Published:Updated:

அரசு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட கீதா ஜீவன்; முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைதுசெய்யப்பட்ட பாஜக-வினர்!

அமைச்சர் கீதா ஜீவன் பங்கேற்ற அரசு நிகழ்ச்சி

”தண்ணீரில் மிதக்கக்கூடிய மற்றும் அழுகிய முட்டைகளை திருப்பி அனுப்புவதற்காக ஒதுக்கி வைக்கப்பட்டிருப்பதை பா.ஜ.க-வினர் புகைப்படம் எடுத்து தவறாகப் பரப்பி வருகிறார்கள்." - அமைச்சர் கீதா ஜீவன்

அரசு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட கீதா ஜீவன்; முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைதுசெய்யப்பட்ட பாஜக-வினர்!

”தண்ணீரில் மிதக்கக்கூடிய மற்றும் அழுகிய முட்டைகளை திருப்பி அனுப்புவதற்காக ஒதுக்கி வைக்கப்பட்டிருப்பதை பா.ஜ.க-வினர் புகைப்படம் எடுத்து தவறாகப் பரப்பி வருகிறார்கள்." - அமைச்சர் கீதா ஜீவன்

Published:Updated:
அமைச்சர் கீதா ஜீவன் பங்கேற்ற அரசு நிகழ்ச்சி

நெல்லை மாவட்டத்தில் மானூர் மற்றும் மேலப்பாளையம் பகுதியில் நடந்த சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சியில் அமைச்சர் கீதா ஜீவன் கலந்துகொண்டு 75 கர்ப்பிணிகளுக்கு சீர்வரிசைப் பொருள்களை வழங்கினார்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பா.ஜ.க-வினர் கைது
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பா.ஜ.க-வினர் கைது

மானூர் நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த அவருக்கு பா.ஜ.க-வினர் கறுப்புக் கொடி காட்ட இருப்பதாக தகவல் பரவியதால் போலீஸார் குவிக்கப்பட்டனர். அத்துடன், பா.ஜ.க நெல்லை வடக்கு மாவட்ட தலைவர் தயாசங்கர், மானூர் ஒன்றிய தலைவர் சுப்புதுரை உள்ளிட்ட 50 பேரை போலீஸார் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த நிலையில் நிகழ்ச்சியை முடித்துக் கொண்ட அமைச்சர் கீதா ஜீவன் செய்தியாளர்களிடம் பேசுகையில், ”தமிழ்நாடு முழுவதும் அங்கன்வாடிகளில் 36 லட்சம் குழந்தைகள் பயில்கிறார்கள். அவர்களுக்கு உட்டச்சத்து குறைபாடு இருக்கிறதா என்பதைக் கண்டுபிடிக்க முதல்வர் உத்தரவிட்டிருந்தார். அதன்படி பரிசோதனை செய்ததில் 9 லட்சம் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

செய்தியாளர் சந்திப்பு
செய்தியாளர் சந்திப்பு

அந்தக் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து கிடைக்கும் வகையில் சத்தான உணவு வழங்குவதற்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட குழந்தைகள் நடுத்தரமான பாதிப்பு, கடுமையான பாதிப்பு என இரு வகைகளாகப் பிரித்து அதற்கு ஏற்ற வகையில், இரண்டு மாத காலத்துக்குச் சிறப்பு இனிப்பு வழங்கும் திட்டத்தை மக்கள் நல்வாழ்வுத் துறை மூலம் செயல்படுத்த உள்ளோம்.

தங்களின் குழந்தைகளுக்கு காதுகேளாமை, இதயத்தில் பிரச்னை ஆகிய குறைபாடுகள் இருப்பதை தாய்மார்களே கண்டுபிடிக்காத நிலையில், அத்தகைய 45,000 குழந்தைகளுக்கு மக்கள் நல்வாழ்வுத்துறை மூலமாக உயரிய சிகிச்சை அளிக்கப்படுகிறது.

அமைச்சர் கீதா ஜீவன்
அமைச்சர் கீதா ஜீவன்

சத்துணவுத் திட்டத்தில் அழுகிய முட்டை எந்த இடத்திலும் குழந்தைகளுக்கு விநியோகம் செய்யப்படவில்லை. தண்ணீரில் மிதக்கக்கூடிய மற்றும் அழுகிய முட்டைகளை திருப்பி அனுப்புவதற்காக ஒதுக்கி வைக்கப்பட்டிருப்பதை பா.ஜ.க-வினர் புகைப்படம் எடுத்து தவறாகப் பரப்பி வருகிறார்கள். கெட்டுப்போன முட்டைகளை எந்த இடத்திலும் குழந்தைகளுக்கு வழங்கப்படவில்லை” என்று அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்தார்.