Published:Updated:

`` `பாஜக-வில் சேருங்கள், எல்லா வழக்குகளையும் முடித்துவைக்கிறோம்' என அழைத்தார்கள்!" - மணீஷ் சிசோடியா

மணீஷ் சிசோடியா ( Facebook )

சூழ்ச்சியாளர்களுக்கு முன்னால் தலைவணங்க மாட்டேன். என்மீதான வழக்குகள் பொய்யானவை." - மணீஷ் சிசோடியா

`` `பாஜக-வில் சேருங்கள், எல்லா வழக்குகளையும் முடித்துவைக்கிறோம்' என அழைத்தார்கள்!" - மணீஷ் சிசோடியா

சூழ்ச்சியாளர்களுக்கு முன்னால் தலைவணங்க மாட்டேன். என்மீதான வழக்குகள் பொய்யானவை." - மணீஷ் சிசோடியா

Published:Updated:
மணீஷ் சிசோடியா ( Facebook )

மதுவிலக்கு மாற்றம் செய்த விவகாரத்தில், கலால் வரியில் முறைகேடு நிகழ்ந்திருப்பதாக டெல்லியின் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாமீது புகார் எழுந்தது. அதைத் தொடர்ந்து, சி.பி.ஐ அதிகாரிகள் கடந்த வெள்ளிக்கிழமை அதிகாலை டெல்லியின் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவின் வீடு உட்பட டெல்லி என்.சி.ஆர் பகுதியிலுள்ள 21 இடங்களில் சோதனையிட்டனர். இந்தச் சோதனைக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய சிசோடியா, ``நாங்கள் எந்த ஊழலும், தவறும் செய்யவில்லை. நாங்கள் பயப்படவுமில்லை, சி.பி.ஐ தவறாகப் பயன்படுத்தப்படுகிறது என்பது எங்களுக்கு நன்றாகத் தெரியும்" எனத் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், தனக்கு பா.ஜ.க-வில் சேர அழைப்பு வந்திருப்பதாக மணீஷ் சிசோடியா தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ``பா.ஜ.க-விடமிருந்து `ஆம் ஆத்மியைவிட்டு வெளியேறி பா.ஜ.க-வில் சேருங்கள், அனைத்து சி.பி.ஐ, அமலாக்கப் பிரிவு வழக்குகளையும் முடிவுக்கு கொண்டுவருகிறோம்' என எனக்கு ஒரு செய்தி வந்திருக்கிறது. ஆனால், பா.ஜ.க-வுக்கு என்னுடைய பதில் என்னவென்றால், நான் மகாராணா பிரதாப்பின் வழித்தோன்றல், நான் ஒரு ராஜபுத்திரன். நான் என்னையேகூட தியாகம் செய்வேன். ஆனால், ஊழல்வாதிகள் மற்றும் சூழ்ச்சியாளர்களுக்கு முன்னால் தலைவணங்க மாட்டேன். என்மீதான வழக்குகள் பொய்யானவை. நீங்கள் என்ன வேண்டுமானாலும் செய்துகொள்ளுங்கள் என்பதே" என்று பதிவிட்டிருக்கிறார்.

கபில் மிஸ்ரா
கபில் மிஸ்ரா
facebook

மணீஷ் சிசோடியாவின் இந்த ட்விட்டர் பதிவுக்கு பதிலளித்த பா.ஜ.க தலைவர் கபில் மிஸ்ரா, ``வாழ்நாள் முழுவதும் ஔரங்கசீப்பை வணங்கிவிட்டு, லஞ்சம் கொடுத்ததற்காக சிறைக்குச் செல்லும் நேரம் வந்ததும், மகாராணா பிரதாப் நினைவுகூரப்படுகிறார். இது போன்ற வழக்குகளிலிருந்து மன்னித்து பா.ஜ.க-வில் சேர எத்தனை நபர்கள் இருக்கிறார்கள் என்று ஊடகங்கள் மற்றும் அரசியல் வட்டாரங்களில் உள்ள அனைவருக்கும் தெரியும். பிடிபட்டால், ஒவ்வோர் ஊழல்வாதியும், திருடனும், லஞ்சம் கொடுப்பவனும் இப்படித்தான் அழுகிறார்கள்" எனத் தெரிவித்திருக்கிறார்.

அதேபோல, பா.ஜ.க தலைவர் பர்வேஷ் வர்மா, ``மணீஷ் சிசோடியா பாங் [கஞ்சா] உட்கொண்டாரா என்ன... பா.ஜ.க-வில் சேருமாறு அவரிடம் யார் கூறினார்கள்... கூறியவரின் பெயரை அவர் சொல்ல வேண்டும். அவரையெல்லாம் பா.ஜ.க சேர்த்துக்கொள்ளாது. மேலும், அவருக்கு என்னுடைய ஆலோசனைகளில் ஒன்று... அவர் தினமும் காலையில் பிராணாயாமம் செய்ய வேண்டும்" எனத் தெரிவித்திருக்கிறார்.