Published:Updated:

``இசையின் மேஸ்ட்ரோவான இளையராஜாவை அவமானப்படுத்துவதா?” - ஜே.பி.நட்டா கண்டனம்

ஜே.பி.நட்டா

`இளையராஜாவுக்கு எதிரான விமர்சனங்கள் ஜனநாயகத்துக்கு எதிரானவை’ என பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா கண்டனம் தெரிவித்துள்ளார்.

``இசையின் மேஸ்ட்ரோவான இளையராஜாவை அவமானப்படுத்துவதா?” - ஜே.பி.நட்டா கண்டனம்

`இளையராஜாவுக்கு எதிரான விமர்சனங்கள் ஜனநாயகத்துக்கு எதிரானவை’ என பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா கண்டனம் தெரிவித்துள்ளார்.

Published:Updated:
ஜே.பி.நட்டா

புளூ கிராஃப் டிஜிட்டல் ஃபவுண்டேஷன் நிறுவனம் `மோடியும் அம்பேத்கரும்’ என்ற புத்தகத்தை வெளியிட்டிருந்தது. இந்தப் புத்தகம் கடந்த 14-ம் தேதி வெளியிடப்பட்டது. இந்தப் புத்தகத்துக்கு முன்னுரை எழுதியுள்ள இசையமைப்பாளர் இளையராஜா, அம்பேத்கரின் சிந்தனைகளை அடிப்படையாகக்கொண்டு மோடி ஆட்சியில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுவதாகக் குறிப்பிட்டிருந்தார்.

இந்தக் கருத்து தமிழகத்தில் சர்ச்சையைக் கிளப்பியது. இதையொட்டி, இந்த விவகாரத்தில், `நான் என்னுடைய கருத்தைத்தான் கூறினேன். எனவே, எனக்கு எதிரான விமர்சனங்கள் வந்தாலும் நான் ஏற்றுக்கொள்வேன். என்னுடைய கருத்தைத் திரும்பப் பெற மாட்டேன். என்னிடம் ஒரு புத்தகம் கொடுத்து எழுதச் சொன்னார்கள். நான் மோடியை, அம்பேத்கருடன் ஒப்பிட்டு எழுதினேன். விமர்சனங்களுக்கு பதிலளிக்கத் தயார்’ என்று இளையராஜா தன்னிடம் கூறியதாக இளையராஜாவின் சகோதரர் கங்கை அமரன் தெரிவித்தார்.

இளையராஜா முன்னுரை எழுதிய புத்தகம்.
இளையராஜா முன்னுரை எழுதிய புத்தகம்.

இந்த நிலையில் பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா, நாட்டு மக்களுக்கு எழுதிய கடிதத்தில், இளையராஜா விவகாரம் குறித்த கருத்தையும் பதிவுசெய்திருக்கிறார். அந்தக் கடிதத்தில், ``இளையராஜாவின் கருத்து ஓர் அரசியல் கட்சிக்கும், அதன் கூட்டணிகளுக்கும் பிடிக்கவில்லை என்பதால் இசையின் மேஸ்ட்ரோவான இளையராஜாவை அவமானப்படுத்துவதா... இளையராஜா குறித்த விமர்சனங்களில் ஜனநாயகம் இல்லை. தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம், மகாராஷ்டிரம் உள்ளிட்ட மாநிலங்களில் பாஜக தொண்டர்கள் குறிவைத்துத் தாக்கப்படுகின்றனர். இது மாதிரியான சம்பவங்களில் எதிர்கட்சிகள் சகிப்புத்தன்மையின்றி நடந்துகொள்கின்றனர்.எதிர்க்கட்சிகள் ஆக்கபூர்வமான செயல்களில் ஈடுபடவில்லை'' எனக் குறிப்பிட்டுள்ளார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism