Published:Updated:

`பிரசாரத்தில் திமுக-வை வறுத்தெடுத்த பின்..!’ - ஹெச்.ராஜா, கே.என் நேரு சந்திப்பில் நடந்தது என்ன?

ஹெச்.ராஜாவால் கலகலத்த திருச்சி பிரசாரம்

``கடந்த சட்டமன்ற தேர்தலின் போது உதயநிதி மக்களிடம் பிரசாரம் செய்யும் போது தி.மு.க ஆட்சிக்கு வந்தவுடன் நகைக்கடன் தள்ளுபடி என்று சொன்னார். அதை நம்பி இருந்தவர்கள் தற்போது ஏமாந்து வட்டி கட்டிக் கொண்டிருக்கிறார்கள்” - ஹெச்.ராஜா

`பிரசாரத்தில் திமுக-வை வறுத்தெடுத்த பின்..!’ - ஹெச்.ராஜா, கே.என் நேரு சந்திப்பில் நடந்தது என்ன?

``கடந்த சட்டமன்ற தேர்தலின் போது உதயநிதி மக்களிடம் பிரசாரம் செய்யும் போது தி.மு.க ஆட்சிக்கு வந்தவுடன் நகைக்கடன் தள்ளுபடி என்று சொன்னார். அதை நம்பி இருந்தவர்கள் தற்போது ஏமாந்து வட்டி கட்டிக் கொண்டிருக்கிறார்கள்” - ஹெச்.ராஜா

Published:Updated:
ஹெச்.ராஜாவால் கலகலத்த திருச்சி பிரசாரம்

``தி.மு.க ஆட்சிக்கு வந்தவுடன் நகைக்கடன் தள்ளுபடி என்று சொன்னார். அதை நம்பி இருந்தவர்கள் ஏமாந்து வட்டி கட்டிக் கொண்டிருக்கிறார்கள். மக்களை ஏமாற்றி ஏமாற்றியே பிழைப்பு நடத்தும் ஒரே கட்சி தி.மு.க தான். இனியும் அவர்களது பித்தலாட்டத்தை மக்கள் நம்பமாட்டார்கள்'' என்று தி.மு.க-வை கடுமையாக விமர்சனம் செய்துவிட்டு கீழே இறங்கிய போது, எதிரே பிரசாரம் செய்து கொண்டு வந்த அமைச்சர் கே.என்.நேருவைப் பார்த்ததும் கைகொடுத்துச் சிரித்து பேசினார் ஹெச்.ராஜா.

ஹெச்.ராஜா
ஹெச்.ராஜா

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில், திருச்சி மாநகராட்சி ஸ்ரீரங்கம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள வார்டுகளில் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா இன்று காலை முதல் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். இந்நிலையில் அவர், ஸ்ரீரங்கம் ராஜகோபுரம் முன்பாக வாகனத்தில் நின்றபடியே பேசத்தொடங்கினார். ``தி.மு.க ஆட்சிக்காலத்தில் ரெளடித்தனம் செய்கிறார்கள். கோவில்களை இடிக்கிறார்கள் என்பதற்காகத் தான் மக்கள் அ.தி.மு.க-விற்கு வாக்களித்தனர். ஆனால், அ.தி.மு.க எப்போதுமே வாயை மூடிக் கொண்டே இருப்பதால் வேறு வழியில்லாமல் மீண்டும் தி.மு.க-விற்கு வாக்களித்தார்கள். இப்படி தான் இரண்டு கட்சிகளும் மாறி மாறி ஆட்சியைப் பிடிக்கிறார்கள். தர்மத்தைக் காக்க இந்த முறை பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு வாக்களியுங்கள்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இந்துக்களுக்கு எதிராக தி.மு.க அரசு செயல்படுகிறது. தமிழக அரசின் நிர்வாகம் முழுவதும் மதமாற்றம் நபர்களின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. வெறும் இரண்டரை சதவீத வாக்குகள் வித்தியாசத்தில் நீங்கள் வெற்றி பெற்றுள்ளீர். இந்துக்களின் உணர்வுகளோடு விளையாடாதீர்கள். உங்களை மக்கள் தூக்கி எறிய வெகுநாள் ஆகாது.

