Published:Updated:

``ஜனநாயகம் விற்பனைக்கு என்பதை பாஜக தெளிவுபடுத்தியிருக்கிறது!" - காங்கிரஸ் எம்.பி கே.சி.வேணுகோபால்

காங்கிரஸ் எம்.பி கே.சி.வேணுகோபால்

``ஜனநாயகம் விற்பனைக்கு உள்ளது என்பதை பா.ஜ.க மிகத்தெளிவாக தெளிவுபடுத்தியுள்ளது. இதுதான் இந்திய ஜனநாயகத்தின் தலைவிதி." - காங்கிரஸ் எம்.பி கே.சி.வேணுகோபால்

``ஜனநாயகம் விற்பனைக்கு என்பதை பாஜக தெளிவுபடுத்தியிருக்கிறது!" - காங்கிரஸ் எம்.பி கே.சி.வேணுகோபால்

``ஜனநாயகம் விற்பனைக்கு உள்ளது என்பதை பா.ஜ.க மிகத்தெளிவாக தெளிவுபடுத்தியுள்ளது. இதுதான் இந்திய ஜனநாயகத்தின் தலைவிதி." - காங்கிரஸ் எம்.பி கே.சி.வேணுகோபால்

Published:Updated:
காங்கிரஸ் எம்.பி கே.சி.வேணுகோபால்

மகாராஷ்டிரா மாநிலத்தில் ஆளுங்கட்சியாக இருந்த சிவசேனாவின் அமைச்சர் ஏக்நாத் ஷிண்டே, தனது ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் 40 பேருடன் திடீரென பா.ஜ.க-வுடன் கூட்டணி வைத்து ஆட்சி மாற்றத்தைக் கொண்டுவந்துள்ளார். இதன்மூலம் மகாராஷ்டிராவின் புதிய முதல்வராக ஏக்நாத் ஷிண்டே, துணை முதல்வராக பா.ஜ.க-வின் மாநில தலைவரான தேவேந்திர பட்னாவிஸ் ஆகியோர் பதவியேற்றிருக்கின்றனர். இந்த நிலையில், மகாராஷ்டிரா சட்டப்பேரவையில் காலியாக இருந்த சபாநாயகர் பதவிக்கு இன்று வாக்கெடுப்பு நடந்தது.

ஏக்நாத் ஷிண்டே, தேவேந்திர பட்னாவிஸ்
ஏக்நாத் ஷிண்டே, தேவேந்திர பட்னாவிஸ்

இதில் பா.ஜ.க தரப்பில் ராகுல் நார்வேகர், சிவசேனா தரப்பில் ராஜன் சால்வி ஆகியோர் போட்டியிட்டனர். இறுதியாக ராகுல் நார்வேகர் சபாநாயகராகத் தேர்வு செய்யப்பட்டார். இந்த நிலையில், மகாராஷ்டிராவின் அரசியல் மாற்றங்கள் குறித்து காங்கிரஸ் தலைவரும், எம்.பி-யான கே.சி.வேணுகோபால் பா.ஜ.க-வை கடுமையாகச் சாடியுள்ளார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

காங்கிரஸ் எம்.பி கே.சி.வேணுகோபால்
காங்கிரஸ் எம்.பி கே.சி.வேணுகோபால்

இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய காங்கிரஸின் கே.சி.வேணுகோபால், ``ஜனநாயகம் விற்பனைக்கு உள்ளது என்பதை பா.ஜ.க மிகத்தெளிவாக தெளிவுபடுத்தியுள்ளது. யார் வேண்டுமானாலும் இங்கு வருவர், வந்து பணம் எடுப்பர். பின்னர் அவர்கள் பா.ஜ.க-வில் சேர்வர். இதுதான் இந்திய ஜனநாயகத்தின் தலைவிதி. ஆனால் இந்திய மக்கள் அதை எதிர்த்துப் போராடுவார்கள்" எனக் கூறினார்.