Published:Updated:

``ஜம்மு காஷ்மீரில் தேர்தல் நடத்த பாஜக-வினருக்கு தைரியம் இல்லை!" - உமர் அப்துல்லா சவால்

உமர் அப்துல்லா

``தங்களின் தைரியத்தை அவர்கள்(பா.ஜ.க) கண்டுபிடித்து போட்டிக்கு வரட்டும், பிறகு மக்கள் எந்தப் பக்கம் நிற்கிறார்கள் என்று பார்ப்போம்." - உமர் அப்துல்லா

Published:Updated:

``ஜம்மு காஷ்மீரில் தேர்தல் நடத்த பாஜக-வினருக்கு தைரியம் இல்லை!" - உமர் அப்துல்லா சவால்

``தங்களின் தைரியத்தை அவர்கள்(பா.ஜ.க) கண்டுபிடித்து போட்டிக்கு வரட்டும், பிறகு மக்கள் எந்தப் பக்கம் நிற்கிறார்கள் என்று பார்ப்போம்." - உமர் அப்துல்லா

உமர் அப்துல்லா

2019-ம் ஆண்டில் ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கான சிறப்பு அந்தஸ்து (அரசியலமைப்பு பிரிவு 370), மத்திய பா.ஜ.க அரசால் நீக்கப்பட்டு, இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்ட பிறகு இன்னும் அங்கு சட்டப்பேரவைத்த தேர்தல் நடைபெறவில்லை. இதுவரையில் ஆளுநர் ஆட்சிதான் அங்கு நடைபெற்றுவருகிறது.

ஜம்மு - காஷ்மீர்
ஜம்மு - காஷ்மீர்

இப்படியிருக்க அடுத்தாண்டு (2023) சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறும் எனக் கூறப்படும் நிலையில், மக்கள் மத்தியில் அதன்மீதான எதிர்பார்ப்புகள் அதிகரித்திருக்கின்றன. அரசியல் கட்சிகளும் அதற்கு ஆயத்தமாகிவிட்டன. இதற்கிடையில் மத்திய பா.ஜ.க அரசோ, ஜம்மு காஷ்மீரில் குறைந்தபட்சம் ஓராண்டு வசித்தவர்கள் ஓட்டுப் போடும் உரிமையைப் பெறலாம் எனக் கூறியது. இதற்கு மெஹபூபா முஃப்தி, ஃபரூக் அப்துல்லா, உமர் அப்துல்லா ஆகிய முன்னாள் முதல்வர்கள் பெரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில், `பா.ஜ.க-வினருக்கு ஜம்மு காஷ்மீரில் தேர்தல் நடத்த தைரியம் இல்லை' என பா.ஜ.க-வை உமர் அப்துல்லா விமர்சித்திருக்கிறார்.

உமர் அப்துல்லா
உமர் அப்துல்லா

தெற்கு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்திலுள்ள பஹல்காமில் இன்று நடந்த தேசிய மாநாடு கட்சி நிகழ்ச்சிக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய உமர் அப்துல்லா, ``எப்போது தேர்தல் வந்தாலும் நாங்கள் பார்த்துக்கொள்வோம். ஆனால், இதைச்சொல்லி நாங்கள் தேர்தலுக்காக யாசகம் செய்யமாட்டோம். பா.ஜ.க-வினர் பயப்படுகிறார்கள். தேர்தலை நடத்த அவர்களுக்குத் தைரியம் இல்லை. தங்களின் தைரியத்தை அவர்கள் கண்டுபிடித்து போட்டிக்கு வரட்டும், பிறகு மக்கள் எந்தப் பக்கம் நிற்கிறார்கள் என்று பார்ப்போம்" எனத் தெரிவித்தார்.