Published:Updated:

``பாகிஸ்தானும் சீனாவும் வாலைச் சுருட்டிக்கொண்டன... அடுத்து அமெரிக்காதான்" - திருப்பூரில் அண்ணாமலை

அண்ணாமலை

``இதே பாதையில் இந்தியா 10 ஆண்டுகள் பயணம் செய்தால், உலகத்தின் வல்லரசாக மாறிவிடும். இதனால் இந்தியாவின் வளர்ச்சியை சில உலக நாடுகள் குறிவைக்கின்றன.” - அண்ணாமலை

``பாகிஸ்தானும் சீனாவும் வாலைச் சுருட்டிக்கொண்டன... அடுத்து அமெரிக்காதான்" - திருப்பூரில் அண்ணாமலை

``இதே பாதையில் இந்தியா 10 ஆண்டுகள் பயணம் செய்தால், உலகத்தின் வல்லரசாக மாறிவிடும். இதனால் இந்தியாவின் வளர்ச்சியை சில உலக நாடுகள் குறிவைக்கின்றன.” - அண்ணாமலை

Published:Updated:
அண்ணாமலை

மத்திய அரசின் எட்டு ஆண்டுகள் சாதனை விளக்கம் தொடர்பாக, தமிழ்நாடு பாஜக சார்பில் மாநிலம் முழுவதும் மாநாடு நடத்தப்பட்டுவருகிறது. அந்த வகையில் திருப்பூர் மாவட்டம், பல்லடத்தில் பாஜக மாநாடு நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்காக, கடந்த சில வாரங்களாகவே திருப்பூர் பாஜக-வினர் அண்ணாமலையை பள்ளி, கல்லூரிகளில் புரொமோட் செய்யும் பணிகளில் ஈடுபட்டுவந்தனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

நேற்று பிரமாண்டமான மேடை அமைத்து, பல ஆயிரக்கணக்கான மக்களைக் கூட்டியிருந்தனர். நடிகர் விஜயின், ‘தலைவா... தலைவா...’ பாடல் ஒலிக்க அண்ணாமலை என்ட்ரி கொடுத்தார்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

கூட்டத்தில் பேசிய அண்ணாமலை, ``ஒரு கட்சி ஆட்சிக்கு வந்து ஒரு வருடம்தான் முடிந்திருக்கிறது. அப்படியிருந்தும் பாஜக-வுக்கு இவ்வளவு பெரிய கூட்டம் வந்திருக்கிறது என்றால், அரசியல் மாற்றம் வேண்டும் என்பதுதான் காரணம். பாரத பிரதமர் மோடியின் எட்டு ஆண்டு ஆட்சியை ஏற்றுக்கொண்டு, மீண்டும் நல்லாட்சி தொடர வேண்டும் என நினைக்கின்றனர்.

அண்ணாமலை
அண்ணாமலை

கொரோனா தடுப்பூசியில் 200 கோடி டோஸ் என்ற எண்ணிக்கையை இந்தியா எட்டியிருக்கிறது. இதன் காரணமாகத்தான் இன்று 50,000 பேர் வரை இங்கு கூடியிருக்கிறோம். `டிஜிட்டல் இந்தியா’ என்றபோது எதிர்க்கட்சிகள், அது சாத்தியமில்லை என்று கூறின. கடந்த மாதம் மட்டும்10 லட்சம் கோடி ரூபாய் டிஜிட்டல் பரிவர்த்தனை நடந்திருக்கிறது.

தமிழ்நாட்டில் `திராவிட மாடல்’ என்று சொல்பவர்கள் 70 ஆண்டுகளாக குடிசை வீடுகளாகத்தான் வைத்திருந்தனர். மத்திய அரசு கடந்த எட்டு ஆண்டுகளில் தமிழ்நாட்டில் மட்டும் 14 லட்சம் கான்கிரீட் வீடுகளைக் கட்டிக்கொடுத்திருக்கின்றனர். நாடு சுதந்திரமடைந்த 67 ஆண்டுகளில், 2014 வரை மொத்தமாகக் கட்டப்பட்ட கழிப்பறைகள் 5.5 கோடிதான்.

