Published:Updated:

ரஜினி மட்டுமல்ல, பா.ஜ.க-வுக்கு கமல்ஹாசன் வந்தாலும் ஏற்றுக்கொள்வோம்!

 வானதி சீனிவாசன்
பிரீமியம் ஸ்டோரி
வானதி சீனிவாசன்

- வரவேற்கும் வானதி சீனிவாசன்

ரஜினி மட்டுமல்ல, பா.ஜ.க-வுக்கு கமல்ஹாசன் வந்தாலும் ஏற்றுக்கொள்வோம்!

- வரவேற்கும் வானதி சீனிவாசன்

Published:Updated:
 வானதி சீனிவாசன்
பிரீமியம் ஸ்டோரி
வானதி சீனிவாசன்

ஆளுநர் - ரஜினி சந்திப்பு, நாடாளுமன்ற நடவடிக்கைகள், விலைவாசி உயர்வு உள்ளிட்ட பல்வேறு சர்ச்சைகள் எழுந்துகொண்டிருக்கின்றன. இவை குறித்து, பா.ஜ.க தேசிய மகளிரணித் தலைவர் வானதி சீனிவாசனிடம் சில கேள்விகளை முன்வைத்தோம்...

“ஆளுநர் மாளிகையில் அரசியல் பேசுவது சரியா?”

“ஆளுநராகச் செயல்படுவதே அரசியலின் ஒரு பகுதிதானே. அவர் கட்சி அரசியலைத் தான் செய்யக் கூடாதே தவிர முடிவுகளை எடுக்கலாம், அதில் தவறில்லை. ஆளுநர் அலுவலகம் ஒரு மாநிலத்தின் அரசியல் உள்ளிட்ட எல்லாவிதச் செயல்பாடுகளையும் கண்காணிக்கும். ஆளுநர் தனிப்பட்ட ஓர் அரசியல் கட்சிக்கு எதிர்ப்பாகவோ ஆதரவாகவோ நடந்துகொண்டாலோ, அரசியல் கூட்டங்களை நடத்தினாலோ, ஒரு குறிப்பிட்ட கட்சியினரை மட்டுமே அவர் சந்திக்கிறார் என்றாலோதான் ஆளுநர் அரசியல் செய்வதாகக் கருத முடியும். அவர் அரசியல் பேசக் கூடாது என்று சொல்வது அபத்தமாக இருக்கிறது.”

“பா.ஜ.க-வை வளர்க்க ரஜினி போன்றவர்கள் இப்போதும் தேவைப்படுகிறார்களா?”

“நாங்கள் உலகத்திலேயே பெரிய கட்சி. எங்களுக்கென்று தனித்த செயல்பாடுகள் இருக்கின்றன. எனவே, ரஜினிகாந்தை வைத்துத்தான் அரசியல் செய்ய வேண்டும் என்ற தேவையில்லை. எங்களுடைய கட்சியை பலப்படுத்த யார் வந்தாலும் ஏற்றுக்கொள்வோம். யாரையும் வேண்டாம் என்று நாங்கள் சொல்லமாட்டோம். அதாவது, பா.ஜ.க-வுக்கு ரஜினிகாந்த் மட்டுமல்ல, கமல்ஹாசன் வந்தாலும் ஏற்றுக்கொள்வோம்.”

“இவ்வளவு எதிர்ப்புக்கு மத்தியில், அவசர அவசரமாக மின்சார சட்டத் திருத்த மசோதாவை நிறைவேற்றத் துடிப்பது ஏன்?”

“மின்சாரத்துறையில் சீர்திருத்தங்களைச் செய்வதற்காகக் கொண்டு வரப்பட்டிருப் பதுதான் இந்த மின்சார சட்டத் திருத்த மசோதா. நீண்டகாலமாக இருக்கும் சட்டங்களில், காலத்துக்கேற்ப திருத்தங்கள் செய்யவேண்டியது அவசியமானது. எதிர்க்கட்சிகள் சொல்வதுபோல இந்தத் திருத்தத்தால் மக்கள் பாதிக்கப்பட மாட்டார்கள். திருத்தங்கள் கொண்டு வரும்போது, ஆரோக்கியமான விவாதங்களை முன்னெடுக்காமல் அரசியல் காழ்ப்புணர்ச்சி யில் கண்ணை மூடிக்கொண்டு எதிர்க்கிறார்கள். இப்படித் தொடர்ந்து செய்துகொண்டிருந்தால் அரசாங்கத்தை நடத்தும் கட்சி என்ன செய்ய முடியும்... விலைவாசி உயர்வுக்கு விவாதம் நடத்த வேண்டும் என்றார்கள். உடனே எங்கள் நிதி யமைச்சர் இரு அவைகளிலும் விவாதம் நடத்தி பதிலளித்தார். அதுவும் தமிழிலேயே பதிலளித்தார். அப்போதும் வெளிநடப்பு செய்தார்கள். எதிர்க் கட்சிகள் பொறுப்புணர்வோடு செயல்பட்டால் இப்படியான கேள்விகளுக்கு அவசியமே இருக்காது.”

ரஜினி மட்டுமல்ல, பா.ஜ.க-வுக்கு கமல்ஹாசன் வந்தாலும் ஏற்றுக்கொள்வோம்!

“இயல்பாக மக்களிடம் எழவேண்டிய தேசிய உணர்வை பா.ஜ.க மிரட்டி வரவைக்கிறது என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றனவே?”

