Published:Updated:

பீகார்: பாஜக கூட்டணியிலிருந்து வெளியேறிய முதல்வர் நிதிஷ்; துணை முதல்வராகிறாரா லாலு மகன்?!

லாலு மகன் - தேஜஸ்வி யாதவ்

பீகார் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும், ராஷ்ட்ரிய ஜனதா தளத்தின் தேஜஸ்வி யதாவுக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்படவிருப்பதாகச் செய்திகள் வெளியாகியிருக்கின்றன.

பீகார்: பாஜக கூட்டணியிலிருந்து வெளியேறிய முதல்வர் நிதிஷ்; துணை முதல்வராகிறாரா லாலு மகன்?!

பீகார் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும், ராஷ்ட்ரிய ஜனதா தளத்தின் தேஜஸ்வி யதாவுக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்படவிருப்பதாகச் செய்திகள் வெளியாகியிருக்கின்றன.

Published:Updated:
லாலு மகன் - தேஜஸ்வி யாதவ்

பீகாரில் கடந்த சில நாள்களாகவே, ஆளுங்கட்சி கூட்டணியான ஐக்கிய ஜனதா தளம்-பா.ஜ.க இடையே அரசியல் மோதல்கள் நிலவுவதாகச் செய்திகள் வெளியான நிலையில், இன்று அதில் வெளிப்படையான முடிவே எட்டப்பட்டுவிட்டது. முன்னதாக கடந்த 7-ம் தேதியன்று, மத்திய அரசு சார்பில் நடத்தப்பட்ட நிதி ஆயோக் கூட்டத்தை, முதல்வர் நிதிஷ் குமார் புறக்கணித்ததையடுத்து, பீகார் ஆளுங்கட்சி கூட்டணியில் வெளிப்படையாக விரிசல் விழத்தொடங்கியது.

நிதிஷ்குமார் - தேஜஸ்வி
நிதிஷ்குமார் - தேஜஸ்வி

அதைத் தொடர்ந்து நிதிஷ் குமார், ஐக்கிய ஜனதா தளத்தைச் சேர்ந்த எம்.பி., எம்.எல்.ஏ-க்களை அழைத்து சிறப்புக் கூட்டத்தை இன்று நடத்தினார். கூட்டத்தின் முடிவில், இறுதியாக ஐக்கிய ஜனதா தளம்-பா.ஜ.க இடையே கூட்டணி அரசுக்கு முடிவுக்கு வந்திருக்கிறது. மேலும், நிதிஷ் குமார் விரைவில் ஆளுநரைச் சந்திக்கவிருப்பதாகக் கூறப்படும் நிலையில், பீகார் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும் ராஷ்ட்ரிய ஜனதா தளத்தின் தேஜஸ்வி யதாவுக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்படவிருப்பதாகச் செய்திகள் வெளியாகியிருக்கின்றன.

லாலு பிரசாத் யாதவ்
லாலு பிரசாத் யாதவ்

மறுபக்கம், இந்த செய்தியை கிட்டத்தட்ட உறுதிப்படுத்தும் விதமாக, லாலு பிரசாத் யாதவின் மகள் ரோகினி ஆச்சார்யா ட்வீட் செய்திருக்கிறார். ரோகினி ஆச்சார்யா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் போஜ்புரி பாடல் ஒன்றை பதிவிட்டு, ``முடிசூட்டு விழாவுக்குத் தயாராகுங்கள், விளக்கு ஏற்றுபவர்கள் வருகிறார்கள். லாலு இல்லாமல் பீகாரை இயக்க முடியாது" என இந்தியில் ட்வீட் செய்திருக்கிறார். ராஷ்ட்ரிய ஜனதா தளத்தை நிறுவியவரும், பீகாரின் முன்னாள் முதல்வருமான லாலு பிரசாத் யாதவ் மாட்டுத் தீவன ஊழல் வழக்கில் கைதான பிறகு கட்சியை, அவரின் மகன் தேஜஸ்வி யாதவ்தான் முன்னிருந்து நடத்துகிறார். மேலும் லாலு பிரசாத் யாதவ், மாட்டுத் தீவன ஊழல் வழக்கில் தற்போது ஜாமீனில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.