Published:Updated:

ஸ்டாலினிடம் பகிரப்பட்ட பா.ஜ.க `மெசேஜ்'... தி.மு.க அணுகுமுறையில் மாற்றம்!

ஸ்டாலின்
ஸ்டாலின்

தகவல் ஸ்டாலின் காதுகளுக்குச் சென்ற பின்னர்தான் சீனா விவகாரத்தில் தன் பேச்சை அனுசரணையாக அமைத்துக்கொண்டாராம்

''ரஜினி எப்படி இருக்கிறார்?''

''கேளம்பாக்கம் பண்ணை வீட்டில் ஓய்வில் இருக்கிறார். ரஜினியை சமீபத்தில் 'அண்ணாத்த' பட இயக்குநர் சிவா சந்திக்க நேரம் கேட்டுள்ளார். 'கொரோனா பிரச்னை முடியும் வரை யாரையும் சந்திப்பதில்லை' என ரஜினி தரப்பில் மறுத்துவிட்டார்களாம்.

குடும்பத்தின் அன்புச் சிறையில் இருக்கிறார் ரஜினி" என்ற கழுகார், "மஞ்சள் மாவட்ட சர்ச்சை ஒன்று கூறுகிறேன், கேளும்'' என்று தண்ணீரைப் பருகியபடி தொடர்ந்தார்.

''மஞ்சள் மாவட்டத்தில் கடந்த 25 ஆண்டுகளாக தி.மு.க-வின் அதிகாரபூர்வ நாளேட்டின் ஏஜென்ட் கம் நிருபராக இருப்பவர் அவர். கட்சியின் தலைமையிடம் தனக்குப் பெரும் செல்வாக்கு இருப்பதாக உடன்பிறப்புகளை ஆட்டுவிக்கிறாராம்.

சமீபத்தில் இவர்மீது ஆறு பக்கம் கொண்ட பெரும் புகார் மனு ஒன்று அறிவாலயத்துக்குச் சென்றிருக்கிறது. கட்சிக்குள்ளே கோஷ்டி மோதல்களை உருவாக்குவது, தனக்கு வேண்டாத வர்களைப் பற்றி பத்திரிகைகளில் பொய்ச் செய்தி வரவழைப்பது, உள்கட்சி விஷயங்கள், பதவி நியமனங்களில் தலையிடுவது என நீள்கிறது அந்தப் புகார் மனு.

ரஜினி
ரஜினி

குறிப்பாக, கட்சியின் பெண் நிர்வாகிகள் சிலரிடம் பாலியல்ரீதியாகச் சீண்டினார் எனவும் `பகீர்' கிளப்பப்பட்டுள்ளது. லட்சக்கணக்கில் கொரோனா நிதி வசூல் செய்து ஏப்பம் விட்டதாகவும் புகார் மனுவில் குறிப்பிடப்பட்டிருக்கிறதாம்.''

"இப்படியெல்லாமா நடக்கிறது? சரி... பா.ஜ.க என்ன ஐடியாவில் இருக்கிறது?''

"அந்தக் கட்சியைப் பொறுத்தவரை தி.மு.க கூட்டணியிலிருந்து காங்கிரஸை வெளியேற்றி விட்டால் போதும் என்கிற மனநிலையில் இருக்கிறார்களாம்.

'நீலகிரி மாவட்டத்துக்கு மருத்துவக் கல்லூரி வேண்டும்' என ஆ.ராசா கோரிக்கை விடுத்தவுடன், மத்திய அரசு சம்மதித்ததுகூட இதற்காகத்தானாம்.

`மத்தியில் பா.ஜ.க இன்னும் நான்கு ஆண்டுகள் பதவியில் இருக்கப்போகிறது. எதற்காகத் தேவையில்லாமல் அந்தக் கட்சியைப் பகைத்துக்கொள்ள வேண்டும்' என்று தி.மு.க தரப்பிலும் நினைக்கிறார்களாம்.''

''ஓஹோ...''

''சமீபத்தில் தி.மு.க வாரிசு பிரமுகரை தொடர்புகொண்ட டெல்லி பா.ஜ.க பிரமுகர் ஒருவர், 'நீங்கள் எங்கள் பக்கம் வருவதிலோ, வராமல் இருப்பதிலோ எங்களுக்கு எந்தப் பிரச்னையும் இல்லை. ஆனால், காங்கிரஸ் கட்சியோடு கைகோத்துப் பயணித்தால் எதிர்காலத்தில் சிக்கல் வர வாய்ப்புள்ளது' என்று சொல்லியிருக்கிறார்.

இந்தத் தகவல் ஸ்டாலின் காதுகளுக்குச் சென்ற பின்னர்தான் சீனா விவகாரத்தில் தன் பேச்சை அனுசரணையாக அமைத்துக்கொண்டாராம்.''

- இதுதொடர்பான விரிவாக கழுகார் தந்த தகவல்களை ஜூனியர் விகடன் இதழில் முழுமையாக வாசிக்க க்ளிக் செய்க... > மிஸ்டர் கழுகு: மோடியிடம் அமைதி காத்த ஸ்டாலின்... அதிருப்தியில் சத்தியமூர்த்தி பவன் https://bit.ly/37U4LUu

சிறப்புச் சலுகை: விகடன் App-ஐ டவுன்லோடு செய்து ரெஜிஸ்டர் செய்தால், ஆனந்த விகடன் தொடங்கி அவள் கிச்சன் வரை அனைத்து இதழ்களையும் 30 நாள்களுக்கு கட்டணமின்றி வாசிக்கலாம். குறிப்பாக, கடந்த 2006-ல் இருந்து வெளியான அனைத்து ப்ரைம் கன்டென்ட்டுகள், பொக்கிஷக் கட்டுரைகளிலும் வலம்வர முடியும். விகடன் ஆப் டவுன்லோடு லிங்க் இதோ https://bit.ly/2VRp3JV

அடுத்த கட்டுரைக்கு