Published:Updated:

என்ன திராவிட மாடல் மண்ணாங்கட்டி மாடல்..?! - கரு.நாகராஜன் காட்டம்!

கரு.நாகராஜன்
பிரீமியம் ஸ்டோரி
கரு.நாகராஜன்

தமிழ் நாட்டில் சிறிய கட்சி, பெரிய கட்சி என்கிற பேச்சையெல்லாம் உள்ளாட்சித் தேர்தலில் மூன்றாம் இடத்துக்கு வந்தபோதே உடைத்து விட்டோம்.

என்ன திராவிட மாடல் மண்ணாங்கட்டி மாடல்..?! - கரு.நாகராஜன் காட்டம்!

தமிழ் நாட்டில் சிறிய கட்சி, பெரிய கட்சி என்கிற பேச்சையெல்லாம் உள்ளாட்சித் தேர்தலில் மூன்றாம் இடத்துக்கு வந்தபோதே உடைத்து விட்டோம்.

Published:Updated:
கரு.நாகராஜன்
பிரீமியம் ஸ்டோரி
கரு.நாகராஜன்

பா.ஜ.க குறித்த பொன்னை யனின் விமர்சனம், அதற்கு பா.ஜ.க மாநில துணைத் தலைவர் வி.பி.துரை சாமியின் பதிலடி, வி.பி.துரைசாமியை எடப்பாடி பழனிசாமி பதிலுக்கு விமர்சித்திருப்பது போன்ற சம்பவங் களால் அ.தி.மு.க - பா.ஜ.க கூட்டணிக் குள் சச்சரவு அதிகமாகிக் கொண்டே செல்கிறது. இந்தப் பிரச்னைகள் பற்றிய கேள்விகளுடன் தமிழக பா.ஜ.க பொதுச்செயலாளர் கரு.நாகராஜனைச் சந்தித்தோம்.

“ ‘தமிழ்நாட்டில் பா.ஜ.க வளர்வது அ.தி.மு.க-வுக்கு நல்லதல்ல’ என்ற பொன்னையனின் கருத்தை எப்படிப் பார்க்கிறீர்கள்?”

“பொன்னையன் அரசியலில் மூத்த தலைவர், ரொம்பவும் அனுபவப்பட் டவர். அப்படிப்பட்டவர் பக்குவமில் லாமல் பேசியிருக்கும்விதம் தவறா னது; கண்டிக்கத்தக்கது. கூட்டணியி லேயே இருக்கும் அ.தி.மு.க-விடமிருந்து எப்படி இப்படி ஒரு கருத்து வந்தது என்பது கேள்விக்குரிய விஷயம். அதுவும் பா.ஜ.க பற்றி ஸ்டாலினைவிட மோசமான குற்றச்சாட்டை முன்வைக் கிறார். அவர் பேசிய இடமும் தன்னிச் சையானதல்ல. அ.தி.மு.க தலைமைக் கழக அலுவலகத்தில், பயிற்சிப் பட்ட றையில் இப்படிப் பேசும்போது அது அதிகாரபூர்வமான பேச்சாகிவிடு கிறது. தி.மு.க-வினர் எங்களுக்குப் பொது எதிரி. அவர்கள் விமர்சிக்கலாம். ஆனால் அ.தி.மு.க-வில் இருக்கும் சிலர் ஏன் குழப்புகிறார்கள் என்பது புரியவில்லை. இப்படியே போய்க்கொண்டிருந் தால் கூட்டணிக் குள் ஐக்கியம் இல்லாமல் போய்விடும்.”

“தி.மு.க பொது எதிரி என்றால், அதை எதிர்த்து பா.ஜ.க நடத்தும் போராட்டங்களில் ஏன் உங்கள் கூட்டணிக் கட்சிகளே கலந்துகொள்வதில்லை?”

“நாங்கள் அழைப்பதில்லை. ஒவ்வொரு கட்சிக்கும் தனிப்பட்ட கொள்கை இருக்கிறது. பொதுவான பிரச்னைகளில் ஒன்று சேர்கிறோம்.”

“பெட்ரோல், டீசல் விலையேற்றமெல்லாம் பொதுவான பிரச்னைதானே..?”

“நீட் விவகாரம், மும்மொழிக் கொள்கை போன்ற பிரச்னைகளில் எங்கள் நிலைப்பாட்டி லிருந்து பா.ம.க-வும் அ.தி.மு.க-வும் வேறுபடுகின் றன. எனவே, அவர்கள் வந்தால்தான் நாங்கள் போராடுவோம் என்றில்லாமல், தமிழர் நலன் சார்ந்து, தமிழ்நாட்டு முன்னேற்றத்துக்கு முதல் குரல் கொடுக்கக்கூடிய கட்சியாகத் தமிழக பா.ஜ.க இன்று உருவாகிக்கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டு மக்களும் பா.ஜ.க முன்னெடுக்கும் போராட்டங்களில் அதிக அளவில் தன்னெழுச்சி யாகக் கலந்துகொள்கிறார்கள்.”

