Published:Updated:

``சுய திருமணம் இந்து மதத்துக்கு எதிரானது; எந்தக் கோயிலிலும் அனுமதிக்க மாட்டோம்!” - பாஜக எதிர்ப்பு

பாஜக தலைவர் சுனிதா சுக்லா

``இது போன்ற திருமணங்கள் இந்து மதத்துக்கு எதிரானவை. மதத்துக்கு எதிராக எது நடந்தாலும், எந்தச் சட்டமும் இங்கு மேலோங்காது." - பா.ஜ.க தலைவர் சுனிதா சுக்லா

``சுய திருமணம் இந்து மதத்துக்கு எதிரானது; எந்தக் கோயிலிலும் அனுமதிக்க மாட்டோம்!” - பாஜக எதிர்ப்பு

``இது போன்ற திருமணங்கள் இந்து மதத்துக்கு எதிரானவை. மதத்துக்கு எதிராக எது நடந்தாலும், எந்தச் சட்டமும் இங்கு மேலோங்காது." - பா.ஜ.க தலைவர் சுனிதா சுக்லா

Published:Updated:
பாஜக தலைவர் சுனிதா சுக்லா

குஜராத்தைச் சேர்ந்த 24 வயது இளம்பெண்ணான ஷமா பிந்து என்பவர் இரண்டு நாள்களுக்கு முன்பு வருகிற 11-ம் தேதி தன்னைத் தானே திருமணம் செய்துகொள்ளப்போவதாகக் கூறியிருந்தார். அதாவது சுய திருமணம் செய்துகொள்ளப்போவதாகவும், இதற்கு தன்னுடைய பெற்றோரும் சம்மதித்துவிட்டதாகவும் தெரிவித்திருந்தார். இது போன்ற திருமணங்கள் `சோலோகேமி' என்று கூறப்படுகின்றன.

இந்த நிலையில், பா.ஜ.க தலைவரான சுனிதா சுக்லா இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது குறித்துப் பேசிய சுனிதா சுக்லா, ``இந்து கலாசாரத்தில் ஓர் ஆண் இன்னோர் ஆணை அல்லது ஒரு பெண் ஒரு பெண்ணைத் திருமணம் செய்துகொள்ளலாம் என்று எங்கும் எழுதப்படவில்லை. இந்தப் பெண் எந்தக் கோயிலிலும் தன்னைத் திருமணம் செய்துகொள்ள அனுமதிக்கப்பட மாட்டாள்.

ஷாமா பிந்து
ஷாமா பிந்து

இது போன்ற திருமணங்கள் இந்து மதத்துக்கு எதிரானவை. இதனால், இந்துக்களின் மக்கள்தொகை குறையும். அதுமட்டுமல்லாமல், மதத்துக்கு எதிராக எது நடந்தாலும், எந்தச் சட்டமும் இங்கு மேலோங்காது" என எதிர்ப்பு தெரிவித்திருந்தார்.

இதேபோல் உயர் நீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞர் கிருஷ்ணகாந்த் வகாரியாவும், இந்த விவகாரத்தில் ``இந்திய சட்டங்களின்படி, உங்களை நீங்களே திருமணம் செய்துகொள்ள முடியாது. ஒரு திருமணத்தில் இரண்டு பேர் இருக்க வேண்டும். சோலோகேமி சட்டபூர்வமானது அல்ல” என்று தனியார் ஊடகத்திடம் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism