Published:Updated:

``சீமான் தன் கோமாளித்தனத்தை நிறுத்திக் கொள்ள வேண்டும்" - ஹெச்.ராஜா தாக்கு

ஹெச்.ராஜா

``பிற மாநிலங்களில் வசிக்கும் தமிழர்களுக்கு அங்கு ஓட்டுரிமை வழங்கக் கூடாது என சீமான் சொல்வாரா... அவரே வேறு மாநிலத்திலிருந்து வந்தவர்தான்." - ஹெச்.ராஜா

``சீமான் தன் கோமாளித்தனத்தை நிறுத்திக் கொள்ள வேண்டும்" - ஹெச்.ராஜா தாக்கு

``பிற மாநிலங்களில் வசிக்கும் தமிழர்களுக்கு அங்கு ஓட்டுரிமை வழங்கக் கூடாது என சீமான் சொல்வாரா... அவரே வேறு மாநிலத்திலிருந்து வந்தவர்தான்." - ஹெச்.ராஜா

Published:Updated:
ஹெச்.ராஜா

​தேனி மாவட்டம், வீரபாண்டியில் பா​.​ஜ​.​க மாநில இளைஞரணி முன்னாள் செயற்குழு உறுப்பினர் மோடி கார்த்திக் இல்லத் திருமண விழா இன்று நடைபெற்றது. இ​தில் பங்கேற்ற பா.ஜ.க முன்னாள் தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா,​ மணமக்களை வாழ்த்தினர். இதையடுத்து​ செய்தியாளர்களைச் சந்தித்த​ ஹெச்.ராஜா, ​``நவம்பர் 6​-ம் தேதி அன்று​​ நடைபெறவிருக்கும் ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியும், தமிழக காவல்துறை தந்திரமாகச் செயல்பட்டு ஒருசில இடங்களுக்கு அனுமதி மறுத்திருப்பது கண்டிக்கத்தக்கது. 

ஹெச்.ராஜா
ஹெச்.ராஜா

​பாப்புலர் ​ஃப்​​ரன்ட் ஆஃப் இந்தியா அமைப்புக்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து திருமாவளவன், யாசின் மாலிக்கின் கைக்கூலி சீமான் போன்றோர் நடத்திய மனிதச்சங்கிலிக்கு அரசு, உளவுத்துறை அனுமதியை பெறவில்லை. தடைசெய்யப்பட்ட இயக்கத்துக்கு ஆதரவாக மனிதச்சங்கிலி நடத்திய திருமாவளவன், சீமான் ‌இருவரும் பிரிவினைவாதிகள், தீய சக்திகளாக உள்ளனர். 

​தமிழகத்தில் பிற மாநிலத்தவர்களுக்கு ஓட்டுரிமை வழங்கக் கூடாது என்று ​கூறும் ​சீமான்​ ஒரு கோமாளி. பிரபாகரன் ஆமைக் கறி ஊட்டிவிட்டதாக​க்​ கூறும் முட்டாள், தமிழனே அல்லாத சீமான், தமிழர்களைப் பற்றி பேச என்ன இருக்கிறது. ​​பிற மாநிலங்களில் வசிக்கும் தமிழர்களுக்கு அங்கு ஓட்டுரிமை வழங்கக் கூடாது என சீமான் சொல்வாரா... அவரே வேறு மாநிலத்திலிருந்து வந்தவர்தான். எனவே, இப்படி உளறும் கோமாளித்தனத்தை அவர் நிறுத்திக்கொள்வது நல்லது.

ஹெச்.ராஜா
ஹெச்.ராஜா

​கோவை கார் குண்டுவெடிப்புக்கு மறு நாளே, அதில் தொடர்புடையவர்கள் கேரளாவில் என்.ஐ.ஏ-வால் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்கள்.​ ​பல தீவிரவாத வழக்குகளில் குற்றவாளிகளைக் கைதுசெய்த என்.ஐ.ஏ இந்த வழக்கை விசாரிப்பதால் அதன் நடவடிக்கைகள் சரியாக இருக்கும் என்பது என்னுடைய நம்பிக்கை​. 

​தமிழக ஆளுநரைத் திரும்பப் பெற வேண்டும் என்று தி.மு.க-வினர் கூறிவரு​கின்றனர். கவர்னர் யார் வீட்டு சர்வன்ட்... கவர்னரை நியமிக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு உண்டு. அவரைத் திரும்ப அனுப்ப வேண்டும் என்று சொல்வதெல்லாம் கோமாளித்தனம். அதற்கு அதிகாரமும் கிடையாது. இது குறித்து திருமாவளவன் போன்ற கட்சியினர் என்ன வேண்டுமானாலும் பேசட்டும். அவர் ஒரு தீயசக்தி, பிரிவினைவாதி. அவர்கள் என்ன வேண்டுமானாலும் பேசட்டும். கவர்னரை மாற்றக் கூறுவது 100 சத​விகிதம் அரசியல் சாசனத்துக்கு எதிரானது. எனவே, கவர்னரை மாற்றச் சொல்வது தவறானது.​

ஹெச்.ராஜா
ஹெச்.ராஜா

​சோனியா​ காந்தி​ தலைமையிலான தமிழ் விரோத காங்கிரஸ் கட்சி பெங்களூரில் 30 ஆண்டுகளாக வள்ளுவர் சிலையை சாக்குப்படுதாவில் சுற்றிவைத்திருந்தது. பா​.​ஜ​.​க​-வின் ​முதல் முதல்வராக எடியூரப்பா வந்ததும் அந்தச் சிலை திறக்கப்பட்டது. பெங்களூர் மாநகராட்சியில் 18 தமிழர்கள் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டனர். சீமான் போன்றவர்கள் அரசியலில் விரும்பத்தகாத சக்திகள். மொழி உணர்வை, மாநில உணர்வை தூண்டிவிடுபவர்கள்" என்று கூறினார். ​​