“பிரதமர் மோடி, எந்தவோர் அரசாங்கத் திட்டத்தையும் மக்கள் இயக்கமாக மாற்ற வேண்டும் என்று கூறுவார். முன்பு தேசியக் கொடியை ஏற்றுவதற்குக் கட்டுப்பாடுகள் இருந்தன. ஆனால், அதையெல்லாம் தளர்த்தி, 75-வது சுதந்திர தின நிறைவு விழாவைச் சிறப்பாகக் கொண்டாட வேண்டும் என்பதற்காக அனைவரது வீடுகளிலும் தேசியக்கொடியை ஏற்ற வேண்டும் என்கிறார். டெல்லியில், கேரளாவில் இந்த நோக்கத்தை உணர்ந்து இதை முன்னெடுத்திருக் கிறார்கள். தமிழ்நாடு அரசு கோடிக்கணக்கில், கொடிகளைத் தயாரித்து மற்ற மாநிலங்களுக்கு அனுப்பியிருக்க முடியும். ஆனால், முதல்வருக்கும் சுதந்திர தினத்துக்கும் சம்பந்தம் இல்லாததுபோல, கண்டும் காணாமல் இருப்பதால், ஓர் அற்புதமான வாய்ப்பைத் தமிழ்நாடு இழந்துவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும்.”

“அமலாக்கத்துறை, வருமான வரித்துறை மூலம் எதிர்க்கட்சிகளை மிரட்டுகிறதா பா.ஜ.க?”

“தவறு நடந்திருக்கிறது. அது தொடர்பாகச் சம்பந்தப்பட்ட துறை நடவடிக்கை எடுப்பதில் என்ன தவறு இருக்கிறது... நேஷனல் ஹெரால்டு வழக்கில் ராகுல், சோனியாமீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நீதிமன்றம் கூறிய பிறகு சட்டப்படிதான் அதற்கான வேலைகள் செய்யப்படுகின்றன. மேற்கு வங்கத்தில் உங்கள் கண் முன்னால்தானே கட்டுக்கட்டாகப் பணத்தை எடுத்தார்கள். இன்றுகூட கால்நடைகளைக் கடத்தி சட்டவிரோதமாக விற்பனை செய்த ஆளுங்கட்சிப் பிரமுகர்களைக் கைது செய்திருக்கிறார்கள். நாட்டின் பாதுகாப்புக்கு எது அச்சுறுத்தலாக மாறினாலும் அதன்மீது நடவடிக்கை எடுத்துத்தானே ஆக வேண்டும்?”

“அதானிக்கும் அம்பானிக்கும் 5ஜி-யை ஒதுக்கி, மிகப்பெரிய மோசடியில் பா.ஜ.க அரசு ஈடுபட்டதாகச் சொல்கிறார்களே?”

“5ஜி ஏலம் பல்வேறு கட்டமாக நடத்தப்படும். அதில், முதற்கட்ட ஏலத்தில்தான் இந்தத் தொகை வந்திருக்கிறது. அதானி, அம்பானி மட்டுமல்ல, யாராக இருந்தாலும் ஏலத்தில் கலந்துகொள்ளலாம். அரசாங்கம் யாரையும் பங்கேற்க வேண்டாம் எனச் சொன்னதா... சினிமாவை மட்டுமே எடுத்துக்கொண்டிருக்கும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் கம்பெனிகளும் ஏலத்தில் கலந்து கொள்ளலாம். அப்படிக் கலந்துகொண்டு ஏலத்தில் அதிக தொகைக்குக் கேட்டால், அவர்களுக்கு 5ஜி உரிமை கொடுக்கப்படும். அப்படிச் செய்யாமல், வீணாகப் புகார் மட்டுமே சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.”

“ ‘கறுப்புச்சட்டை அணிந்தவர்கள் ஒருபோதும் மக்களின் நம்பிக்கையைப் பெறமாட்டார்கள்’ எனப் பிரதமர் மோடி பேசியிருக்கிறாரே?”

“ ‘கறுப்புச்சட்டை அணிந்து வந்து போராடுவ தால், எங்களை ஒன்றும் செய்துவிட முடியாது’ என நாடாளுமன்றத்துக்கு வெளியே கறுப்பு உடை அணிந்து போராடியவர்களை மட்டுமே குறிப்பிட்டுப் பிரதமர் பேசினார். ஐயப்பன் கோயிலுக்குச் செல்பவர்கள்கூடத்தான் கறுப்பு உடை அணிந்து செல்கிறார்கள். அதற்காக ஐயப்பப் பக்தர்களை மோடி புண்படுத்திவிட்டார் என்று சொல்ல முடியுமா?”

“தமிழ்நாடு பா.ஜ.க தலைவராக ஆவதற்கு நீங்கள் முயன்றுவருவதாகத் தகவல்கள் வருகின்றனவே?”

“பா.ஜ.க மாநிலத் தலைவராக அண்ணாமலை யின் தலைமையின் கீழ் கட்சி நன்றாக வளர்ந்து வருகிறது. அவர் தன்னுடைய காலத்தை வெற்றிகரமாக நிறைவுசெய்வார். இப்போதைக்கு எனக்கும் தேசிய அரசியலில் செய்யவேண்டிய பொறுப்புகள் நிறைய இருக்கின்றன. கட்சி யாருக்கு, எந்தப் பொறுப்பைக் கொடுக்க வேண்டுமோ அந்த நேரத்தில் அந்தப் பொறுப்பைக் கொடுக்கும். எனவே, இப்போதைக்கு இந்தக் கேள்வி அவசியமில்லாதது எனக் கருதுகிறேன்!”