Election bannerElection banner
Published:Updated:

டெல்லி மாநகராட்சி இடைத்தேர்தல்: ஆம் ஆத்மி வெற்றி; ஒரேயோர் இடத்தைக்கூட கைப்பற்றாமல் பா.ஜ.க படுதோல்வி!

அரவிந்த் கெஜ்ரிவால்
அரவிந்த் கெஜ்ரிவால்

டெல்லியில் அடுத்த ஆண்டு உள்ளாட்சித் தேர்தல் நடக்கிறது. அதற்கு இந்த இடைத்தேர்தல் முடிவு முன்னோட்டமாகப் பார்க்கப்படுகிறது.

டெல்லி மாநகராட்சிக்கு நடத்தப்பட்ட இடைத்தேர்தலில் மொத்தமுள்ள ஐந்து இடங்களில், நான்கில் ஆளும் ஆம் ஆத்மி கட்சியும், ஓரிடத்தில் காங்கிரஸ் கட்சியும் வெற்றி பெற்றுள்ளன. பா.ஜ.க ஒரு வார்டையும் கைப்பற்றாதது அந்தக் கட்சியின் சரிவாகப் பார்க்கப்படுகிறது.

தேர்தல் வெற்றி
தேர்தல் வெற்றி
ANI

என்ன தேர்தல்?

டெல்லியில் தற்போது முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி, ஆட்சியில் இருந்துவருகிறது. கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் ஆம் ஆத்மி 62 இடங்களையும், பா.ஜ.க எட்டு இடங்களையும் கைப்பற்றின. அடுத்த ஆண்டு அங்கு உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவிருக்கும் சூழலில், ஷாலிமார் பாக் வடக்கு, கல்யாண்புரி, திரிலோக்புரி, ரோகிணி, சௌகன் பன்கர் ஆகிய ஐந்து மாநகராட்சி வார்டுகளுக்கான இடைத்தேர்தல் பிப்ரவரி 28-ம் தேதி நடைபெற்றது.

இந்தத் தேர்தலில், 327 வாக்குச்சாவடி மையங்களில் 50 சதவிகிதத்துக்கு மேற்பட்டோர் வாக்களித்திருந்தனர். ஆம் ஆத்மி, பா.ஜ.க., காங்கிரஸ் ஆகிய மூன்று கட்சிகளுக்கு இடையே கடுமையாகப் போட்டி நிலவியது.

வாக்கு எண்ணிக்கை:

பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டன. அவற்றில் ஷாலிமார் பாக் வடக்கு, கல்யாண்புரி, திரிலோக்புரி, ரோகிணி ஆகிய நான்கு வார்டுகளில் ஆம் ஆத்மி கட்சி வெற்றிபெற்றது. காங்கிரஸ் ஒரு வார்டில் வெற்றி பெற்றது.

பா.ஜ.க-வின் வார்டு:

ஷாலிமார் பாக் வார்டின் பா.ஜ.க கவுன்சிலர் திலக் ராஜ் கட்டாரியா கடந்த ஆண்டு ஜூன் மாதம் ராஜினாமா செய்தார். மேயர் பதவி பிரச்னையில் தலைமையிடம் ஏற்பட்ட முரண் காரணமாக ராஜினாமா செய்தார். இந்த வார்டையும் இப்போது இழந்திருக்கிறது பா.ஜ.க. மற்ற வார்டுகள் முன்பே ஆம் ஆத்மி வசம் இருந்தவை. டெல்லியில் அடுத்த ஆண்டு உள்ளாட்சித் தேர்தல் நடக்கிறது. அதற்கு இந்த இடைத்தேர்தல் முடிவு முன்னோட்டமாகப் பார்க்கப்படுகிறது.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு