Published:Updated:

`ஆத்திரப்படாதீர்கள்; மத்திய அரசு நல்லதுதான் செய்கிறது!’- CAA குறித்து ரஜினி அண்ணன் சத்ய நாராயணராவ்

`குடியுரிமை திருத்த மசோதாவுக்கு எதிராக யாரும் போராட்டம் நடத்தவேண்டாம்’ என்று ரஜினியின் அண்ணன் சத்ய நாராயணராவ் கேட்டுக்கொண்டார்.

ரஜினியின் அண்ணன் சத்ய நாராயணராவ்
ரஜினியின் அண்ணன் சத்ய நாராயணராவ்

குடியுரிமைச் சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம் தீவிரமடைந்துள்ளன. தமிழகத்திலும் தி.மு.க தலைமையிலான எதிர்க்கட்சிகள் மக்களை திரட்டி பேரணி மற்றும் போராட்டம் நடத்தியது.

ரஜினி
ரஜினி

இதனிடையே போராட்டம் தொடர்பாக, `எந்தவொரு பிரச்னைக்கும் தீர்வுகாண வன்முறை மற்றும் கலவரம் ஒரு வழி ஆகிவிடக்கூடாது. தேசப் பாதுகாப்பையும் நாட்டு நலனையும் மனதில்கொண்டு இந்திய மக்கள் ஒற்றுமையுடன் இருக்கவேண்டும்’ என்று ரஜினி ட்விட்டர் பக்கத்தில் கருத்து கூறியிருந்தார்.

இந்த நிலையில், `குடியுரிமை திருத்த மசோதா நன்மைக்கே’ என்று ரஜினியின் கருத்தை முன்மொழிந்துள்ளார் அவரின் அண்ணன் சத்ய நாராயணராவ். வேலூர் கோட்டை ஜலகண்டேஸ்வரர் கோயிலுக்கு இன்று வந்த அவர் சிறப்பு தரிசனம் செய்தார்.

ரஜினியின் அண்ணன் சத்ய நாராயணராவ்
ரஜினியின் அண்ணன் சத்ய நாராயணராவ்

பின்னர், தங்கத்தேர் இழுத்து வழிபட்டார். அதையடுத்து, செய்தியாளர்களிடம் பேசிய சத்ய நாராயணராவ், `நாடு நல்லா இருக்கணும். மக்கள் நலம் பெறவேண்டும் என்று பிரார்த்தனை செய்துள்ளேன்.

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராகப் போராட்டம் செய்வது தவறு. மக்கள் பொறுமையாக இருக்க வேண்டும். அரசு நல்லதுதான் செய்கிறது. குடியுரிமைக்கு எதிராகப் போராட்டம் நடத்தவேண்டாம்.

மோடி
மோடி

ஆத்திரப்படாதீர்கள். எதையும் நஷ்டப்படுத்தாதீர்கள். அமைதியாக இருங்கள்’ என்றார். அப்போது, ரஜினியின் அரசியல் வருகை குறித்து நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு, ‘இப்போது அரசியல் பற்றிப் பேசவேண்டாம்’ என்று கூறினார்.