Published:Updated:

``ஜனநாயகரீதியில் பாஜக தேர்தலைச் சந்தித்ததில்லை” - சொல்கிறார் காங்கிரஸ் எம்.பி செல்லகுமார்

எம்.பி செல்லகுமார்

"எந்த மாநிலத்திலும் ஜனநாயகரீதியில் பாஜக தேர்தலைச் சந்தித்ததில்லை" என காங்கிரஸ் எம்.பி செல்லகுமார் தெரிவித்திருக்கிறார்.

``ஜனநாயகரீதியில் பாஜக தேர்தலைச் சந்தித்ததில்லை” - சொல்கிறார் காங்கிரஸ் எம்.பி செல்லகுமார்

"எந்த மாநிலத்திலும் ஜனநாயகரீதியில் பாஜக தேர்தலைச் சந்தித்ததில்லை" என காங்கிரஸ் எம்.பி செல்லகுமார் தெரிவித்திருக்கிறார்.

Published:Updated:
எம்.பி செல்லகுமார்

சென்னை, சத்தியமூர்த்தி பவனில் கிருஷ்ணகிரி எம்.பி செல்லகுமார் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், "கிருஷ்ணகிரி நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்டு ஓசூர் பகுதியில் வாழ்கிற மக்களின் வாழ்க்கை பெங்களூருடன் பின்னிப் பிணைந்திருக்கிறது. பெங்களூரில் ஓடுகிற மெட்ரோ ரயில், ஓசூர் வரை நீட்டிக்கப்பட்டால் தினசரி பல்லாயிரக்கணக்கான மக்கள் பயன்பெறுவார்கள். இது குறித்து 2019-ல் நாடாளுமன்றத்தில் பேசினேன். பிறகு மத்திய அமைச்சரிடம் பேசினேன். இதையடுத்து மத்திய அரசு தமிழக, கர்நாடக அரசுகளுக்குக் கடிதம் எழுதினார்கள்.

அதில், `இது ஒரு நல்ல திட்டம். மாநில அரசு செயல்படுத்த வேண்டியிருப்பதால் முன்னோடி எடுக்க’ கேட்டுக்கொண்டார்கள். அதன் பிறகும் தொடர்ந்து வலியுறுத்திவந்தேன். தொடர்ந்து கடந்த மார்ச் 21-ம் தேதி எதிர்க்கட்சித் தலைவராக இருந்த முன்னாள் முதல்வர் சித்தராமையாவைச் சந்தித்து, எடுத்துச்சொன்னேன். பிறகு இருவரும் நேரில் சென்று அந்த மாநில முதல்வர் பொம்மையைச் சந்தித்து விரிவாக எடுத்துக் கூறினோம்.

சத்தியமூர்த்தி பவன்
சத்தியமூர்த்தி பவன்

அவர் பரிசீலனை செய்து ஒப்புதல் அளித்திருக்கிறார். மேலும் இதற்கான விரிவான திட்ட அறிக்கையை தமிழக அரசு செய்யட்டும் என்று குறிப்பிட்டிருக்கிறார். பிறகு தமிழக முதல்வரைச் சந்தித்து எடுத்துக் கூறினேன். குறிப்பாக பெங்களூரிலிருந்து பொம்ம சந்திரா வரை மெட்ரோ ரயில் இயங்கிவருகிறது. இங்கிருந்து ஓசூர் வரவேண்டுமென்றால் 20.5 கீ.மீ தூரம் இருக்கிறது.

இதில் 11.7 கீ.மீ கர்நாடகா மாநிலத்தைச் சார்ந்ததும், 8.8 கீ.மீ தமிழகத்தைச் சார்ந்ததுமாக இருக்கிறது. கர்நாடகா மாநிலத்துக்கு அந்த மாநில அரசும், தமிழகத்தில் இருக்கும் பகுதிக்கு தமிழக அரசும் செலவு செய்ய வேண்டும் என்று கூறினேன். இதில் 20% மத்திய அரசு பங்களிப்பு இருக்கும் என்று சொன்னேன். பிறகு தமிழக அரசு ரூ.75 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்திருக்கிறது. முதல்வருக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.

இதன் மூலம் நெரிசல், காற்று மாசுபாடு குறையும். காங்கிரஸ் கட்சி சாதி, மதத்திற்கு அப்பாற்பட்டது. பாஜக கட்சி ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை இல்லாத ஓர் இயக்கம். மக்களுக்கான சுதந்திரம் என்றால் என்ன என்று தெரியாத இயக்கம். வன்முறை என்பது அவர்களின் ரத்தத்தில் ஊறிப்போன இயக்கம். இந்த நாட்டுக்கு அகிம்சையை போதித்த மகாத்மா காந்தியைச் சுட்டுக்கொல்வதற்கு துணிந்தவர்கள் என்பதைவிட, அந்த சுட்டுக் கொன்றவரையே மிகப்பெரிய தேசப்பக்தர் என்று கொண்டாடுகிற இயக்கம்.

பாஜக - காங்கிரஸ்
பாஜக - காங்கிரஸ்

எந்த மாநிலத்திலும் ஜனநாயகரீதியில் அவர்கள் தேர்தலைச் சந்தித்ததில்லை. காங்கிரஸ் கட்சியில் மட்டும் கோஷ்டிப்பூசல் இருப்பதாகச் சொல்கிறார்கள். பாஜக சந்தி சிரித்துக்கொண்டிருக்கிறது. அகில இந்திய காங்கிரஸ் கமிட்டிக்கு தமிழகத்தில் என்ன நடக்கிறது என்பது முழுமையாகத் தெரியும். அழகிரிதான் தலைவராகத் தொடர்வாரா என்பது குறித்து தலைமைதான் முடிவுசெய்யும்" என்றார்.