பாஜக மாநாடு
பாஜக மாநாடு

கடந்த எட்டு ஆண்டுகளில் மட்டும் மத்திய பாஜக அரசு 11.5 கோடி கழிப்பறைகளைக் கட்டிக் கொடுத்திருக்கிறது. திமுக தலைவர்கள் தனித் தமிழ்நாடு வேண்டும் என முதல்வரை வைத்துக்கொண்டு பேசுகின்றனர். மோடி எங்கே போனாலும், அவரது தாய்மொழியான குஜராத்தில் பேச மாட்டார்.

யாரைப் பார்த்தாலும், ‘நல்லா இருக்கீங்களா?’ என்றுதான் நலம் விசாரிப்பார். ஐ.நா சபைக்குச் சென்றால்கூட, ‘யாதும் ஊரே யாவரும் கேளீர்’ என்றுதான் சொல்வார். எந்த நேரத்திலும் தமிழ்நாட்டை வளர்த்துக்கொண்டிருக்கிறார். திருப்பூரில் இருக்கும் மேயர் உண்மையில் மேயராக இல்லை. இங்கிருக்கும் திமுக எம்.எல்.ஏ நான்தான் மேயர் என்பதுபோலச் செயல்பட்டுக்கொண்டிருக்கிறார்.

அண்ணாமலை
அண்ணாமலை

இங்கிருக்கும் அமைச்சர், `என் பேச்சைத்தான் கேட்க வேண்டும்; நான்தான் மேயர்’ என்பதுபோலச் செயல்படுகிறார். இவர்கள் மத்திய அரசு கொடுக்கும் திட்டங்களைத் தடுத்து நிறுத்திக்கொண்டிருக்கின்றனர்.

மக்களை அடிப்பதை திமுக அமைச்சர்கள் பொழுதுபோக்காகவே வைத்துள்ளனர். மக்களுக்கு எங்கும் மரியாதை இல்லை. சாதாரண மக்களை அடிப்பதுதான் திராவிட மாடல். சில இடங்களில் பெருச்சாளி இங்கேயும் அங்கேயும் ஓடும். அப்படிப்பட்ட ஒருவர்தான் தருமபுரி எம்.பி. 2,000 ஆண்டுகளுக்கு முன்பிருந்து பூமித் தாய்க்கு பூஜை போடுவது வழக்கம். அவர் யார் என்றே பலருக்குத் தெரியவில்லை. திராவிட ஆட்சியில் பூஜை போடுவதா என்று பூசாரி அரசு அதிகாரிகளைக் கொச்சைப்படுத்தியிருக்கிறார்.

தருமபுரி எம்.பி
தருமபுரி எம்.பி

இதை நாம் கண்டிக்க வேண்டும். இப்படியேவிட்டால் கோயிலுக்குப் போகக் கூடாது. பொட்டு வைக்கக் கூடாது என்றெல்லாம் சொல்வார்கள். 2024 நாடாளுமன்றத் தேர்தலில், இது போன்று மதத்தை அவமானப்படுத்துபவர்களின் சீட்டைக் கிழித்து அனுப்ப வேண்டும்.

சமீபத்தில் அமைச்சர் மூர்த்தி, 'அண்ணன் உதயநிதி நீங்க நடிச்ச படம் `கெத்து.’ நீங்கதான் தமிழ்நாட்டின் சொத்து.' என்று பேசுகிறார். வட இந்தியாவிலிருந்து எந்த நிறுவனத்தையும் உள்ளே விட மாட்டோம் என்று மூர்த்தி சொல்கிறார். லூலூ மால் என்ன வடுகபட்டியிலிருந்து வந்ததா... சிறு, குறு தொழிலை அழிப்பதால் நாங்கள் லூலூ மால் வேண்டாம் என்கிறோம்.

உதயநிதி
உதயநிதி

'இளங்கோவடிகள் எழுதியது சிலப்பதிகாரம். அண்ணன் உதயநிதி எழுதியது செங்கல்லதிகாரம்' என அமைச்சர் நாசர் சொல்கிறார். உதயநிதி பிறப்பதற்கு முன்பே எம்.எல்.ஏ-வாக இருந்த அமைச்சர் ஒருவர், 'ராஜராஜ சோழனுக்கும், ராஜேந்திர சோழனுக்கும் துணை நின்றதுபோல தளபதிக்கு உதய் துணை நிற்பார்' என்கிறார்.

எதற்கு இந்தப் பொழப்பு... உதயநிதிக்கு என்ன பட்டம் கொடுப்பது என்பதில்தான் இவர்கள் போட்டி போடுகின்றனர். தமிழ்நாட்டில் எவ்வளவு பிரச்னைகள் இருக்கின்றன... கள்ளக்குறிச்சி பிரச்னையைத் தடுத்திருக்கவேண்டிய டி.ஜி.பி., சைக்கிள் ஓட்டிக்கொண்டிருக்கிறார். உயிரிழந்த மாணவியின் குடும்பத்தின் கோரிக்கைக்கும்,

கள்ளக்குறிச்சி
கள்ளக்குறிச்சி

போராட்டத்துக்கும் பதில் சொல்ல முடியாமல் முதல்வர் செஸ் போட்டிக்கான படப்பிடிப்பில் இருக்கிறார். ஊழலற்ற ஆட்சியைக் கொடுப்போம் எனத் தேர்தல் வாக்குறுதி கொடுத்தனர். இன்று 15 மாதங்களில் மின்சாரத்தில் தொடங்கி ஸ்வீட் பாக்ஸ் வரை ஏராளமான ஊழல்கள் நடந்திருக்கின்றன.

நகரத்தில் யாராவது தங்கள் நிலத்தைப் பார்க்காமல் விட்டுவிட்டால் ஜி ஸ்கொயர் நிறுவனம் பட்டா போட்டுவிடும். பாஜக அதைப் பற்றி பேசிய பிறகு, அந்த நிறுவனம் குறித்து எந்த விளம்பரமும் வருவதில்லை. ஜி ஸ்கொயர் என்ற பெயரை மாற்றியிருக்கின்றனர். இது குறித்து வருகின்ற நாள்களில் பேசுவோம்.

அண்ணாமலை
அண்ணாமலை

போலி பாஸ்போர்ட்டுகளை சமூக விரோதிகளுக்குக் கொடுத்து ஊழலில் ஈடுபட்டுள்ளனர். அடிக்கடி வீரவசனம் பேசும், அறநிலையத்துறை அமைச்சரை கடந்த 15 நாள்களாக எங்கும் காணவில்லை. போகும் இடத்திலெல்லாம் மக்கள் அவரிடம் கேள்வி கேட்கத் தொடங்கிவிட்டனர்.

2024 நாடாளுமன்றத் தேர்தலில் 400 எம்.பி-க்களுடன் நாம் வெற்றிபெற்று மோடி ஜி அமர வேண்டும். மெஜாரிட்டிக்கு 273 எம்.பி போதுமே எனக் கேட்கலாம். இந்த அமெரிக்காகாரனையெல்லாம் மிரட்ட வேண்டும். இதே பாதையில் இந்தியா 10 ஆண்டுகள் பயணம் செய்தால், உலகத்தின் வல்லரசாக மாறிவிடும். இதனால் இந்தியாவின் வளர்ச்சியை சில உலக நாடுகள் குறிவைக்கின்றன. 303 எம்.பி-க்கள் கொடுத்ததற்கே பாகிஸ்தானும், சீனாவும் வாலைச் சுருட்டிக்கொண்டிருக்கின்றன.

பாஜக மாநாடு
பாஜக மாநாடு

எட்டு ஆண்டுகளாக எங்கேயும் குண்டு வெடிக்கவில்லை. வெடித்தால் அந்த நாடே இருக்காது. மோடி என்ற புதிய மந்திரச்சொல்தான் அந்த தைரியத்தை கொடுத்திருக்கிறது. 70 ஆண்டுக்காலமாக இருக்கும் திமுக, சாலையில் பாஜக கட்டும் கொடிகளை எடுத்துச் செல்கின்றனர். அவர்கள் கண்களில் தோல்வி பயம் தெரிகிறது. தமிழ்நாட்டு மக்களுக்குப் பிரச்னை என்றால் முதலில் பாஜக குரல்தான் ஒலிக்கும்" என்றார்