Published:Updated:

``அந்நிய சக்திகளின் அச்சுறுத்தலால்தான் வேளாண் சட்டங்களை வாபஸ் பெற்றோம்!'' - சொல்கிறார் ஹெச்.ராஜா

ஹெச்.ராஜா
News
ஹெச்.ராஜா

``அனைத்துச் சாதியினரும் ஏற்கெனவே அர்ச்சகர்களாக இருக்கிறார்கள். எனவே, மறுபடியும் அதைப் பற்றிப் பேச திராவிட இயக்கங்களுக்கு உரிமை இல்லை. இந்து மதத்துக்குள் சண்டை மூட்டிவிடாதீர்கள்" என்கிறார் ஹெச்.ராஜா.

தமிழக பா.ஜ.க ஆதரவாளர்கள் என்ற பெயரில், சமூக ஊடகங்களில் சர்ச்சைக்குரிய வகையில் கருத்து பதிவிட்டுவந்தவர்களை அடுத்தடுத்து கைதுசெய்து அதிரவைத்திருக்கிறது தமிழக காவல்துறை!

இந்தக் கொதிப்பான சூழலில், பா.ஜ.க-வின் தேசிய செயற்குழு சிறப்பு அழைப்பாளர் ஹெச்.ராஜாவை நேரில் சந்தித்தேன்....

விவசாயிகள் போராட்டம்
விவசாயிகள் போராட்டம்

``பாதாம், பிஸ்தா சாப்பிட்டுப் போராடிக்கொண்டிருக்கிறார்கள் என்றெல்லாம் விவசாயிகள் போராட்டத்தை மிகக் கடுமையாக விமர்சித்த நீங்களே, இன்று புதிய வேளாண் சட்டங்களை ரத்துசெய்துவிட்டீர்களே ஏன்?''

``இந்தப் போராட்டத்தின் பின்னணியில் வெளிநாட்டு சக்திகள் ஒன்று சேர்ந்துகொண்டு பஞ்சாப் மாநிலத்தில் தேச விரோத நடவடிக்கைகளுக்கான தயாரிப்புகள் நடைபெற்றுவருவதைத் தெரிந்துகொண்ட காரணத்தால், வேளாண் சட்டத்தை வாபஸ் பெற்றுவிட்டோம். அதனால்தான், 'விவசாயிகள் நலன் கருதி வேளாண் சட்டத்தைக் கொண்டுவந்தேன்; இப்போது நாட்டு நலன் கருதி வாபஸ் பெற்றுக்கொள்கிறேன்' என்று பிரதமரும் அறிவித்துவிட்டார்.''

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

``விவசாயிகள் போராட்டத்துக்கு முன் 'பா.ஜ.க-வின் அதிகார ஆணவம் தோற்றுவிட்டது' என்ற காங்கிரஸ் கட்சியின் விமர்சனம்தானே உண்மை?''

``எமர்ஜென்சியைக் கொண்டு வந்து, நாட்டின் முக்கியத் தலைவர்களையெல்லாம் சிறைக்குள் தள்ளிவிட்டு ஆட்சி நடத்திவந்த காட்டுமிராண்டிக் கூட்டமான காங்கிரஸ் கட்சி ஆணவம் பற்றிப் பேசலாமா?

மறைந்துபோன முப்படைத் தலைமைத் தளபதி பிபின் ராவத் பற்றிக்கூட இன்றைக்குச் சில தேசவிரோதிகள் சமூக வலைதளங்களில் மிக மோசமாக விமர்சித்துவருகின்றனர். காங்கிரஸ் கட்சி சொல்வதுபோல, மத்திய பா.ஜ.க அரசு, ஆணவம் மிக்கதாக இருந்திருந்தால் இதில் ஒருவர்கூட வெளியில் இருக்க முடியாது. எனவே, காங்கிரஸ் கட்சியின் முட்டாள்தனமான நிலைப்பாடுகளையெல்லாம் விட்டுத்தள்ளுங்கள்.''

சோனியா காந்தி - ராகுல் காந்தி
சோனியா காந்தி - ராகுல் காந்தி

``அப்படியென்றால், இடைத்தேர்தல் தோல்வி, வரவிருக்கிற தேர்தல்களை மனதில்கொண்டுதான் 'வேளாண் சட்டம் ரத்து செய்யப்பட்டது' என எடுத்துக்கொள்ளலாமா?''

``தேர்தலைப் பொறுத்தவரையில் அஸ்ஸாமில் மிகப்பெரிய வெற்றியை பா.ஜ.க பெற்றிருக்கிறது. காரணம் காங்கிரஸ் கட்சியின் அசட்டுத்தனம், மக்கள் விரோதப்போக்கு, குடும்ப ஆட்சி எல்லாவற்றையும் மக்கள் புரிந்துகொண்டுவிட்டார்கள். டெல்லியில் மட்டுமல்ல... தமிழ்நாட்டிலும் குடும்ப ஆட்சிதான் நடைபெற்றுவருகிறது. இது ஜனநாயக விரோதம்!

