Published:Updated:

`ஒரு நபரைக்கூட வெறும் வயிற்றுடன் நாங்கள் உறங்கவிடவில்லை!' - பிரசாரத்தில் பிரதமர் மோடி

பிரதமர் மோடி

``காங்கிரஸ் கட்சி கொரோனா காலத்தில் தடுப்பூசிக்கு எதிராகப் பொய் பிரசாரம் செய்தது" எனப் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

பிப்ரவரி மாதம் 14-ம் தேதி உத்தரகாண்ட் மாநிலத்தில் தேர்தல் நடைபெறவிருக்கிறது. இதையொட்டி உத்தரகாண்ட் மாநிலம் ருத்ராப்பூரில், பாஜக சார்பில் தேர்தல் பிரசாரக் கூட்டம் இன்று நடைபெற்றது. அதில் பேசிய பிரதமர் மோடி,``100 ஆண்டுகளில் இல்லாத மோசமான சுகாதார நெருக்கடியான, கொரோனா தொற்றை எதிர்கொண்டபோதிலும், பாஜக அரசாங்கம் மாநிலத்தில் வளர்ச்சிப் பணிகளை மேற்கொண்டது. பெருந்தொற்றுக் காலத்தில், ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு நபரைக்கூட வெறும் வயிற்றுடன் நாங்கள் உறங்கவிடவில்லை.

மோடி - ராகுல் காந்தி
மோடி - ராகுல் காந்தி

கொரோனா காலத்தில் தடுப்பூசிக்கு எதிராகப் பொய்ப் பிரசாரம் செய்தது காங்கிரஸ். மறைந்த முன்னாள் தலைமைத் தளபதி பிபின் ராவத் பற்றி காங்கிரஸ் கட்சி அவமதித்துப் பேசியது. வரும் 14-ம் தேதி சட்டபேரவைத் தேர்தலில் அந்தக் கட்சிக்குத் தகுந்த பதிலடி கொடுக்க வேண்டும்" எனத் தெரிவித்தார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!