பிரச்சாரத்தின் போது நேர்வை சந்தித்த ஹெச்.ராஜா
பிரச்சாரத்தின் போது நேர்வை சந்தித்த ஹெச்.ராஜா

குடும்பத் தலைவிக்கு மாதம் ஆயிரம் ரூபாய் பணம் தருவதாகச் சொன்னார்களே. அது என்ன ஆனது? கடந்த சட்டமன்ற தேர்தலின் போது உதயநிதி மக்களிடம் பிரசாரம் செய்யும் போது தி.மு.க ஆட்சிக்கு வந்தவுடன் நகைக்கடன் தள்ளுபடி என்று சொன்னார். அதை நம்பி இருந்தவர்கள் தற்போது ஏமாந்து வட்டி கட்டிக் கொண்டிருக்கிறார்கள். மக்களை ஏமாற்றி ஏமாற்றியே பிழைப்பு நடத்தும் ஒரே கட்சி திமுக தான். இனியும் இவர்களது பித்தலாட்டத்தை மக்கள் நம்பமாட்டார்கள்.

தி.மு.க-வும் ஊழலும் ஒட்டி பிறந்த இரட்டை குழந்தைகள். அதிலிருந்து அவர்களைப் பிரிக்க முடியாது. மேலும் பொங்கல் தொகுப்பு கோடிக்கணக்கில் கொள்ளை அடித்துள்ளனர். பத்து வருடங்களாக ஆட்சியில் இல்லாத காரணத்தால் தற்போது ஆட்சிக்கு வந்தவுடன் கொள்ளையடித்து வருகிறார்கள். அவர்கள் என்ன செய்வார்கள், அவர்களது டி.என்.ஏ-வில் ஊழல் மறைந்திருக்கிறது.

ஹெச்.ராஜா
ஹெச்.ராஜா

இனி தி.முக அரசை மனநலம் குன்றிய அரசு என்று அழையுங்கள். நீங்கள் ஒன்றிய அரசு என்று சொல்லும் போது நாங்கள் மனநலம் குன்றிய அரசு என்று சொல்வதில் எந்த தவறும் இல்லையே. இனி சமூக வலைத்தளங்களில் பதிவு மனநலம் குன்றிய அரசு தி.மு.க என்று சேர்த்து எழுது அதனை டிரெண்டாகவும் மாற்றுங்கள்.

27 மாதங்களாக கொரோனா பரவலால் காரணமாக வீட்டிலேயே முடங்கிக் இருந்தோம். தடுப்பூசி மூலம் நம்மைக் காப்பாற்றியவர் பிரதமர் மோடி. அவருக்கு நன்றி தெரிவிக்க நாம் அனைவரும் தாமரை சின்னத்தில் வாக்களியுங்கள்.

கே.என் நேரு
கே.என் நேரு

தாமரைக்கு வாக்களிக்காமல் வேறு யாருக்காவது வாக்களித்தீர்கள் என்றால் அது மகாப்பாவம். இதனை நான் சொல்லவில்லை திருவள்ளுவர் சொல்லியிருக்கிறார். ”எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை செய்நன்றி கொன்ற மகற்கு” மோடி அவர்களுக்கு நாம் நன்றி சொல்ல வேண்டும்" என்று பேசிவிட்டு அடுத்தடுத்த பிரசாரம் செய்ய அங்கிருந்து கிளம்பிய போது தி.மு.க வேட்பாளரை ஆதரித்து கே.என் நேரு பிரசாரம் செய்ய வந்தார்.

ஹெச்.ராஜாவால் கலகலத்த திருச்சி பிரசாரம்
ஹெச்.ராஜாவால் கலகலத்த திருச்சி பிரசாரம்

அப்போது கே.என்.நேருவும், ஹெச்.ராஜாவும் வாகனத்தை விட்டு இறங்கி ஒருவரை ஒருவர் சந்தித்து கைகளை கொடுத்து நட்பு பாராட்டிக் கொண்டனர். கூடியிருந்த தொண்டர்கள் அண்ணணோட பாணியைக் கொஞ்சம் கூட புரிஞ்சிக்கவே முடியவில்லையே என்று நெளிந்தனர்.