Election bannerElection banner
Published:Updated:

புதுச்சேரி: வேளாண் சட்டங்களுக்கு ஆதரவான பிரசாரம்... பா.ஜ.க-வினரை விரட்டிய கிராம மக்கள்!

பிரசாரத்தில் பா.ஜ.க-வினர்
பிரசாரத்தில் பா.ஜ.க-வினர்

விவசாயிகளுக்கு எதிரான சட்டங்களை நியாயப்படுத்தி, பா.ஜ.க-வினர் பிரசாரம் செய்ததைக் கண்டித்து அவர்களை விரட்டியதுடன், வாகனத்தின் மீது கல்வீச முயன்றனர்.

புதுச்சேரியில் தேர்தல் பிரசாரத்தை பா.ஜ.க-தான் முதலில் தொடங்கியுள்ளது. காலாப்பட்டு சட்டமன்றத் தொகுதியின் கனகச் செட்டிகுளம் சுந்தர மூர்த்தி விநாயகர் கோயில் அருகிலிருந்து பிரசாரத்தை பா.ஜ.க-வினர் நேற்று காலை தொடங்கினார்கள்.

பிரசாரத்தில் பா.ஜ.க-வினர்
பிரசாரத்தில் பா.ஜ.க-வினர்

`காண்போம் இனி நல்லாட்சி... காங்கிரஸ் இல்லா புதுச்சேரி’ எனும் கோஷத்தை முன்னிறுத்தி மேற்கொள்ளப்படும் பிரசாரத்தை பாரதிய ஜனதா மேலிடப் பொறுப்பாளர் நிர்மல் குமார் சுரானா தொடங்கிவைத்தார். பா.ஜ.க மாநிலத் தலைவர் சாமிநாதன் மற்றும் நிர்வாகிகள் தினமும் மூன்று தொகுதிகள் என மினி வேனில் சென்று பிரசாரத்தில் பங்கேற்கின்றனர்.

புதுச்சேரி: `மதவாத சக்திகளை முறியடிக்க வேண்டும்!’ - வேளாண் சட்ட நகலைக் கிழித்த நாராயணசாமி

திருபுவனை கிராமத்தில் பெரிய பேட் என்ற பகுதிக்கு பிரசார வாகனம் சென்றபோது அங்குள்ள இளைஞர்கள் அவர்களை விரட்டியனுப்பினார்கள். தங்கள் பகுதியில் பிரசாரம் செய்யக் கூடாது, அமைதியாகச் செல்ல வேண்டும் எனக் கூறி பா.ஜ.க-வினரை விரட்டியதோடு, அவர்கள் கொண்டு வந்த பிரசார நோட்டீஸைக் கிழித்து எறிந்தனர்.

பிரசார நோட்டீஸ் கிழிப்பு
பிரசார நோட்டீஸ் கிழிப்பு

மேலும், பா.ஜ.க தலைவர் சாமிநாதன் மற்றும் நிர்வாகிகளுடன் வாக்குவாதம் செய்தனர். விவசாயிகளுக்கு எதிரான சட்டங்களை நியாயப்படுத்தி பா.ஜ.க-வினர் பிரசாரம் செய்ததைக் கண்டித்து அவர்களை விரட்டியதுடன், வாகனத்தின் மீது கல்வீச முயன்றனர். இதனால் அங்கு பதற்றமான சூழல் ஏற்பட பாதுகாப்பு பணியிலிருந்த போலீஸார் அவர்களை சமாதானப்படுத்தி பா.ஜ.க-வினரை பாதுகாப்பாக அந்தப் பகுதியிலிருந்து வெளியே அனுப்பினார்கள். இதன் காரணமாக அந்தப் பகுதி சிறிது நேரம் பரபரப்பாகக் காணப்பட்டது!

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு