Published:Updated:

தி.மு.க அரசுக்கு எதிராக போராட 1,008 காரணங்கள் இருக்கின்றன! - ‘கடுகடு’ ஹெச்.ராஜா

ஹெச்.ராஜா
பிரீமியம் ஸ்டோரி
ஹெச்.ராஜா

உ.பி துணை முதல்வர் மௌரியா கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக வந்தவர்களின் காரை வன்முறைக் கும்பல்தான் வழிமறித்து, அடித்து உதைத்துள்ளது.

தி.மு.க அரசுக்கு எதிராக போராட 1,008 காரணங்கள் இருக்கின்றன! - ‘கடுகடு’ ஹெச்.ராஜா

உ.பி துணை முதல்வர் மௌரியா கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக வந்தவர்களின் காரை வன்முறைக் கும்பல்தான் வழிமறித்து, அடித்து உதைத்துள்ளது.

Published:Updated:
ஹெச்.ராஜா
பிரீமியம் ஸ்டோரி
ஹெச்.ராஜா

`பா.ஜ.க-வின் தேசிய செயற்குழு சிறப்பு அழைப்பாளராக ஹெச்.ராஜா நியமனம்’ செய்யப்பட்டிருக்கும் அதே தினத்தில், ‘இந்து அறநிலையத் துறை அதிகாரிகளை அவமரியாதையாகப் பேசிய ஹெச்.ராஜாவுக்குப் பிடிவாரன்ட்’ உத்தரவைப் பிறப்பித்திருக்கிறது நீதிமன்றம். பரபரப்போடு ஹெச்.ராஜாவுக்கு போன் செய்தால், “காரைக்குடியில் என் வீட்டில்தான் இருக்கிறேன். அம்மாவுக்கு திதி நடக்கிறது’’ என்றவாறே நம் கேள்விகளை ரிலாக்ஸாக எதிர்கொண்டார்...

“ `பா.ஜ.க தேசிய செயற்குழு சிறப்பு அழைப்பாளர்’ என்ற பதவி உங்கள் திறமைக்குக் கிடைத்த பரிசா அல்லது தேர்தலில் தோல்வியுற்றவர்களுக்கு வழக்கமாக வழங்கப்படும் பதவியா?’’

“இங்க பாருங்க... 1980-களில் பா.ஜ.க என்ற கட்சியைத் தொடங்கியவர்களில் நானும் ஒருவன். எனவே, கட்சியில் பொறுப்பு கொடுத்தாலும் கொடுக்காவிட்டாலும் கட்சிக்காக நான் வேலை பார்த்துக்கொண்டேதான் இருப்பேன். யார் யாருக்கு என்னென்ன பொறுப்புகளைக் கொடுத்துப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்பது எங்கள் கட்சிக்குத் தெரியும். அந்த வகையில்தான் இப்போது எனக்குப் பொறுப்பு கொடுத்திருக்கிறார்கள். எனக்கு இதில் மிக்க மகிழ்ச்சி!’’

“ஆனால், உத்தரப்பிரதேச விவசாயிகள் படுகொலையைக் கண்டித்த பா.ஜ.க எம்.பி வருண் காந்தியை, கட்சியின் உயர்மட்டப் பொறுப்பிலிருந்து நீக்கிவிட்டார்களே?’’

“உ.பி-யில் பா.ஜ.க-தான் ஆட்சி செய்கிறது. ‘என்ன நடந்தது’ என்று முதல்வர் யோகியிடமேகூட வருண் காந்தி நேரடியாகக் கேட்டுத் தெரிந்து கொண்டிருக்க முடியும். ஆனால், அவர் அப்படிச் செய்யவில்லை. கட்சியை விமர்சித்து ஒருவர் அறிக்கையோ, ட்வீட்டோ வெளியிட்டால், அதைக் கட்சி நிர்வாகம் தக்க முறையில் அணுகும். இந்தப் பிரச்னையில் அதுதான் நடந்திருக்கிறது.’’

“நடிகை குஷ்புவும் இந்தச் சம்பவத்தைக் கண்டித்திருக்கிறார். ஆனால், அவருக்கு பா.ஜ.க-வில் புதிதாகப் பதவி வழங்கப்பட்டிருக்கிறதே?’’

“குஷ்பு, கருத்து தெரிவித்திருந்த தொனி ஏற்றுக்கொள்ளத்தக்கதாக இருந்தது. ஆனால், வருண் காந்தி வீடியோ வெளியிட்டது தவறு!’’

“அப்பாவி விவசாயிகள்மீது பா.ஜ.க-வினர் கார் ஏற்றிப் படுகொலை செய்த கொடூரச் சம்பவத்தை, யாரும் கண்டிக்கக் கூடாது என்கிறீர்களா?’’

“போராட்டம் நடத்திய விவசாயிகள்மீது காரை ஏற்றிக் கொன்றதாகச் சொல்வதே தவறு. உ.பி துணை முதல்வர் மௌரியா கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக வந்தவர்களின் காரை வன்முறைக் கும்பல்தான் வழிமறித்து, அடித்து உதைத்துள்ளது. எனவே வாகனமும் கட்டுப்பாடு இழந்து விபத்து நேர்ந்திருக்கிறது. அந்த துரதிர்ஷ்டவசமான சம்பவத்தில் நான்கு பேர் இறந்துள்ளனர். அதன் பிறகு அந்த கார் டிரைவர் மற்றும் பா.ஜ.க-வைச் சேர்ந்தவர்கள் என நான்கு பேர் அந்த வன்முறைக் கும்பலால் அடித்தே கொல்லப்பட்டிருக்கிறார்கள். எனவே, இது விவசாயிகளுக்கு எதிரானதும் இல்லை; கலவரமும் இல்லை.’’

