Published:Updated:

``ஆளுநர் ரவியை 'போய்யா' எனச் சொல்கிறார்... மிகவும் தவறு!" - பொன்முடிக்கு குஷ்பு கண்டனம்

குஷ்பு

`ஆளுநர் வெளியே போகும்போது பொன்முடி 'போய்யா' எனக் கைகாட்டுகிறார். பொன்முடி செய்தது மிகப்பெரிய தவறு.' - குஷ்பு

``ஆளுநர் ரவியை 'போய்யா' எனச் சொல்கிறார்... மிகவும் தவறு!" - பொன்முடிக்கு குஷ்பு கண்டனம்

`ஆளுநர் வெளியே போகும்போது பொன்முடி 'போய்யா' எனக் கைகாட்டுகிறார். பொன்முடி செய்தது மிகப்பெரிய தவறு.' - குஷ்பு

Published:Updated:
குஷ்பு

கன்னியாகுமரியில் விவேகானந்தர் நல்லோர் வட்டம் சார்பில் நடந்த கருத்தரங்கில் கலந்துகொள்ள வந்த பா.ஜ.க தேசிய செயற்குழு உறுப்பினரும், நடிகையுமான குஷ்பு செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், ``நாம் சுவாமி விவேகானந்தரைப் பின்பற்றவில்லை எனச் சொன்னாலும் ஏதோ ஒரு விஷயத்தில் அவரைப் பின்பற்றிக்கொண்டுதான் இருக்கிறோம். விவேகானந்தர் என்ன சொல்லிக்கொடுத்தாரோ அந்த விஷயங்களை மட்டும்தான் நாம் இன்று பேசிக்கொண்டிருக்கிறோம். எதிர்க்கட்சியினர் இந்துத்துவாவைத் தவறாகப் புரிந்துகொண்டிருக்கிறார்கள். தேர்தல் நேரத்தில் மட்டும்தான் எதிர்க்கட்சியினருக்கு பூநூல், கோயிலெல்லாம் ஞாபகத்துக்கு வரும். அப்போதுதான் தலைக்கு டர்பன் கட்டுவார்கள், சாதியை வெளிப்படுத்துவார்கள்.

குஷ்பு
குஷ்பு

இந்துத்துவத்துக்கும், இந்து மதத்துக்கும் எதிராகப் பேசுபவர்களுக்குத் தேர்தல் நேரத்தில் மட்டும் மதம் ஞாபகத்துக்கு வரும். யாருமே கோயிலுக்குப் போகக் கூடாது என்றவர்கள், கோயில் கோயிலாகப் போகிறார்கள். கையில் காப்பு கட்டுகிறார்கள். மதத்தை ஓட்டுவங்கியாக மாற்ற அந்த நேரத்தில் மக்களை முட்டாளாக்குகிறார்கள். மக்களின் ஓட்டுகள் வேண்டும் என்பதற்காக, மதத்தை அவர்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்கிறார்கள்.

ஆளுநர் விஷயத்தில் எல்லாமே தவறாகத்தான் இருக்கின்றன. நீங்கள் ஓர் அரசாங்கம் நடத்துகிறீர்கள், அதற்கு மேல் ஆளுநர் இருக்கிறார். அந்த அரசாங்கத்தை மேற்பார்வையிடுவதற்கும், தவறு நடக்கும்போது தட்டிக்கேட்கும் ஆளாகவும் ஆளுநர் இருக்கிறார். ஆளுநர் வெளியே போகும்போது பொன்முடி 'போய்யா' எனக் கைகாட்டுகிறார். பொன்முடி செய்தது மிகப்பெரிய தவறு. இதற்கு முன்பு பெண்கள் பஸ்ஸில் ஓசியில் போவதாக பொன்முடி சொன்னார்.

ஆளுநர் ரவி
ஆளுநர் ரவி

`தமிழகம், தமிழ்நாடு இரண்டுக்குமே வித்தியாசமில்லை’ என காங்கிரஸ் மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி சொல்லியிருக்கிறார். அவருக்கு எதிராக ஏன் கோஷம் போடவில்லை... காங்கிரஸ் ஒரு காமெடி பீஸ். அதை யாரும் மதிக்க மாட்டார்கள் என்பதால், அது பற்றிப் பேசுவதில்லை. ஆளுநருக்கு எதிராகக் கோஷம்போடும்போது மக்கள் பார்ப்பார்கள் என்பதற்காக அப்படிச் செய்கிறார்கள்" என்றார்.