Published:Updated:

``1948-ல் இலங்கை செய்த அநீதியை, தாயகம் திரும்பிய தமிழர்களுக்கு ஸ்டாலின் செய்கிறார்” - அண்ணாமலை

அண்ணாமலை

``டேன்டீ நிறுவனத்தைத் தமிழக அரசால் லாபத்தில் இயக்க முடியவில்லை என எழுதிக்கொடுக்கச் சொல்லுங்கள். மத்திய அரசு மூலம் லாபத்தில் நாங்கள் இயக்குவோம்.” - அண்ணாமலை

``1948-ல் இலங்கை செய்த அநீதியை, தாயகம் திரும்பிய தமிழர்களுக்கு ஸ்டாலின் செய்கிறார்” - அண்ணாமலை

``டேன்டீ நிறுவனத்தைத் தமிழக அரசால் லாபத்தில் இயக்க முடியவில்லை என எழுதிக்கொடுக்கச் சொல்லுங்கள். மத்திய அரசு மூலம் லாபத்தில் நாங்கள் இயக்குவோம்.” - அண்ணாமலை

Published:Updated:
அண்ணாமலை

இலங்கையிலிருந்து சொந்த நாட்டுக்குத் திரும்பிய தமிழ் மக்களின் வாழ்வாதாரத்துக்காக 1968-ல் டேன்டீ நிறுவனம் தமிழக அரசால் தொடங்கப்பட்டது. நீலகிரி மற்றும் வால்பாறைப் பகுதிகளில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் அரசு தேயிலைத் தோட்டக் கழகத்தில் பணியாற்றிவருகின்றனர். நஷ்டம் காரணமாக தேயிலைத் தோட்டத்தின் சில பகுதிகளை வனத்துறை வசம் ஒப்படைக்கும் முடிவை தற்போதைய அரசு எடுத்திருக்கிறது. இந்த முடிவுக்கு எதிர்க்கட்சிகள் மற்றும் தொழிற்சங்கங்கள் கடுமையான எதிர்ப்பைப் பதிவுசெய்துவருகின்றன. இந்த நிலையில், தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆதரவாக, நீலகிரி மாவட்டம் கூடலூரில் பா.ஜ.க தரப்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அண்ணாமலை
அண்ணாமலை

ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு பேசிய பாஜக தமிழக மாநிலத் தலைவர் அண்ணாமலை, ``இந்திய வரலாற்றில் மிக மோசமான கொடுமைகளை அனுபவித்த ஒரே மக்களாக தமிழகத் தோட்டத் தொழிலாளர்கள் இருந்துவருகிறார்கள். ஆங்கிலேயர் ஆட்சியின்போது பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனி மூலம் தமிழகத்தின் 10 மாவட்டங்களிலிருந்து இலங்கைக்குத் தோட்ட தொழிலாளர்களாக அழைத்துச்‌ சென்றனர். 1823-லிருந்து இந்தியாவிலிருந்து லட்சக்கணக்கான மக்களை அழைத்துச் சென்று இலங்கையில் தேயிலைத் தோட்டங்களை உருவாக்கினார்கள்.

இலங்கையில் பல கொடுமைகளை அனுபவித்து அந்நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்திய சுமார் 10 லட்சம் மக்களின் குடியுரிமை மற்றும் வாக்குரிமையை 1948-ம் ஆண்டு அப்போதைய இலங்கை அரசு பறித்தது. லால்பகதூர் சாஸ்திரி ஒப்பந்தம் மூலம் கையெழுத்திட்டு 5 லட்சம் மக்களைச் சொந்த நாட்டுக்கு திரும்ப வரவழைத்தார். இந்த மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் டேன்டீ உருவாக்கப்பட்டது. ஆனால், தற்போது நஷ்டத்தைக் காரணம் காட்டி 5 ஆயிரம் ஏக்கர் தோட்டத்தை வனத்துறை வசம் ஒப்படைக்கவிருக்கிறார்கள்.

அண்ணாமலை
அண்ணாமலை

இதன் மூலம் இந்த மக்களை மீண்டும் நிர்க்கதியாக மாற்றப்போகிறது இந்த அரசு. 1948-ல் இலங்கை அரசு செய்த அதே அநீதியை இந்த மக்களுக்கு முதல்வர் ஸ்டாலின் செய்திருக்கிறார். அனைத்து அரசு அலுவலகங்களிலும் டேன்டீயைப் பயன்படுத்த வேண்டும் என அறிவித்தால் போதும்... ஒரே ஆண்டில் இந்த நிறுவனத்தை லாபத்துக்குக் கொண்டு வந்துவிட முடியும். டேன் டீ நிறுவனத்தைத் தமிழக அரசால் லாபத்தில் இயக்க முடியவில்லை என எழுதிக்கொடுக்கச் சொல்லுங்கள். மத்திய அரசு மூலம் லாபத்தில் நாங்கள் இயக்குவோம்" என்றார்.