Published:Updated:

``எந்த வருத்தமும் கிடையாது; என்னுடைய பதில் மௌனம்தான்" - நழுவிய அண்ணாமலை

அண்ணாமலை

``மக்கள் பார்த்துட்டு இருக்காங்க. மக்கள் முடிவு செய்வாங்க. அதேபோலத்தான் கட்சியிலிருந்து விலகியிருப்பவர்களின் கருத்தும்கூட. அவர்கள் எங்கே சென்றாலும் நன்றாக இருக்கட்டும்.” - அண்ணாமலை

``எந்த வருத்தமும் கிடையாது; என்னுடைய பதில் மௌனம்தான்" - நழுவிய அண்ணாமலை

``மக்கள் பார்த்துட்டு இருக்காங்க. மக்கள் முடிவு செய்வாங்க. அதேபோலத்தான் கட்சியிலிருந்து விலகியிருப்பவர்களின் கருத்தும்கூட. அவர்கள் எங்கே சென்றாலும் நன்றாக இருக்கட்டும்.” - அண்ணாமலை

Published:Updated:
அண்ணாமலை

அண்மையில் தமிழக பா.ஜ.க-வில் மாநிலப் பொறுப்பிலிருந்த காயத்ரி ரகுராம், அந்தக் கட்சி மேலிடத்தால் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இந்த நிலையில், காயத்ரி ரகுராம் நேற்று அந்தக் கட்சியிலிருந்து தான் விலகுவதாக அறிவித்தார். இது தொடர்பாக அவர் தன் ட்விட்டர் பக்கத்தில், ``அண்ணாமலை தலைமையின்கீழ் பெண்களுக்குப் பாதுகாப்பில்லை. உண்மையான தொண்டர்கள் அண்ணாமலையால் விரட்டியடிக்கப்படுவதுதான் நடந்துகொண்டிருக்கிறது.

காயத்ரி ரகுராம்
காயத்ரி ரகுராம்

நான் இந்த அவசர முடிவு எடுப்பதற்கு அண்ணாமலைதான் காரணம்" என அண்ணாமலையைக் குற்றம்சாட்டி பா.ஜ.க-விலிருந்து விலகினார். இந்த நிலையில், தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை இந்த விவகாரத்தில் தன்னுடைய கருத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்.

அண்ணாமலை
அண்ணாமலை

சென்னையில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் காயத்ரி ரகுராம் விலகல், குற்றச்சாட்டு தொடர்பாகப் பேசிய அண்ணாமலை, ``கட்சியிலிருந்து யார் விலகினாலும்கூட அவர்களை வாழ்த்தி வழி அனுப்புவதுதான் என்னுடைய வாடிக்கையாக இருக்கிறது. கட்சியிலிருந்து வெளியே போறவங்க யாராக இருந்தாலும் கட்சியையோ அல்லது தலைவராக இருக்கக்கூடிய என்னையோ புகழ்ந்துவிட்டு செல்லவேண்டியது என்பது கட்டாயம் கிடையாது. யாரோ ஒருத்தருக்குப் பிடிக்கலன்னா, கட்சியைவிட்டு போறாங்கன்னா... அது குறித்து எனக்கு எந்த வருத்தமும் கிடையாது.

இங்கு சிலபல பிரச்னைகள் இருக்கு. யாருக்கு என்ன தொடர்பு, என்ன இருக்கு அது குறித்தெல்லாம் விவாதமா இங்க பேச விரும்பல. ஒரு பத்திரிகை நம்மளப் பத்தி கருத்து சொல்றாங்க. எந்தப் பத்திரிகை என்னைப் பத்தி என்ன சொன்னாலும்கூட என்னுடைய பதில் என்பது மௌனம்தான். மக்கள் பார்த்துட்டு இருக்காங்க. மக்கள் முடிவு செய்வாங்க. அதேபோலத்தான் கட்சியிலிருந்து விலகியிருப்பவர்களின் கருத்தும்கூட. அவர்கள் எங்கே சென்றாலும் நன்றாக இருக்கட்டும்" என்று கூறினார்.

அண்ணாமலை
அண்ணாமலை

அதைத் தொடர்ந்து, ஈஷா யோகா மையத்துக்குச் சென்ற பெண் உயிரிழப்பு, காயத்ரி ரகுராம் குற்றச்சாட்டு, ரஃபேல் வாட்ச் தொடர்பான கேள்விகளின்போது பத்திரிகையாளர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட அண்ணாமலை, ``எப்படிக் கேள்வி கேட்க உங்களுக்கு உரிமை இருக்கோ, அதே கேள்வி கேட்கிற உரிமை எனக்கு இருக்கு. இங்க வர்றவங்க எல்லாருமே கட்சியில யாரோ சொன்னாங்கன்னுதான் தூக்கிட்டு வர்றீங்க.

உங்களுக்கு தி.மு.க-கிட்ட கேள்வி கேட்க தைரியம் இருக்கா... கமலாலயம் வந்தா மட்டும் எக்ஸ்ட்ரா தைரியம் வருது. கட்சி சேனல் நடத்துறவங்க எல்லாம் என்கிட்ட பேசாதீங்க. டிஜிட்டல் மீடியா, யூடியூப், 4 லைக் போட வேண்டும், 4 ட்வீட் போட வேண்டும்னு 40,000 ரூபாய் கேமராவை வாங்கிட்டு வந்து பிரஸ் மீட்டில் உட்கார்ந்துட்டு பேசுறாங்க. நீங்க பண்றது எவ்வளவு பெரிய அநியாயம் பாருங்க" என்று பல பத்திரிகையாளர்களை, `உங்க சேனல் பேர் என்ன?' என்று குறிப்பிட்டுக் கேட்டார் கேள்விகளுக்கு பதில் அளிக்காமல் நழுவினார். முழு வீடியோ விவரம் கீழே...