Published:Updated:

வீராங்கனைகளின் பாலியல் புகார்: "வெட்கக்கேடானது; பாஜக தன்னுடைய தலைவர்களைப் பாதுகாக்கிறது"- கெஜ்ரிவால்

அரவிந்த் கெஜ்ரிவால்

``ஹரியானா அமைச்சர் முதல் இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் வரை அனைவருமே கடுமையான குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகியிருக்கின்றனர்." - அரவிந்த் கெஜ்ரிவால்

வீராங்கனைகளின் பாலியல் புகார்: "வெட்கக்கேடானது; பாஜக தன்னுடைய தலைவர்களைப் பாதுகாக்கிறது"- கெஜ்ரிவால்

``ஹரியானா அமைச்சர் முதல் இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் வரை அனைவருமே கடுமையான குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகியிருக்கின்றனர்." - அரவிந்த் கெஜ்ரிவால்

Published:Updated:
அரவிந்த் கெஜ்ரிவால்

இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங், பல தேசியப் பயிற்சியாளர்களால், மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாக, மல்யுத்த வீராங்கனைகள் வினேஷ் போகத், பஜ்ரங் புனியா உட்பட பலர் டெல்லி ஜந்தர்மந்தரில் மூன்று நாள்களாகப் போராட்டம் நடத்திவருகின்றனர். ஆனால், இந்தக் குற்றச்சாட்டை மறுத்த பிரிஜ் பூஷன் சரண், ``10 ஆண்டுகளாக கூட்டமைப்புடன் எந்தப் பிரச்னையும் இல்லையா... புதிய விதிமுறைகள் கொண்டுவரும்போது இப்படியான பிரச்னைகள் வரும்" என்று கூறியிருந்தார்.

இந்திய மல்யுத்த வீரர், வீராங்கனைகள் போராட்டம்
இந்திய மல்யுத்த வீரர், வீராங்கனைகள் போராட்டம்

அதைத் தொடர்ந்து, போராட்டக் களத்துக்கு கம்யூனிஸ்ட் தலைவர் பிருந்தா காரத் சென்றபோது, `இதை அரசியலாக்காதீர்கள்’ என வீரர், வீராங்கனைகள் அவரைக் கேட்டுக்கொண்டனர். இந்தப் போராட்டம் பெரிதளவில் வெளியில் தெரியவரவே, 72 மணி நேரத்துக்குள் பதிலளிக்க வேண்டும் என்று இந்திய மல்யுத்த கூட்டமைப்புக்கு விளையாட்டு அமைச்சகம் உத்தரவிட்டது.

இதற்கிடையில், மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாகூர் போராட்டக்காரர்களிடம் நேற்று பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அவர்கள், `பிரிஜ் பூஷன் சரண் சிங் உடனடியாக பதவிநீக்கம் செய்யப்பட வேண்டும்’ எனக் கோரிக்கைவைத்தனர். இந்த நிலையில், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், பா.ஜ.க தங்கள் தலைவர்களைப் பாதுகாப்பதாக விமர்சித்திருக்கிறார்.

அரவிந்த் கெஜ்ரிவால்
அரவிந்த் கெஜ்ரிவால்

இது குறித்து கெஜ்ரிவால் தன் ட்விட்டர் பக்கத்தில், ``ஹரியானா அமைச்சர் முதல் இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் வரை அனைவருமே கடுமையான குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகியிருக்கின்றனர். ஆனால், ராஜினாமாவோ அல்லது எந்தவொரு நடவடிக்கையோ இல்லை. இந்தக் கட்சியும்(பாஜக) அதன் அரசாங்கமும், தங்கள் தலைவர்களைப் பாதுகாப்பதில் மும்முரமாக இருக்கின்றன. இது மிகவும் வெட்கக்கேடானது" எனப் பதிவிட்டிருக்கிறார்.

பிரிஜ் பூஷன் சரண் சிங்
பிரிஜ் பூஷன் சரண் சிங்
ட்விட்டர்

தொடர்ந்து ஆறாவது முறையாக மக்களவை உறுப்பினராகப் பதவிவகிக்கும் பிரிஜ் பூஷன் சரண் சிங், 2011 முதல் இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவராகப் பதவிவகிக்கிறார். பாபர் மசூதி இடிப்பு வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்களில் இவரும் ஒருவர். இவர், 2014-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலுக்கு முன்பு பா.ஜ.க-வில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.