“காரை ஏற்றிக் கொன்றதாக, மத்திய இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ராவுக்கு சம்மன் அனுப்பப்பட்டிருக்கிறதுதானே?’’

“சம்மன் அனுப்பப்பட்டிருக்கிறது... அவ்வளவுதான். மற்றபடி தேவை ஏற்பட்டால் மட்டுமே சட்டப்படி ஒருவரைக் கைதுசெய்ய முடியும். என்ன நடந்தது என்பது குறித்த விசாரணையின்போது, சம்பவம் நடைபெற்ற இடத்திலேயே ஆஷிஷ் மிஸ்ரா இல்லை என்பதற்கான தகவல்கள் கிடைத்திருக்கின்றன. மேலும் சம்பவ இடத்திலிருந்து 160 கி.மீ தூரத்தில்தான் அவர் இருந்தார் என்பதும் தெரியவந்திருக்கிறது.’’

“இந்து அறநிலையத்துறை அதிகாரிகளை அவதூறாகப் பேசிய வழக்கில், உங்கள் மீதே பிடிவாரன்ட் இருக்கிறதுதானே?’’

“இல்லையில்லை... இது ஏதோ தகவல் பரிமாற்றத்தில் நடந்துவிட்ட சின்ன இடைவெளி. ஏனெனில், மாவட்ட நீதிமன்றத்தில் ஏற்கெனவே நான் 15 நாள் முன்ஜாமீன் பெற்றிருக்கிறேன். அதன்படி, வருகிற 11-ம் தேதி வரையில் எனக்கு ஜாமீன் இருக்கிறது. இந்தச் சூழலில், எப்படி வாரன்ட் பிறப்பிக்கப்பட்டது என்று எனக்கும் தெரியவில்லை. இந்த விவரங்களையெல்லாம் காவல்துறை கவனத்துக்கும் நானே கொண்டுபோய்விட்டேன். அதனால் என்னைக் கைதுசெய்ய வாய்ப்பில்லை!’’

தி.மு.க அரசுக்கு எதிராக போராட 1,008 காரணங்கள் இருக்கின்றன! - ‘கடுகடு’ ஹெச்.ராஜா

“ `போராடுவதற்கு எந்தக் காரணமும் கிடைக்காததால், கோயில் திறப்பைச் சொல்லி தமிழக பா.ஜ.க போராடுகிறது’ என்று அமைச்சர் சேகர் பாபு கிண்டல் செய்கிறாரே?’’

“தி.மு.க அரசுக்கு எதிராகப் போராடுவதற்கு 1,008 காரணங்கள் இருக்கின்றன. சிறுவர் பூங்காவைக்கூட இன்றைக்குத் தமிழக அரசு திறந்துவிட்டது. அங்கே, தடுப்பூசி போட்டுக் கொள்ளாத சிறுவர்களெல்லாம் கட்டிப்பிடித்து விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், தடுப்பூசி போட்டுக்கொண்ட பெரியவர்கள்கூட கோயிலுக்கு வந்தால் கொரோனா பரவிவிடும் என பயம்காட்டுகிற தமிழக அரசு, சிறுவர் பூங்காவை மட்டும் எப்படி கண்மூடித்தனமாகத் திறந்துவிட்டிருக்கிறது?

அதுமட்டுமல்ல... அண்மையில் சிறுவாச்சூர் மதுர காளியம்மன் கோயிலில், சிலைகள் அடித்து நொறுக்கப்பட்டுள்ளன. இதன் பின்னணியில், அறநிலையத்துறை அதிகாரிகளும், தமிழக அரசாங்கமும் இருக்க வாய்ப்பிருக்கிறது. ஏனெனில், ‘அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராகலாம்’ என்ற தமிழக அரசின் உத்தரவுக்கு எதிராக வழக்கு தொடுத்திருந்தவர்கள், இந்த மதுர காளியம்மன் கோயிலில் பூசை செய்துவந்த பூசாரிகள்தான். எனவே, முதல்வர், அறநிலையத்துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகளுக்கு இந்தக் கோயில் பூசாரிகள்மீது வன்மம் இருக்க வாய்ப்பிருக்கிறது. எனவே, அரசுத் தரப்பிலிருந்தே இப்படியொரு தாக்குதல் தொடுக்கப்பட்டிருக்கலாம் என்பது என் அனுமானம்.’’

“அண்மையில் ட்விட்டர் ஸ்பேசஸில், ‘கருணாநிதியைவிடவும் ஸ்டாலின் ஆபத்தானவர்’ என்று பேசியிருக்கிறீர்களே... ஏன் இந்த பயம்?’’

“எனக்கென்ன பயம்... மக்களை எச்சரிப்பதால் நான் பயந்தேன் என்று அர்த்தமா? ‘யார் என்ன சொன்னாலும் அவற்றை கருணாநிதி காதில் வாங்கிக்கொள்வார். ஆனால், பின்னர் அவரே சுயமாக முடிவெடுப்பார். ஆனால், மு.க.ஸ்டாலின் அப்படிச் சுயமாக முடிவெடுப்பதில்லை. அதனால்தான், ஸ்டாலின் ஆபத்தானவர்’ என்று சொல்லியிருந்தேன்!’’