Published:Updated:

``சேகர் பாபுவின் செயல்பாடுகள் சிறப்பாக இருக்கின்றன!” - பாராட்டும் பாஜக-வின் வானதி சீனிவாசன்

வானதி சீனிவாசன்

இந்து அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர் பாபுவின் சட்டமன்றச் செயல்பாடுகள் சிறப்பாக இருப்பதாக பா.ஜ.க சட்டமன்ற உறுப்பினரான வானதி சீனிவாசன் பாராட்டுகிறார்.

``சேகர் பாபுவின் செயல்பாடுகள் சிறப்பாக இருக்கின்றன!” - பாராட்டும் பாஜக-வின் வானதி சீனிவாசன்

இந்து அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர் பாபுவின் சட்டமன்றச் செயல்பாடுகள் சிறப்பாக இருப்பதாக பா.ஜ.க சட்டமன்ற உறுப்பினரான வானதி சீனிவாசன் பாராட்டுகிறார்.

Published:Updated:
வானதி சீனிவாசன்

பா.ஜ.க-வின் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க அரசு பொறுப்பேற்று ஓராண்டு நிறைவடையும் சூழலில், பா.ஜ.க-வின் சட்டமன்ற உறுப்பினரும், அந்தக் கட்சியின் தேசிய மகளிரணித் தலைவருமான வானதி சீனிவாசனிடம் பேசினோம்.

சேகர்பாபு
சேகர்பாபு

“கொள்கை ரீதியில் உங்களுக்கு நேரெதிராக இருக்கும் தி.மு.க அதிகாரத்தில் இருக்கும் நிலையில், உங்கள் சட்டமன்ற அனுபவம் எப்படி இருக்கிறது?” என்ற நமது கேள்விக்கு, “சட்டமன்ற அனுபவம் மிகவும் சுவாரஸ்யமாக இருக்கிறது...” என்று பேச ஆரம்பித்தார் வானதி சீனிவாசன். அவரிடம் மேலும் சில கேள்விகளை முன்வைத்தோம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

``கடந்த காலங்களில், சட்டமன்ற சபாநாயகர் அப்பாவுவுடன் பல தொலைக்காட்சி விவாதங்களில் காரசாரமாக விவாதித்திருக்கிறீர்கள். சில நேரங்களில், அந்தக் காட்சிகளை நினைவுபடுத்துவதுபோல சட்டமன்றத்தில் உங்கள் இருவருக்குமான உரையாடலைப் பார்க்க முடிகிறதே?”

சபாநாயகர் அப்பாவு
சபாநாயகர் அப்பாவு

“சபாநாயகர், ஒரு மூத்த சட்டமன்ற உறுப்பினர். அவர், நிறைய அனுபவம் வாய்ந்தவர். அவையில் பல நேரங்களில் எனக்கு வழிகாட்டவும் செய்கிறார். அதேநேரம், நான் பேசுகிறபோது அதிக கவனத்துடன் இருக்கிறார். ஆளும் கட்சிக்கு எதிராக என்னிடமிருந்து எந்த வார்த்தையும் வந்துவிடக் கூடாது என்பதில் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்கிறார்.

மற்றபடி, இறுக்கமான சூழல் இல்லை. அவருக்கென்று இருக்கக்கூடிய நெருக்கடிகளும் சங்கடங்களும் எங்களுக்குப் புரிகிறது. சில நேரம், அமைச்சர்களின் பதில்கள் வருவதற்கு முன்பாக, சபாநாயகரே பதிலளித்துவிடுகிறார். ஒருமுறை, ’அமைச்சர்களின் பதிலை பேரவைத் தலைவர் வாயிலாகக் கேட்கிறேன்’ என்று நகைச்சுவையாக நான் குறிப்பிட்டேன்.”

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

“அமைச்சர்கள் மீது உங்களுக்கு பல விமர்சனங்கள் இருக்கலாம். ஆனாலும், அமைச்சர்களில் நன்றாகச் செயல்படுவதாக யாரைப் பார்க்கிறீர்கள்?”

