற்கு ஏதோ இப்போது ஒப்பந்தம் போட்டதாகச் சொல்லி மக்களை ஏமாற்றுகிறார்கள்.

மின் தட்டுபாடு எதனால் ஏற்படுகிறது என்று அமைச்சரிடம் கேட்டால், ‘நிலக்கிரி தட்டுப்பாடு’ என்கிறார்கள். தமிழ்நாட்டில் மணல் கடத்துபவர், தண்ணீர் லாரி ஓட்டுபவரையெல்லாம் அமைச்சர் ஆக்கினால் இப்படித்தான் பேசுவார்கள்" என்றார்.