Published:Updated:

``தேசியக்கொடியேற்ற அனுமதி மறுப்பு; திமுக ஆட்சியில் பெயரளவில் மட்டுமே சமூக நீதி..!"- அண்ணாமலை

ஸ்டாலின் - அண்ணாமலை

சுதந்திர தினத்தன்று பட்டியலினத்தைச் சேர்ந்த ஊராட்சித் தலைவர்களுக்கு கொடியேற்ற அனுமதி மறுக்கப்பட்டிருப்பதாக, தி.மு.க அரசை விமர்சித்து அண்ணாமலை அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.

``தேசியக்கொடியேற்ற அனுமதி மறுப்பு; திமுக ஆட்சியில் பெயரளவில் மட்டுமே சமூக நீதி..!"- அண்ணாமலை

சுதந்திர தினத்தன்று பட்டியலினத்தைச் சேர்ந்த ஊராட்சித் தலைவர்களுக்கு கொடியேற்ற அனுமதி மறுக்கப்பட்டிருப்பதாக, தி.மு.க அரசை விமர்சித்து அண்ணாமலை அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.

Published:Updated:
ஸ்டாலின் - அண்ணாமலை

தமிழ்நாட்டில் ஆளுங்கட்சியாக இருக்கும் தி.மு.க-வின், திராவிட மாடலை பா.ஜ.க தொடர்ந்து விமர்சித்துவருகிறது. குறிப்பாக அந்தக் கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை மேடைதோறும் தி.மு.க-வின் திராவிட மாடலை கடுமையாகச் சாடிப் பேசிவருகிறார்.

இந்த நிலையில், சுதந்திர தினத்தன்று பட்டியலினத்தைச் சேர்ந்த ஊராட்சித் தலைவர்களுக்கு கொடியேற்ற அனுமதி மறுக்கப்பட்டிருப்பதாக, தி.மு.க அரசை விமர்சித்து அண்ணாமலை அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.

அண்ணாமலை
அண்ணாமலை

அந்த அறிக்கையில், ``இங்கு, சமூக நீதியை நிலைநாட்டி விட்டோம் என்று மேடைக்கு மேடை பேசுவதும், தங்களுக்குத் தாங்களே சமூகநீதி காவலர் என்ற பட்டங்களைச் சூட்டிக் கொள்வதை வாடிக்கையாகவும் கொண்டிருக்கின்றனர் தி.மு.க தலைவர்கள். சமீபத்தில் சின்னசேலம் வட்டம், எடுத்தவாய்நத்தம் ஊராட்சித் தலைவர் சுதா வரதராஜ், ஒரு பட்டியலினத்தைச் சேர்ந்தவர் என்ற காரணத்தைச் சொல்லி, சுதந்திர தினத்தன்று நமது தேசியக்கொடியை ஏற்ற அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டதாகச் செய்திகள் வந்தன. அதையடுத்து, கள்ளக்குறிச்சி மாவட்டத் தலைவருடன் நம்முடைய மாநில துணைத் தலைவர் சம்பத், சுதா வரதராஜை நேரில் சந்தித்து, இது தொடர்பாக மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்தார். பிறகு நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் சுதா வரதராஜ், சுதந்திர தினத்தன்று தேசியக்கொடியை ஏற்றலாம் என்ற தீர்வு எட்டப்பட்டிருக்கிறது.

அறிக்கை
அறிக்கை

மேலும், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு இயக்கம் நடத்திய கணக்கெடுப்பில் திடுக்கிடும் உண்மைகள் வெளிவந்திருக்கின்றன. 24 மாவட்டங்களில் 386 ஊராட்சிகளில் நடத்தப்பட்ட கணக்கெடுப்பில், பட்டியலினத்தைச் சேர்ந்த 20 ஊராட்சித் தலைவர்களுக்குச் சுதந்திர தினத்தன்று தேசியக்கொடியை ஏற்ற அனுமதி மறுக்கப்பட்டுள்ள செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. அதுமட்டுமல்லாது 22 ஊராட்சிகளில், பட்டியலினத்தைச் சேர்ந்த ஊராட்சித் தலைவர்களுக்கு அமர இருக்கை மறுக்கப்பட்டு தரையில் அமர்த்தப்படுகிறார்கள். 42 ஊராட்சிகளில், ஊராட்சித் தலைவர்களின் பெயர்ப் பலகை வைப்பதற்கு அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது.

அண்ணாமலை
அண்ணாமலை

இங்கு அமர்ந்துகொண்டு உத்தரப்பிரதேசத்தில் என்ன நடக்கிறது, பீகாரில் என்ன நடக்கிறது என்று விவாதித்துக் கொண்டிருக்கும் சிலர், தமிழ்நாட்டில் சம உரிமையோடு அனைத்து மக்களும் வாழ்ந்து வருகிறார்கள் என்ற மாயையில் இருக்கிறார்கள். தி.மு.க ஆட்சியில் சமூக நீதி என்பது பெயரளவில் மட்டுமே இருக்கிறது என்பதைச் சமீபகாலமாக நடக்கும் பல சம்பவங்கள் உறுதிப்படுத்தியிருக்கின்றன" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.