“இப்போதும் உங்கள் கூட்டணி தொடர்கிறதா?”

“கூட்டணி தொடர்கிறது என்றுதான் அவர் களும் சொல்கிறார்கள். கூட்டணியில் இருப்பதால் தானே மாநிலங்களவைத் தேர்தலுக்கு பா.ஜ.க., பா.ம.க-விடம் ஓட்டுக் கேட்கிறார்கள் அ.தி.மு.க-வினர்?”

என்ன திராவிட மாடல் மண்ணாங்கட்டி மாடல்..?! - கரு.நாகராஜன் காட்டம்!

“கூட்டணியில் இருக்கும் அன்புமணி ராமதாஸே, ‘பா.ஜ.க தமிழ்நாட்டில் சிறிய கட்சி’ என்று கூறியிருக்கிறாரே?”

“அன்புமணி ராமதாஸ் சொல்வதெல்லாம் வேடிக்கையாகத்தான் இருக்கின்றன. தமிழ் நாட்டில் சிறிய கட்சி, பெரிய கட்சி என்கிற பேச்சையெல்லாம் உள்ளாட்சித் தேர்தலில் மூன்றாம் இடத்துக்கு வந்தபோதே உடைத்து விட்டோம். சில இடங்களில் அ.தி.மு.க-வைப் பின்னுக்குத் தள்ளி இரண்டாம் இடம்கூட வந்தோமே... தமிழ்நாட்டில், காங்கிரஸ் Vs கம்யூ னிஸ்ட், காங்கிரஸ் Vs தி.மு.க., தி.மு.க Vs அ.தி.மு.க என்று அரசியல் களம் மாறியிருக்கிறது. அவர்கள் மாறி மாறித்தான் ஆளுங்கட்சியாக வந்திருக்கிறார்கள். அது இனி தி.மு.க Vs பா.ஜ.க-தான் என்றாகலாம். பா.ஜ.க-வுக்கு அடுத்துத்தான் பா.ம.க., நா.த.க எல்லாமே... வரும் தேர்தலில் பா.ஜ.க-வின் எழுச்சியைப் பார்க்கத்தானே போகிறீர்கள்...”

“அப்படியென்றால் தனித்து நிற்கப்போகிறீர்களா...?”

“அது தேசிய, மாநிலத் தலைமை எடுக்கக்கூடிய முடிவு. இப்போதைக்கு எதுவும் சொல்ல முடியாது.”

“ ‘ஊடக வெளிச்சம் பட வேண்டுமென்பதற்காகவே பக்குவம் இல்லாமல் சில விஷயங்களைப் பேசிவருகிறார் அண்ணாமலை’ என்கிற விமர்சனத்தை எப்படிப் பார்க்கிறீர்கள்?”

“அண்ணாமலையின் பேச்சு மக்களிடம் தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதுதான் இவர்களின் விமர்சனத்துக்குக் காரணம். செயல்படுகிறவர்கள் மீதுதானே ஊடக வெளிச்சம் பட முடியும்... ஊடக வெளிச்சம் பட வேண்டும் என்பதற்காக நாங்கள் செயல்படுவதில்லை. எங்களுக்கு அதைவிட நிறைய வேலைகள் இருக்கின்றன. இப்படி விமர்சிப்பவர்களுக்குத் தெரிந்த ஒரே சுப்ரபாதம் ஸ்டாலின் புகழ் பாடுவது மட்டும்தான். அதை மட்டும்தான் அவர்கள் சரியாகச் செய்துகொண்டிருக் கிறார்கள்.”

“உங்கள் பார்வையில் ‘திராவிட மாடல்’?

“என்ன திராவிட மாடல்.... மண்ணாங்கட்டி மாடல்... என்றைக்கு திராவிடன் என்று சொன் னார்களோ அன்றிலிருந்து தமிழன் தலையில் மண் விழுந்தது. ராஜராஜ சோழன், பாண்டிய மன்னன், வேலு நாச்சியார் போன்ற எல்லோ ரையும் திராவிடர் என்பீர்களா... தமிழர்களின் தொன்மத்தை அழிப்பதுதான் திராவிட மாடல். இந்த வீண் பேச்சையெல்லாம் விட்டுவிட்டு தமிழ் மாநிலத்துக்குவேண்டிய திட்டங்களைக் கொண்டுவரவும், தமிழ் மக்கள் உரிமைகளைப் பாதுகாக்கவும் வேலை செய்யுங்கள். ‘தமிழர் உரிமைக்காக பா.ஜ.க-வைத் திட்டுகிறேன், மோடியோடு சண்டை போடுகிறேன்’ என்கிற நாடகமெல்லாம் இனி எடுபடாது.  கடைக்கோடி மக்களுக்கும் திட்டங்களெல்லாம் சென்று சேரும் வகையில் வேலை பாருங்கள். பா.ஜ.க அதைத்தான் செய்துகொண்டிருக்கிறது!”

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism