Published:Updated:

"குடும்பக் கட்சிகளில்தான் தலைமைக்கு செலக்‌ஷன்... பா.ஜ.கவில் மட்டுமே எலெக்‌ஷன்!" - முரளிதர ராவ்

முரளிதர ராவ்
முரளிதர ராவ்

பா.ஜ.க-வின் தேசியச் செயலாளர்களில் ஒருவரான முரளிதர ராவ் நேற்று சென்னையில் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார்.

பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர்களில் ஒருவரான முரளிதர ராவ் நேற்று சென்னையில் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். அதில் தென்னிந்தியாவில் பா.ஜ.க-வின் எதிர்கால திட்டங்கள் குறித்தும் பேசினார். அதைத் தொடர்ந்து கட்சியில் புதிய உறுப்பினர்கள் சேர்க்கையும் நடந்தது. ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் பேசியவை...

முரளிதர ராவ்
முரளிதர ராவ்
`5 நாளும் பானிபூரி, சமோசாதான்!' -பீகாரில் நிஜ தீரனாக மாறிய சென்னை போலீஸ் டீம்

``தமிழக மீனவர்களின் படகுகளை விடுவிக்கப்போவதாக அறிவித்த இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சேவின் முடிவை வரவேற்கிறேன். இது சரியான திசையை நோக்கி நகர்கிற முடிவு. இந்த நல்லெண்ண நடவடிக்கை இருநாடுகளுக்கும் இடையே உறவை மேலும் வலுப்படுத்தும். அதோடு இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் 14,000 வீடுகள் கட்டித்தரப்படும் என்கிற பிரதமர் நரேந்திர மோடியின் அறிவிப்பையும் வரவேற்கிறேன். பிரதமர் மோடி 2015-ம் ஆண்டு இலங்கை சென்றபோது மலையகப் பகுதிகளில் இந்திய அரசால் கட்டப்பட்ட வீடுகளை தமிழ் மக்களிடம் ஒப்படைத்தார். இலங்கை தமிழர் நலனில் பா.ஜ.க தொடர்ந்து கவனம் செலுத்திவருகிறது.

இலங்கையின் ஒற்றுமை அவசியம், அதே நேரம் தமிழ் மக்களின் சுயாட்சி, கலாசார, அரசியல் உரிமைகளுக்கான கோரிக்கைகளை இலங்கை நலனுக்கு எதிரானதாகப் பார்க்கப்படக் கூடாது. தமிழர்களின் நலனை உறுதிசெய்வது இலங்கையின் வளர்ச்சிக்கு சாதகமாகவும் இருக்கும். தற்போது இலங்கையில் தேர்தலுக்குப் பிறகு புதிய அரசு, புதிய தலைமை உருவாகியுள்ளது. இலங்கையின் எதிர்கால வளர்ச்சியில் இந்தியா ஈடுபாடு கொண்டுள்ளது. இலங்கையுடன் மீனவர் பிரச்னை உள்ளது. அதைத் தீர்ப்பதற்கு இரண்டு நாடுகளும் ஒத்துழைப்புடன் உழைக்க வேண்டும். மீனவர்கள் பிரச்னை தீர்க்கப்பட வேண்டியதும் அவசியம்."

முரளிதர ராவ்
முரளிதர ராவ்
`காவல்நிலையம் முற்றுகை; ஆளுநர் தமிழிசை நேரில் ஆறுதல்!’ - பரபரக்கும் தெலங்கானா #JusticeForPriyanka

தமிழ்நாடு தென்னிந்தியாவில் மிகவும் முக்கியமான, அதே நேரத்தில் சவாலான மாநிலமாகவும் உள்ளது. இந்த நிலையில், பா.ஜ.க செயல் தலைவர் ஜே.பி. நட்டாவின் தமிழக வருகை முக்கியமானதாக அமைகிறது. பா.ஜ.க-வின் அடுத்தகட்ட கவனம் தென்னிந்தியாவின் மீதுதான். வேறு கட்சிகளைச் சேர்ந்த பல தலைவர்கள் நட்டா முன்னிலையில் பா.ஜ.க-வில் இணையவிருக்கின்றனர். அதைத் தொடர்ந்து கட்சியின் முக்கியமான மாநில நிர்வாகிகளோடு ஆலோசனைக் கூட்டமும் நடைபெறுகிறது. உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக இதில் கலந்தாலோசிக்கப்படும். தமிழகத்தில் பா.ஜ.க-வின் அடுத்தகட்ட செயல்திட்டங்கள் குறித்தும் விரிவாக விவாதிக்கப்படும்." என்றார்.

அ.தி.மு.க கூட்டணி பற்றி கேட்கப்பட்ட கேள்விக்கு, ``அது குறித்து தற்போது எதுவும் கூற முடியாது'' எனப் பேச மறுத்துவிட்டார். உள்ளாட்சித் தேர்தலில் பா.ஜ.க தனித்துப் போட்டியிடுமா எனக் கேட்கப்பட்ட கேள்விக்கும் ``நட்டாவுடன் கலந்தாலோசித்த பிறகு தெரிவிக்கப்படும்'' என்றார்.

பா.ஜ.க தலைவராக இருந்த தமிழிசை செளந்தரராஜன் தெலங்கானா ஆளுநராக நியமிக்கப்பட்ட பிறகு தமிழக பா.ஜ.க-வுக்குத் தலைமை இல்லாமல் இருந்துவருகிறது. அதுபற்றி கேட்கப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த முரளிதர ராவ் `பா.ஜ.க-வில் தற்போது கட்சிப் பதவிகளுக்கான தேர்தல் நடைபெற்று வருகிறது. அதைப்போலவே கட்சித் தலைமைக்கும் அடுத்தகட்டமாக தேர்தல் நடைபெறும். அடுத்த சில வாரங்களில் இதுதொடர்பான அறிவிப்பை எதிர்பார்க்கலாம். குடும்பக் கட்சிகளில்தான் தலைமைக்கு செலக்‌ஷன் நடக்கும், பா.ஜ.க-வில் எலெக்‌ஷன் மூலமாகத்தான் தலைமை தேர்ந்தெடுக்கப்படும். எனவே, தற்போது அவசரப்பட வேண்டிய தேவையில்லை. உரிய நேரத்தில் சரியான அறிவிப்பு வெளிவரும். தற்போது அதற்கு எந்த அவசரமும் இல்லை." என்றார்.

முரளிதர ராவ்
முரளிதர ராவ்

பா.ஜ.க மீதான தி.மு.க தலைவர் ஸ்டாலினின் விமர்சனங்களுக்குப் பதிலளித்த முரளிதர ராவ், ``பா.ஜ.க-வை விமர்சிப்பத்தை விட்டால் ஸ்டாலின் அவர்களுக்கு வேறு என்ன பணி இருக்கிறது. அவர் தி.மு.க-வில் கவனம் செலுத்த வேண்டும். அவர் சென்னையை விடவும் டெல்லியில்தான் அதிக கவனம் செலுத்துகிறார்" என்றார். மேலும், ``ஜனவரி மாதம் வரையில் நிறைய அதிசயங்கள் காத்திருக்கின்றன. அதுவரை பொறுமையாக இருங்கள்'' எனக்கூறி முடித்தார்.

அடுத்த கட்டுரைக்கு