“சீனியர் அமைச்சர்கள் அனைவருமே தங்கள் பொறுப்புகளை உணர்ந்து பொறுமையாகவும் சரியாகவும் பதிலளிக்கிறார்கள். புதிய அமைச்சர்களில் இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபுவின் செயல்பாடு நன்றாக இருக்கிறது. உறுப்பினர்களின் கேள்விகளுக்கு உரிய முறையில் பதில்களை தெளிவாக அவர் அளிக்கிறார்.

சேகர் பாபு
சேகர் பாபு

நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜனைப் பொறுத்த அளவில் நிறைய குறுக்கீடுகள் செய்வார். குறிப்பாக, நான் பேசும்போது அவர் அதிகமாகக் குறுக்கிடுவார். வழக்கமாக, உறுப்பினர்களின் முதல் பேச்சில் யாரும் குறுக்கிட மாட்டார்கள். அதுதான் மரபு. ஆனால், என் முதல் பேச்சில் நான்கைந்து அமைச்சர்கள் குறுக்கிட்டார்கள். சரி, நமது முதல் பேச்சுக்கே இத்தனை அமைச்சர்கள் குறுக்கிடுகிறார்கள் என்பதைப் பெருமையாக எடுத்துக்கொண்டேன்.”

“தனது அரசை ‘திராவிட மாடல்’ அரசு என்று முதல்வர் ஸ்டாலின் முன்னிறுத்துவதை எப்படிப் பார்க்கிறீர்கள்?”

“திராவிடம் என்பது தென்னிந்தியாவைக் குறிக்கிறது என்பதை அவர்களே ஒப்புக்கொள்கிறார்கள். தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்கள் அதில் அடங்கும். நாங்களும், திராவிடம் என்பதை ஒரு நிலப்பரப்பின் வாயிலாகத்தான் பார்க்கிறோம். திராவிடம் என்பது இந்திய தேசியத்தின் பிரிக்கப்பட முடியாத ஓர் அங்கம். நாம் சுதந்திரம் பெற்ற காலத்திலிருந்து தமிழ்நாட்டின் வளர்ச்சியில் பல இயக்கங்களைச் சேர்ந்த தலைவர்களும் பங்கு இருக்கிறது. இதை நான் சட்டமன்றத்தில் குறிப்பிட்டபோது, நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் குறுக்கிட்டார்.

முதல்வர் ஸ்டாலின்
முதல்வர் ஸ்டாலின்

அவர், ‘இல்லை, இல்லை. அதற்கும் முன்பாக நீதிக்கட்சி காலத்திலேயே தொடங்கிவிட்டோம். எனவே, தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு, அதன் பெருமையில் எங்களுக்குப் பங்கு இருக்கிறது’ என்று சொன்னார். சரி, அந்தப் பெருமையை அவர்கள் எடுத்துக்கொள்ளட்டும். ஆனால், தமிழ் மண்ணுக்கென்று ஒரு பெருமை இருக்கிறது. சுயமரியாதை என்று பேசுகிறார்கள். குலோத்துங்கச் சோழனைக் கேள்வி கேட்ட கம்பருக்கு சுயமரியாதை இருந்தது. சமூகநீதி என்கிறார்கள். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ராமானுஜர் சமூகநீதியை இந்த மண்ணில் கொண்டுவந்திருக்கிறார். எனவே, சுயமரியாதை என்பது நீதிக்கட்சி தோன்றிய பிறகுதான் வந்தது என்பது அல்ல. திராவிட மாடல் என்று சொன்னால், அதில் காங்கிரஸுக்கும் பங்கு உண்டு, அ.தி.மு.க-வுக்கும் பங்கு இருக்கிறது. அதனால், இதை ‘தி.மு.க மாடல்’ என்றுதான் அவர்கள் சொல்ல வேண்டும்.

‘திராவிட மாடல் என்றுதான் சொல்வோம்’ என்று தி.மு.க-வினர் பிடிவாதமாக இருப்பார்களேயானால், கடந்த பத்தாண்டு கால அ.தி.மு.க ஆட்சியில் தமிழகம் பின்னோக்கிப்போய்விட்டது என்று எதற்காக சொல்கிறார்கள்? இந்த கேள்விக்கு அவர்கள் பதில் சொல்ல வேண்டும். ”

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism