Published:Updated:

சீனாவிலிருந்து தேசியக்கொடி இறக்குமதி... பாஜக-வைச் சாடிய காங்கிரஸ்!

தேசியக்கொடி

``சுதந்திரப் போராட்டத்துக்குச் சம்பந்தமே இல்லாத ஒரு கட்சி இப்போது காதித் தொழிலை முற்றிலுமாக அழிக்க முடிவு செய்திருக்கிறது." - காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் அஜோய் குமார்

சீனாவிலிருந்து தேசியக்கொடி இறக்குமதி... பாஜக-வைச் சாடிய காங்கிரஸ்!

``சுதந்திரப் போராட்டத்துக்குச் சம்பந்தமே இல்லாத ஒரு கட்சி இப்போது காதித் தொழிலை முற்றிலுமாக அழிக்க முடிவு செய்திருக்கிறது." - காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் அஜோய் குமார்

Published:Updated:
தேசியக்கொடி

இந்தியாவின் 75-வது சுதந்திர தினத்தைக் குறிக்கும் வகையில் ‘ஹர் கர் திரங்கா’ எனும் பிரசாரம் தொடங்கப்படவிருக்கிறது. இதற்கிடையில் மத்திய அரசு தற்போது, இயந்திரத்தின் மூலம் செய்யப்பட்ட பாலியஸ்டர் துணியிலான கொடிக்கும் அனுமதி வழங்கியிருக்கிறது. இந்தத் திருத்தம் கொண்டுவருவதற்கு முன்பு, காதியால் செய்யப்பட்ட கொடிகளை மட்டுமே அதிகாரபூர்வ நோக்கங்களுக்காகப் பயன்படுத்த அனுமதியளிக்கப்பட்டிருந்தது. மேலும் பாலியஸ்டர் அல்லது இயந்திரம் மூலம் செய்யப்படும் தேசியக்கொடிகளுக்கும் ஜி.எஸ்.டி-யிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டிருக்கிறது.

இந்த நிலையில் காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் அஜோய் குமார், மத்திய அரசின் இந்த திடீர் முடிவு குறித்து பா.ஜ.க-வை இன்று விமர்சித்திருக்கிறார்.

காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் அஜோய் குமார்
காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் அஜோய் குமார்
twitter

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அஜோய் குமார். ``பா.ஜ.க., நாட்டின் அரசு சொத்துகளை விற்றுவருகிறது. நாட்டின் கருவூலம் குறைந்துகொண்டேவருவதால், இப்போது தேசியக்கொடியை விற்கும் நோக்கத்தில் அவர்கள் இருக்கின்றனர். பாலியஸ்டர் எங்கிருந்து வருகிறது, சீனாவிலிருந்து. லடாக்கில் 1,000 சதுர கிலோமீட்டர் நிலப்பரப்பை சீனப் படைகள் தொடர்ந்து ஆக்கிரமித்திருக்கும் நிலையில், தற்போது சீனாவிலிருந்து இந்தியக் கொடிகளைப் பெருமளவில் இறக்குமதி செய்வதற்கான கதவை பிரதமர் மோடி திறந்துவிட்டிருக்கிறார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மோடி
மோடி

அதுமட்டுமல்லாமல், சீனத் தொழிலதிபர்களுக்குப் பலன் அளிக்கும் வகையிலேயே இத்தகைய சட்டத் திருத்தத்தை மோடி செய்திருக்கிறார். இதன் மூலம் காதியின் சாரத்தையும், மகாத்மா காந்தியின் பாரம்பர்யத்தையும் மோடி தகர்த்திருக்கிறார். சுதந்திரப் போராட்டத்துக்குச் சம்பந்தமே இல்லாத ஒரு கட்சி இப்போது காதித் தொழிலை முற்றிலுமாக அழிக்க முடிவு செய்திருக்கிறது" எனக் கூறினார்.