Published:Updated:

``எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் ஆளுநர்கள் மூலம் பாஜக தலையீடு!" - ராகுல் காந்தி குற்றச்சாட்டு

ராகுல் காந்தி

``மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்களின் ஆட்சியை பா.ஜ.க-வால் நியமிக்கப்படும் ஆளுநர்கள் குறுக்கீடு செய்வது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது." - ராகுல் காந்தி

``எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் ஆளுநர்கள் மூலம் பாஜக தலையீடு!" - ராகுல் காந்தி குற்றச்சாட்டு

``மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்களின் ஆட்சியை பா.ஜ.க-வால் நியமிக்கப்படும் ஆளுநர்கள் குறுக்கீடு செய்வது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது." - ராகுல் காந்தி

Published:Updated:
ராகுல் காந்தி

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், வயநாடு எம்.பி-யுமான ராகுல்காந்தி பாரத் ஜோடோ யாத்ரா என்ற பெயரில் நாடுமுழுவதும் நடைப்பயணம் மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில், நீலகிரி மாவட்டம் கூடலூரில் நேற்று மாலை 6 கிலோமீட்டர் நடைபயணம் மேற்கொண்ட இவர் கூடலூர் நகரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் தொண்டர்கள் மத்தியில் பேசினார்.

ராகுல் காந்தி
ராகுல் காந்தி

அப்போது பா.ஜ.க மீது குற்றச்சாட்டுகளை அடுக்கிய ராகுல் காந்தி, "பல மதங்கள் மற்றும் பல மொழிகளைக் கொண்டிருக்கும் மக்கள் வாழும் இந்தியா எனும் ஒற்றுமை நதியை, ஒரே மொழி ஒரே மாதம் என்று பா.ஜ.க சீர்குலைக்க முயற்சிக்கிறது. இந்த அமைதி நதியில் வன்முறையை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம். எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் கவர்னர்களை வைத்து பா.ஜ.க மற்றும் ஆர்.எஸ்.எஸ் தலையீடு செய்து வருகிறது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்களின் ஆட்சியை பா.ஜ.க-வால் நியமிக்கப்படும் ஆளுநர்கள் குறுக்கீடு செய்வது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

ராகுல் காந்தி
ராகுல் காந்தி

மக்களிடம் பிரிவினையை ஏற்படுத்தி பா.ஜ.க வெறுப்பு அரசியல் நடத்தி வருகிறது. ஜி.எஸ்.டி மற்றும் பண மதிப்பிழப்பால் சிறு, குறு தொழில் செய்யும் பெரும்பாலான மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், மத்திய அரசு மாநில அரசுகளுக்கு ஜி.எஸ்.டி பணத்தை திருப்பி கொடுக்க வேண்டும். இந்தியாவில் தற்போது வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்திருக்கிறது. விலைவாசி கடுமையாக உயர்ந்திருக்கிறது.

ராகுல் காந்தி
ராகுல் காந்தி

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலை நாள்தோறும் உயர்ந்து வருகிறது. ஜி.எஸ்.டி மற்றும் பண மதிப்பிறக்கம் இந்தியாவிலுள்ள மூன்று பெரிய பணக்காரர்களுக்குச் சாதகமாக அமைந்திருக்கிறது. பா.ஜ.க அரசு ஜி.எஸ்.டி மூலம் மக்களின் பணத்தைச் சுரண்டி வருகிறது. இந்தியாவில் வாழும் அனைத்து மக்களுக்கும் அனைத்தும் சென்றடைய வேண்டும் என்பதே காங்கிரஸ் கட்சியின் நோக்கம். இதுவே பாரத் ஜோடோ யாத்திரையின் குறிக்கோள்" என்றார்.