Published:Updated:

``நான் இப்போது காங்கிரஸில் இல்லை; வெளிப்படையாக கூறுகிறேன்..." - பாஜக-வில் இணைந்த அமரீந்தர் சிங்

பஞ்சாப் முன்னாள் முதல்வர் அமரீந்தர் சிங் ( ட்விட்டர் )

``பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சர் மற்றும் கட்சித் தலைவர் ஆகியோருக்கு நான் இன்று நன்றியுள்ளவனாக இருக்கிறேன்" - அமரீந்தர் சிங்

``நான் இப்போது காங்கிரஸில் இல்லை; வெளிப்படையாக கூறுகிறேன்..." - பாஜக-வில் இணைந்த அமரீந்தர் சிங்

``பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சர் மற்றும் கட்சித் தலைவர் ஆகியோருக்கு நான் இன்று நன்றியுள்ளவனாக இருக்கிறேன்" - அமரீந்தர் சிங்

Published:Updated:
பஞ்சாப் முன்னாள் முதல்வர் அமரீந்தர் சிங் ( ட்விட்டர் )

பா.ஜ.க தனது ஆட்சியின் கீழ் இந்தியாவின் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளது என பா.ஜ.க-வில் தனது பஞ்சாப் லோக் காங்கிரஸ் கட்சியுடன் இணைந்த முன்னாள் காங்கிரஸ் தலைவர் அமரீந்தர் சிங் தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக அவர் செய்தியாளர்கள் சந்திப்பின் போது, ``நாம் ஒரு பக்கம் பாகிஸ்தான் ஒரு பக்கம் சீனா என இரண்டு எல்லைகளில், இரண்டு விரோத நாடுகளால் சூழப்பட்டுள்ளோம். இதில் நடுவில் கஷ்டப்படப் போவது நாம்தான்.

துரதிர்ஷ்டவசமாக சீனா ஆயுதங்களில் நம்மை விட முன்னோக்கி உள்ளது. இது காங்கிரஸ் கட்சியின் தவறு... நான் இப்போது காங்கிரஸில் இல்லை என்பதால் வெளிப்படையாக அதைக் கூறுகிறேன். எனவே, நமது நாட்டைப் பாதுகாப்பது நமது கடமையாகும். நாம் அதைச் செய்யாவிட்டால், நமது பொறுப்பை செய்யாதவர்களாகிவிடுவோம். இன்று இந்திய கடற்படையில் பல கப்பல்கள் சேர்க்கப்படுவதை பார்க்கிறீர்கள். உண்மையில் இந்தியாவுக்கு நிறைய ஆயுதங்கள் வருகிறது, அது நம் தேசத்தைப் பாதுகாப்பதற்கு அவசியம்.

பா.ஜ.க-வில் இணைந்த போது பஞ்சாப் முன்னாள் முதல்வர் அமரீந்தர் சிங்
பா.ஜ.க-வில் இணைந்த போது பஞ்சாப் முன்னாள் முதல்வர் அமரீந்தர் சிங்
ட்விட்டர்

இது, நம் நாட்டிற்காகவும், நமக்காகவும் என்ன செய்ய முடியும் என்பதைப் பற்றி நம்மில் பலரை சிந்திக்க வைத்துள்ளது. நாம் அதைச் செய்ய விரும்பினால், நாட்டின் நலனைக் காக்கும் கட்சியில் சேர வேண்டிய நேரம் இது ... அதுதான் பா.ஜ.க. மேலும் பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சர் மற்றும் கட்சித் தலைவர் ஆகியோருக்கு நான் இன்று நன்றியுள்ளவனாக இருக்கிறேன். நான் ஒரு எல்லை மாநிலத்தில் சுமார் 52 ஆண்டுகளாக அரசியலில் இருக்கிறேன்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

பாகிஸ்தானுடனான நமது உறவு எப்படி மோசமடைந்தது என்பதை நான் பார்த்திருக்கிறேன். பாகிஸ்தானின் அணுகுமுறை மற்றும் அவர்கள் முன்வைத்த பகைமை... 1947. பஞ்சாப் 1965. மற்றும் 1971-ல் பங்களாதேஷ் போர் என எது நடந்தபோதும் முன்னணியில் இருந்தது பஞ்சாப் மாநிலம்தான். அதனால், நாங்கள் எல்லா நேரத்திலும் பாதிக்கப்பட்டுள்ளோம்.

பஞ்சாப் முன்னாள் முதல்வர் அமரீந்தர் சிங்
பஞ்சாப் முன்னாள் முதல்வர் அமரீந்தர் சிங்
ட்விட்டர்

கடந்த நான்கைந்து ஆண்டுகளில் ஏற்பட்டுள்ள இந்த புதிய ட்ரோன் தாக்குதல் குறித்து உள்துறை அமைச்சர் மற்றும் பிரதமரின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளேன். ட்ரோன்கள் ஆரம்பத்தில் 7 கிலோமீட்டர் வரை பயணித்தது. ஆனால், கடந்த ஆண்டு நான் அரசை விட்டு வெளியேறியபோது, ​​42 - 43 கிலோமீட்டர் தூரம் வரை தற்போது பயணிக்கிறது. இவை பெரிய ஆளில்லா விமானங்கள் எடுத்துச் செல்லும் பொருள்களை சுமந்து வருகின்றன. ஆயுதங்கள், போதைப் பொருட்கள், பணம் மற்றும் கள்ள நோட்டுகளை இந்தியாவுக்குள் கொண்டு வருகிறார்கள். எல்லாம் இங்கே இறங்குகிறது. எல்லை மாநிலங்களில் அவர்கள் தேவை என்று நினைக்கும் இடங்களில் முழுமையான குழப்பத்தை உருவாக்குவதே இதன் நோக்கம்.

இப்போது நாங்கள் உள்ளூர் கட்சியாக கருதப்படுகிறோம். அதனால் நாங்கள் அங்கு சிக்கிக்கொண்டோம் என்று அர்த்தமல்ல. நாங்கள் எல்லைகளைத் தாண்டி வளர்ந்துள்ளோம், இமாச்சலப் பிரதேசத்தில் ஆயிரக்கணக்கான தொண்டர்களைப் பெற்றுள்ளோம், மேலும் ஹரியானாவிலும் எங்கள் கட்சி விரிவடையும் என்று நம்புகிறோம்." எனத் தெரிவித்திருக்கிறார்.