வேளாண் சட்டத்துக்கு ஆதரவாக இன்றைக்குப் பேசிவரும் அந்நிய சக்திகள், கடந்தகாலத்தில் இங்கிருந்த தீவிரவாதத்தையும் ஊக்குவித்தவர்கள்தான். இதைப் புரிந்துகொண்டதால்தான், நாட்டின் எல்லை மாகாணத்தில் மறுபடியும் இது போன்ற ஓர் சூழ்நிலை வந்துவிடாமல் தடுக்கும் நடவடிக்கைதான் 'வேளாண் சட்டம் ரத்து' என்பது.''

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

``ஶ்ரீரங்கம் கோயிலில், பிரதமர் உரையை ஒளிபரப்பியது தவறு என்கிறாரே அர்ச்சகர் ரங்கராஜன் நரசிம்மன்?''

``கோயில் திறப்புவிழா நிகழ்வை ஶ்ரீரங்கம் கோயிலில் ஒளிபரப்பு செய்ததில் எந்தத் தவறும் இல்லை. எனவே, ரங்கராஜன் நரசிம்மன் சொல்வதை நான் ஏற்றுக்கொள்ளவில்லை. இத்தோடு இந்தக் கேள்வியை நிறுத்திக்கொள்ளுங்கள். அதுதான் ஊடக தர்மம்! நீங்கள் நீதிபதிபோலவும், என்னைக் குற்றவாளிபோலவும் நினைத்துக்கொண்டு கேள்வி கேட்காதீர்கள்.''

அண்ணாமலை
அண்ணாமலை

``இந்த விவகாரத்தில், 'தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலையின் ஆதரவாளர்கள் எனக்குக் கொலை மிரட்டல் விடுக்கின்றனர்' என்றும் ரங்கராஜன் நரசிம்மன் சொல்கிறாரே?''

``அன்று நடந்த சம்பவம் சரி என்று என் கருத்தை ஏற்கெனவே சொல்லிவிட்டேன். மற்றபடி அவர் பாதிக்கப்பட்டிருந்தால் முறைப்படி விசாரணை நடத்தலாம். அதற்காக நீங்கள் வக்கீல்போல் வந்து என்னிடம் விசாரணை நடத்தாதீர்கள்.''

``ஏற்கெனவே தமிழ்நாட்டில், அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர்களாக இருக்கிறார்கள் என்று கூறும் ஹெச்.ராஜா, தமிழக அரசின் 'அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராகலாம்' என்ற சட்டத்தை ஆதரிக்காமல், எதிர்ப்பது ஏன்?''

``அனைத்துச் சாதியினரும் ஏற்கெனவே அர்ச்சகர்களாக இருக்கிறார்கள். எனவே, மறுபடியும் அதைப் பற்றிப் பேச திராவிட இயக்கங்களுக்கு உரிமை இல்லை. இந்து மதத்துக்குள் சண்டை மூட்டிவிடாதீர்கள் என்கிறோம்.''

சீமான்
சீமான்

``'சீமானின் தாய் மலையாளி' என நீங்கள் கூறியதற்கு, 'அவருக்கு பதில் அளிக்க விரும்பவில்லை' என சீமான் பதிலடி கொடுத்திருக்கிறாரே?''

``'என்ன சொன்னாலும் ஹெச்.ராஜாவும் ரங்கராஜ் பாண்டேவும் பீகாரிகள்தான்' என்கிறார் தமிழக நிதியமைச்சர். ரங்கராஜ் பாண்டே, 'நான் பீகாரிதான்' என்று அவரே ஒப்புக்கொள்கிறார். ஆனால், என்னுடைய பூர்வீகம் தமிழ்நாடுதான். என் தாத்தா பெயர் சிவ சிதம்பரம். இந்தப் பெயரே வேறு மாநிலத்தில் வைக்கவே மாட்டார்கள். ஆக, இது போன்று பேசுகிறவர்களுக்கெல்லாம் நான் பதில் சொல்ல விரும்பவில்லை.''

``சமூக ஊடகத்தில், ஹெச்.ராஜாவை மிகக் கடுமையாக விமர்சித்து மீம்ஸ்கள் வெளிவருகின்றனவே... இதை உங்கள் குடும்பத்தினர் எப்படிப் பார்க்கிறார்கள்?''

``சிரித்துவிட்டுப் போய்விடுவார்கள். காரணம் கட்சியில் என்னோடு நெருக்கமாகப் பழகுகிறவர்களுக்கு ஹெச்.ராஜா என்பவர் யார் என்று நன்றாகவே தெரியும்.

குஷ்பு
குஷ்பு

உதாரணமாக பா.ஜ.க-வில் புதிதாக இணைந்த குஷ்புவேகூட, 'நீங்கள் கோபக்காரர் என்று நினைத்திருந்தேன். ஆனால், இவ்வளவு சகஜமாக, ஜோவியலாக, சகோதர உணர்வுடன் பழகுகிறீர்களே... என் வீட்டுக்காரர் சுந்தர்.சி-யிடமும்கூட உங்கள் சுபாவம் பற்றி எடுத்துச் சொல்லியிருக்கிறேன்' என்றெல்லாம் ஆச்சர்யப்பட்டுப் பேசினார். ஆக, கட்சியில் புதிதாகச் சேர்ந்த சகோதரி குஷ்புவுக்கே இந்த உண்மைகள் தெரியும்போது, என் வீட்டிலுள்ளவர்களுக்கு என்னைப் பற்றித் தெரியாதா என்ன!''