Published:Updated:

ஆன்லைன் ரம்மி; மகாபாரதத்தைக் குறிப்பிட்டுச் சாடிய ஸ்டாலின் - நாராயணன் திருப்பதி பதில்

நாராயணன் திருப்பதி, முதல்வர் ஸ்டாலின்

``நெறி தவறி, நீதிக்குப் புறம்பாக, தன் மக்களின் நலனுக்காக, நாட்டு நலனை உதாசீனப்படுத்திய திருதராஷ்டிரன் குறித்து அறிந்துகொள்ளுங்கள். திருத்திக்கொள்ளுங்கள்." - நாராயணன் திருப்பதி

Published:Updated:

ஆன்லைன் ரம்மி; மகாபாரதத்தைக் குறிப்பிட்டுச் சாடிய ஸ்டாலின் - நாராயணன் திருப்பதி பதில்

``நெறி தவறி, நீதிக்குப் புறம்பாக, தன் மக்களின் நலனுக்காக, நாட்டு நலனை உதாசீனப்படுத்திய திருதராஷ்டிரன் குறித்து அறிந்துகொள்ளுங்கள். திருத்திக்கொள்ளுங்கள்." - நாராயணன் திருப்பதி

நாராயணன் திருப்பதி, முதல்வர் ஸ்டாலின்

தமிழ்நாட்டில் ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் கிடப்பிலிருக்கும் முக்கிய மசோதாக்களில் ஒன்று, ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட ஆன்லைன் சூதாட்ட செயலிகளுக்குத் தடைவிதிக்கவேண்டி, அரசு கொண்டுவந்த சட்ட மசோதா.

முதல்வர் ஸ்டாலின்
முதல்வர் ஸ்டாலின்

இந்த நிலையில், நேற்று முன்தினம் சென்னையில் நடைபெற்ற தனது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் பேசிய முதல்வர் ஸ்டாலின், ``மகாபாரதத்தில் சூதாட்டம் இருப்பதால்தான் ஆன்லைன் சூதாட்டத்துக்குத் தடைவிதிக்க மறுக்கிறீர்களா?" என விமர்சித்து கேள்வியெழுப்பியிருந்தார்.

இந்த நிலையில் தமிழ்நாடு பா.ஜ.க-வின் மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி, ஸ்டாலினின் இத்தகைய பேச்சுக்கு அவர்மீது பதில் விமர்சனத்தை முன்வைத்திருக்கிறார். இது குறித்து நாராயணன் திருப்பதி தன் ட்விட்டர் பக்கத்தில், `மகாபாரதத்தில் சூதாட்டம் இருப்பதால்தான் ஆன்லைன் சூதாட்டத்துக்கு தடைவிதிக்க மறுக்கிறீர்களா?' என என முதல்வர் கூறியிருக்கிறார். ``அதைத்தான் நாங்களும் கேட்கிறோம். மகாபாரதத்தில் கௌரவ ராஜ்ஜியத்தில், பாஞ்சாலியின் மானத்தைக் காப்பாற்ற வாய்ப்பிருந்தும், கடமையை நிறைவேற்றத் தவறிய திருதராஷ்டிரன் இருப்பதால்தான் தி.மு.க அரசில் ஆன்லைன் சூதாட்டத்தைத் தடைசெய்ய 'அவசர சட்டம்' இருந்தும் தடைசெய்ய மறுத்தீர்களா?

 நாராயணன் திருப்பதி
நாராயணன் திருப்பதி

மகாபாரதத்தில், தவறு என்று தெரிந்தும், புத்திர பாசத்தால் துரியோதனன் செய்த அநியாயங்களை, முறைகேடுகளை அனுமதித்த திருதராஷ்டிரன் இருப்பதால்தான் உங்கள் அரசில் நடைபெறும் தவறுகளை, முறைகேடுகளைத் தட்டிக்கேட்க மறுக்கிறீர்களா... மகாபாரதத்தில் விதுரன் கூறிய நியாயத்தை, நீதியை ஏற்க மறுத்து உதாசீனப்படுத்திய திருதராஷ்டிரன் இருப்பதால்தான் தமிழக பா.ஜ.க சுட்டிக்காட்டும் நியாயத்தை, நீதியை ஏற்க மறுக்கிறீர்களா?

ஸ்டாலின் அவர்களே, மகாபாரதத்தை முழுமையாகக் கற்றறியுங்கள். நெறி தவறி, நீதிக்குப் புறம்பாக, தன் மக்களின் நலனுக்காக, நாட்டு நலனை உதாசீனப்படுத்திய திருதராஷ்டிரன் குறித்து அறிந்துகொள்ளுங்கள். திருத்திக்கொள்ளுங்கள். ராமாயணம் 'ஒருவர் எப்படி இருக்க வேண்டும்' என்று போதிக்கிறது. மகாபாரதம் 'ஒருவர் எப்படி இருக்கக் கூடாது' என்று போதிக்கிறது. மகாபாரதத்தை முழுமையாகப் படியுங்கள், தெளிவு பெறுங்கள்" என்று பதிவிட்டிருக்கிறார்.