காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பிப்ரவரி 10-ம் தேதி தனது ட்விட்டரில், ``எங்கள் ஒன்றியத்தில் பலமுள்ளது. நமது ஒன்றியத்தில் வலிமை உள்ளது. நமது கலாசாரங்களின் ஒன்றியம். பன்முகத்தன்மைகொண்டது நமது ஒன்றியம். மொழிகளின் ஒன்றியம். நமது மக்கள் ஒன்றியம். நமது மாநிலங்களின் ஒன்றியம். காஷ்மீர் முதல் கேரளா வரை. குஜராத்திலிருந்து மேற்கு வங்கம் வரை, இந்தியா அதன் அனைத்து வண்ணங்களிலும் அழகாக இருக்கிறது. இந்தியாவின் ஆன்மாவை அவமதிக்காதீர்கள்" எனப் பதிவிட்டிருந்தார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
அருணாச்சலப் பிரதேசத்தை சீனா உரிமை கோரிவரும் இந்த நிலையில், ``குஜராத் முதல் மேற்கு வங்கம் வரை அதன் அனைத்து வண்ணங்களிலும் அழகாக இருக்கிறது" என ட்விட்டரில் பதிவிட்டதற்காக அவர்மீது வழக்கு பதியவிருப்பதாகக் கூறப்படுகிறது. ராகுல் காந்தியின் ட்வீட் அஸ்ஸாம், திரிபுரா, மணிப்பூர் முதலமைச்சர்களிடமிருந்து கடுமையான எதிர்வினைகளைப் பெற்றிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
ராகுல் காந்தி வேண்டுமென்றே வடகிழக்குப் பகுதியை புறக்கணித்ததாகவும், அதன் மூலம் அருணாச்சலப் பிரதேசத்துக்கான சீனாவின் கோரிக்கையை அவர் ஏற்றுக்கொண்டதாகவும், பா.ஜ.க உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்தவர்கள் கருத்து தெரிவித்துவருகின்றனர்.
இந்த நிலையில், ராகுல் காந்திமீது அஸ்ஸாம் மாநில பா.ஜ.க அரசு தேசத்துரோக வழக்கு பதியவிருப்பதாக ஏ.என்.ஐ செய்தி நிறுவனம் தகவல் தெரிவித்திருக்கிறது.