Published:Updated:

``பாஜக அரசு வெளியுறவுக் கொள்கையை தவறாக கையாண்டுவிட்டது" - ராகுல் காந்தி

ராகுல் காந்தி - மோடி

``எனது யூகத்தின்படி சீனா போருக்கு தயார் நிலையில் இருக்கலாம்" - ராகுல் காந்தி

``பாஜக அரசு வெளியுறவுக் கொள்கையை தவறாக கையாண்டுவிட்டது" - ராகுல் காந்தி

``எனது யூகத்தின்படி சீனா போருக்கு தயார் நிலையில் இருக்கலாம்" - ராகுல் காந்தி

Published:Updated:
ராகுல் காந்தி - மோடி

ராகுல் காந்தி தலைமையில் கன்னியாகுமரியில் தொடங்கிய பாரத் ஜோடோ யாத்திரை 100 நாள்களுக்கு மேலாக 9 மாநிலங்களைக் கடந்து நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. தற்போது கிறிஸ்துமஸ், புத்தாண்டை முன்னிட்டு இடைவெளி எடுத்திருக்கும் யாத்திரை, ஜனவரி 3-ல் உத்தரப்பிரதேசத்தில் மீண்டும் தொடங்குகிறது.

இதற்கிடையே இந்தியாவின் வெளியுறவு கொள்கைகள் குறித்தும், சீனாவுடனான எல்லை பிரச்னை குறித்து விவாதம் நடத்தவும் மத்திய அரசு அனுமதி மறுத்திருப்பது தொடர்பாக ராகுல் காந்தியிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த ராகுல் காந்தி, "கடந்த அரசுகளின் இந்தியாவின் வெளியுறவு கொள்கைகள், வெற்றிகரமாக சீனாவையும் பாகிஸ்தானையும் பிரித்து வைத்திருந்தன. இதுதான் எங்கள் கூட்டணி அரசின் மையக்கருத்தாக இருந்தது. இன்று பாகிஸ்தானும் சீனாவும் இணைந்து விட்டன. இது சாதாரண விஷயமல்ல. இது மிகவும் ஆபத்தான விஷயம்.

ராகுல் காந்தி
ராகுல் காந்தி

நமது வெளியுறவுக் கொள்கையின் நீண்ட கட்டமைப்பை புரிந்து கொள்ளாததால் பா. ஜ.க அரசு வெளியுறவு கொள்கையை தவறாக கையாண்டு, சீனா - பாகிஸ்தானை ஒன்றிணைத்து விட்டது. சீனா பாகிஸ்தான் இரு நாடுகளும் ஒன்று சேர்ந்ததால் ஏதேனும் அசம்பாவிதம் நடக்க வாய்ப்புள்ளது. எனது யூகத்தின்படி சீனா போருக்கு தயார் நிலையில் இருக்கலாம் அல்லது போருக்கு தயாராகிக் கொண்டிருக்கலாம் என்று நினைக்கிறேன். நமது அரசு எதையும் எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும்" எனத் தெரிவித்திருக்கிறார்.