Published:Updated:

குடியரசுத் தலைவர் தேர்தல்: அரசியல் கட்சிகளுடன் பேச்சுவார்த்தையைத் தொடங்கிய நட்டா, ராஜ்நாத் சிங்!

ஜே.பி.நட்டா - ராஜ்நாத் சிங்

பா.ஜ.க-வின் மூத்த தலைவர்களான ஜே.பி.நட்டா, மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோர் விரைவில் மற்ற அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சை உறுப்பினர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தத் தொடங்குவார்கள் என்றும் பா.ஜ.க தலைமை தகவல் தெரிவித்திருக்கிறது.

குடியரசுத் தலைவர் தேர்தல் குறித்து எதிர்க்கட்சிகள் உட்பட பல்வேறு அரசியல் கட்சிகளுடன் ஆலோசனை நடத்த பா.ஜ.க-வின் தலைவர் ஜே.பி.நட்டா, மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோரை பா.ஜ.க மேலிடம் நியமித்திருக்கிறது. குடியரசுத் தலைவர் பதவிக்கு எதிர்க்கட்சி வேட்பாளரை இறுதி செய்ய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, மேற்கு வங்க முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜி ஆகியோரின் நகர்வுகளின் பின்னணியில் எதிர்க்கட்சிகளை அணுகுவதற்கான நடவடிக்கையை பா.ஜ.க முடுக்கிவிட்டிருக்கிறது.

பா.ஜ.க-வின் மூத்த தலைவர்களான ஜே.பி.நட்டா, மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோர் விரைவில் மற்ற அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சை உறுப்பினர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தத் தொடங்குவார்கள் என்றும் பா.ஜ.க தலைமை தகவல் தெரிவித்திருக்கிறது.

பாஜக -மோடி, அமித் ஷா
பாஜக -மோடி, அமித் ஷா

ஆனால் எதிர்க்கட்சிகள், ஆளும் பா.ஜ.க-வுடன் சேர்ந்து வாக்களிக்க சில கட்சிகளை உடைக்க முயலும் தந்திரமாகவே இதைக் கருதுகின்றனர். கடந்த 2017-ம் ஆண்டு குடியரசுத் தலைவர் தேர்தலின்போது, ​​பா.ஜ.க ஏற்கெனவே ராம்நாத் கோவிந்தின் தேர்வை இறுதிசெய்து, கடைசி நேரத்தில் ஆதரவு கேட்டு தங்களை அணுகியதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஜே.பி.நட்டா - ராஜ்நாத் சிங்
ஜே.பி.நட்டா - ராஜ்நாத் சிங்

எனவே, அரசியல் கட்சிகளின் தலைவர்களுடன் நல்ல உறவைப் பேணிவருபவரும், 2017 குடியரசுத் தலைவர் தேர்தலின்போது எதிர்க்கட்சிகளுடன் விவாதிக்க பா.ஜ.க-வின் குழுவில் ஒரு பகுதியாக இருந்தவருமான மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் இந்த முறையும் எதிர்க்கட்சிகளுடன் விவாதிக்க நியமிக்கப்பட்டிருக்கிறார். விரைவில் இருவரும் அரசியல் கட்சியினருடன் பேச்சுவார்தையைத் தொடங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism