Published:Updated:

``ஆளும் கட்சியின் அடியாளை போல ஆட்சியர் செயல்படக்கூடாது" - காட்டமான பொன்.ராதாகிருஷ்ணன்

பொன்.ராதாகிருஷ்ணன்

தமிழகத்தின் பிற மாவட்டங்களிலும் 'வேணுகோபால் கமிஷன் அறிக்கையை செயல்படுத்த வேண்டும். குமரி மாவட்டத்தில் அதை செயல்படுத்த முடியாது எனக்கூறும் முதல் ஆட்சியராக இப்போதைய கலெக்டர் இருக்கிறார்.' என்றார் பொன்.ராதாகிருஷ்ணன்.

``ஆளும் கட்சியின் அடியாளை போல ஆட்சியர் செயல்படக்கூடாது" - காட்டமான பொன்.ராதாகிருஷ்ணன்

தமிழகத்தின் பிற மாவட்டங்களிலும் 'வேணுகோபால் கமிஷன் அறிக்கையை செயல்படுத்த வேண்டும். குமரி மாவட்டத்தில் அதை செயல்படுத்த முடியாது எனக்கூறும் முதல் ஆட்சியராக இப்போதைய கலெக்டர் இருக்கிறார்.' என்றார் பொன்.ராதாகிருஷ்ணன்.

Published:Updated:
பொன்.ராதாகிருஷ்ணன்

முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், எம்.ஆர்.காந்தி எம்.எல்.ஏ., மாவட்ட தலைவர் தர்மராஜ் ஆகியோர் நாகர்கோவிலில் உள்ள பா.ஜ.க மாவட்ட அலுவலகத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது எம்.எல்.ஏ எம்.ஆர்.காந்தி, பா.ஜ.க மாவட்ட தலைவர் தர்மராஜ் ஆகியோர் கூறுகையில், `1982 மத கலவரத்தின்போது மக்கள் எவ்வளவு துன்பப்பட்டார்கள் என்பதை நான் அறிவோம். அதைத் தொடர்ந்து வேணுகோபால் கமிஷன் ஆய்வு செய்து அறிக்கையில் ஒரு வழிபாட்டுத்தலத்துக்கு அருகே மற்றொரு வழிபாட்டுத்தலம் அமைக்க அனுமதிக்கக்கூடாது என கூறப்பட்டுள்ளது. அதை மீறி மாவட்ட நிர்வாகம் பல வழிபாட்டு தலங்களுக்கு அனுமதி வழங்குவதால் மக்கள் மத்தியில் பயமும், பதற்றமும் ஏற்படுகிறது. வேணுகோபால் கமிஷன் அறிக்கையை மீறி எந்த வழிபாட்டு தலத்துக்கும் அனுமதி வழங்கக்கூடாது. அந்த கமிஷன் ஷரத்துகளை நீர்த்துப்போகச்செய்யும் விதமாக மாவட்ட நிர்வாகம் செயல்படுகிறது. மீண்டும் அதுபோன்ற நிலை ஏற்படக்கூடாது மக்கள் மன அமைதியோடும் நிம்மதியாகவும் இருக்க வேண்டும். எனவே புதிய வழிபாட்டு தலங்களுக்கு அனுமதி வழங்குவதை மாவட்ட நிர்வாகம் நிறுத்த வேண்டும்.

பா.ஜ.க அலுவலகத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பு
பா.ஜ.க அலுவலகத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பு

அமைச்சர் மனோ தங்கராஜ் சிறுபான்மையினரின் வாக்குகள் பா.ஜ.க-வுக்கு சென்றுவிடும் என்பதால் அவர் மீண்டும் ஒரு மதகலவரம் உருவாக்க முயல்கிறார். அதற்காக ஏற்கனவே பிரச்னையில் இருக்கும் இடங்களில் சர்ச் கட்ட கலெக்டரும், எஸ்.பி-யும் ஆளும் கட்சிக்கு ஆதரவாக செயல்படுகிறார்கள். திங்கள் சந்தை புதுவிளையில் ஐகோர்ட்டில் தடை உத்தரவு பெறப்பட்ட பகுதியில் போலீஸ் பாதுகாப்போடு சர்ச் கட்டப்படுகிறது. புத்தளம் பகுதியில் 35 வருடமாக தடை செய்யப்பட்ட இடத்தில் இப்போது வழிபாட்டுதலமாக ஆக்க முயற்சி செய்கிறார்கள். சமூக நலக்கூடம், வீடு என அனுமதி பெற்று சர்ச் நடத்துகிறார்கள்.

இதுபற்றி பலமுறை கலெக்டர், எஸ்.பி-யிடம் புகார் அளித்துள்ளோம். இந்த நிலையில் பழைமையான கோயில்களை புனரமைக்கும்போது அனுமதி பெற வேண்டும் என சொல்கிறார்கள். கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரச்னைக்குரிய இடங்களில் உள்ள 54 சர்ச்சுகளுக்கு புதிதாக அனுமதி கொடுக்கும் முயற்சி நடந்து வருகிறது. அதை எதிர்ப்பவர்களுக்கு நோட்டீஸ் கொடுத்து அவர்களை அழைத்து உங்களுக்கு என்ன பிரச்னை என கலெக்டர் கேட்கிறார். மக்களுக்கு நியாயம் கிடைக்கவில்லை என்பதால் முதல்வரையும், தலைமைச் செயலரையும் சந்திக்க அனுமதி கேட்டு 08.10.2022 அன்று கடிதம் கேட்டிருந்தோம். இதுவரை தகவல் இல்லை. எனவே மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு எம்.எல்.ஏ எம்.ஆர்.காந்தி தலைமையில் டிசம்பர் 11-ம் தேதி சமூக நல்லிணக்க உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்துள்ளோம். எல்லா சமூகத்தினரும் ஒன்றாக சேர வேண்டும். அனைவரும் சமாதானமாகவும், சந்தோசமாகவும் வாழ இந்த உண்ணாவிரதத்தை மேற்கொள்கிறோம்" என்றனர் கூட்டாக .

எம்.ஆர்.காந்தி எம்.எல்.ஏ
எம்.ஆர்.காந்தி எம்.எல்.ஏ

முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறுகையில், "அரசியல் ரீதியாக கட்சியினர் தங்களுக்கு ஓட்டுகிடைப்பதற்காக இதுபோன்று செயல்படுகிறார்கள். ஆனால், மாவட்ட நிர்வாகமும் சேர்ந்து இதுபோன்று செயல்படுவது மிகமட்டகரமான விஷயம். தமிழகத்தின் பிற மாவட்டங்களிலும் வேணுகோபால் கமிஷன் அறிக்கையை செயல்படுத்த வேண்டும். குமரி மாவட்டத்தில் அதை செயல்படுத்த முடியாது எனக்கூறும் முதல் ஆட்சியராக இப்போதைய கலெக்டர் இருக்கிறார். இந்த ஆட்சியர் மூன்று ஆண்டுகளில் மாறிவிடுவார். ஏற்கனவே நடந்த கலவரத்தில் பாதிக்கப்பட்ட வடு தொடர்ந்துகொண்டு இருக்கிறது. ஆளும் கட்சியின் அடியாளை போல மாவட்ட ஆட்சியர் செயல்படக்கூடாது. ஆட்சியரின் நிலைபாடு தனி, அரசியல் வாதிகளின் நிலைபாடு தனியாக இருக்க வேண்டும்.

மாவட்ட அமைச்சருடைய மகனும் இந்த மாவட்டத்தின் நிர்வாகம் எப்படி இருக்க வேண்டும் என தீர்மானிக்கிறார். அமைச்சர், நாகர்கோவில் மகராட்சி மேயர், காவல்துறை கண்காணிப்பாளர், மாவட்ட ஆட்சியாளர் ஆகியோர் கலந்துகொண்ட கூட்டத்தில் அமைச்சரின் மகன் லேப்டாப் வைத்துக்கொண்டு அதிகாரிகளுக்கு இன்ஸ்ட்ரக்‌ஷன் கொடுக்கிறார்" என்றார் காட்டமாக.