Published:Updated:

நுபுர் ஷர்மா: ``மத்திய பாஜக அரசு வெறுப்பு நிறைந்த சூழலை உருவாக்கி வருகிறது!" - ராகுல் காந்தி

ராகுல் காந்தி - மோடி

மத்தியில் பா.ஜ.க தலைமையிலான அரசு கோபம், வெறுப்பு நிறைந்த சூழலை உருவாக்கி வருகிறது என நுபுர் ஷர்மா விவகாரம் தொடர்பாக ராகுல் காந்தி தெரிவித்திருக்கிறார்.

நுபுர் ஷர்மா: ``மத்திய பாஜக அரசு வெறுப்பு நிறைந்த சூழலை உருவாக்கி வருகிறது!" - ராகுல் காந்தி

மத்தியில் பா.ஜ.க தலைமையிலான அரசு கோபம், வெறுப்பு நிறைந்த சூழலை உருவாக்கி வருகிறது என நுபுர் ஷர்மா விவகாரம் தொடர்பாக ராகுல் காந்தி தெரிவித்திருக்கிறார்.

Published:Updated:
ராகுல் காந்தி - மோடி

நுபுர் ஷர்மா, தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியில், நபிகள் நாயகம் குறித்து சர்ச்சைக்குறிய வகையில் கருத்து தெரிவித்தது உலகளவில் இஸ்லாமியர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதன் தொடர்ச்சியாக நுபுர் ஷர்மாவைக் கைதுசெய்யக்கோரி டெல்லி, பீகார், ஜார்கண்ட் உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் போராட்டங்கள் வெடித்தன.

இந்த விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றம் இன்று, ``ஜனநாயகம் அனைவருக்குமே பேச்சுரிமை வழங்கியுள்ளது. ஆனால், அதற்காகவெல்லாம் ஜனநாயகத்தின் வரம்பை மீற அனுமதிக்க முடியாது. நுபுர் ஷர்மா கருத்து ஒட்டுமொத்த நாட்டையும் தீக்கிரையாக்கிவிட்டது'' என நுபுர் ஷர்மாவுக்கு கண்டனம் தெரிவித்தது.

நுபுர் ஷர்மா
நுபுர் ஷர்மா

இந்த நிலையில், கேரளாவின் வயநாட்டில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, ``உச்ச நீதிமன்றம் கூறியிருப்பது சரியான ஒன்று. ஆனால், நாட்டில் தற்போது உருவாகியிருக்கும் நிலையானது, கருத்துக் கூறிய அந்த ஒரு நபரால் உருவானதல்ல, மத்தியில் ஆளும் அரசு அந்த சுழலை உருவாக்கி வருகிறது.

பிரதமர், உள்துறை அமைச்சர் மற்றும் பா.ஜ.க, ஆர்.எஸ்.எஸ் அமைப்பு மூலமாக இது மாதிரியான மோசமான சூழல் உருவாக்கப்படுகிறது. மத்தியில் பா.ஜ.க தலைமையிலான அரசு கோபம், வெறுப்பு நிறைந்த சூழலை உருவாக்கி வருகிறது. இப்படி ஒரு மோசமான சூழலை உருவாக்குவது தேசத்துக்கு விரோதமான செயல். இது முற்றிலும் தவறானது மற்றும் இது ஒரு சோகத்துக்கு வழிவகுக்கும். வயநாட்டில் எம்.பி அலுவலகம் தாக்கப்பட்டது துரதிஸ்டவசமானது'' என்றார்.