Published:Updated:

ஓபிஎஸ்-இபிஎஸ்: ``மாற்றுக் கட்சி விவகாரங்களில் நாங்கள் எப்போதும் தலையிடுவது கிடையாது'' - வானதி

வானதி சீனிவாசன்

பா.ஜ.க-வின் தேசிய மகளிரணித் தலைவி வானதி சீனிவாசனிடம் சில கேள்விகளை முன்வைத்தோம்...

ஓபிஎஸ்-இபிஎஸ்: ``மாற்றுக் கட்சி விவகாரங்களில் நாங்கள் எப்போதும் தலையிடுவது கிடையாது'' - வானதி

பா.ஜ.க-வின் தேசிய மகளிரணித் தலைவி வானதி சீனிவாசனிடம் சில கேள்விகளை முன்வைத்தோம்...

Published:Updated:
வானதி சீனிவாசன்

சர்ச்சைக்குறிய வகையில் பேசுகிறார்கள், குற்றப் பின்னணி உடையவர்களைக் கட்சியில் சேர்க்கிறார்கள் என தமிழ்நாடு பா.ஜ.க-மீது அடுக்கடுக்கான புகார்கள் வரிசைகட்டுகின்றன. இந்த நிலையில், பா.ஜ.க-வின் தேசிய மகளிரணித் தலைவி வானதி சீனிவாசன் முன் சில கேள்விகளை முன்வைத்தோம்...

பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை
பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை

``அண்ணாமலை பா.ஜ.க மாநிலத் தலைவரான பிறகுதான் தமிழ்நாட்டில் கட்சி மிகப்பெரிய அளவில் மக்கள் மத்தியில் ரீச் ஆகியிருக்கிறது என்று சொல்லப்படுகிறதே?''

``மாநிலத் தலைமைப் பொறுப்பேற்கும் யாருக்குமே கட்சியில் ஒரு முக்கியத்துவம் கிடைக்கத்தான் செய்யும். ஆனால், இன்றைய அரசியல் சூழலும் அண்ணாமலையின் வேகமான செயல்பாடும் ஒரு புதிய வேகத்தைக் கட்சிக்குக் கொடுத்திருக்கிறது. ஆனால், இத்தனை வருடங்கள் கட்சிக்காக அடித்தளமிட்டவர்களின் உழைப்பையோ, தியாகத்தையோ குறைத்து மதிப்பிடமுடியாது.''

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

``ஆனால், கட்சியில் சீனியர்கள் ஓரம்கட்டப்படுவதாகத் தொடர்ச்சியாக தகவல்கள் வருகின்றனவே?''

``கட்சியிலுள்ள சீனியர் நிர்வாகிகளுக்கென்று தனியாகப் பொறுப்புகள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. அவர்கள் சுற்றுப்பயணங்கள், போராட்டங்களில் கலந்துகொள்ளத்தான் செய்கிறார்கள். ஊடகங்களிலும் பேசிவருகிறார்கள். ஓரம்கட்டப்படுகிறார்கள் என்பது தவறான கருத்து. அனைவரும் சேர்ந்து குழுவாகத்தான் முடிவுகள் எடுக்கப்படுகின்றன. ஆனால், அண்ணாமலையின் செயல்பாடுகள் காரணமாகவும் ஊடகங்களை எதிர்கொள்ளும் விதம் காரணமாகவும் அவருக்குக் கூடுதல் முக்கியத்துவம் இயற்கையாக உருவாகிறது''

மனோ தங்கராஜ்
மனோ தங்கராஜ்

``மாற்று மதத்தினர் கோயில்களில் வழிபடக்கூடாது என்பது சரியா?''

``பா.ஜ.கவினர் அப்படி எங்கேயும் அப்படிச் சொன்னது கிடையாது.''

``அமைச்சர் மனோ தங்கராஜ் விஷயத்தில் பா.ஜ.க-வினர் தானே எதிர்ப்புத் தெரிவித்தது?''

`` ஒரு குறிப்பிட்ட மதத்தை விமர்சித்துவிட்டு, அந்த மதம் சார்ந்த விழாக்களில் அவர்கள் பங்கேற்கும்போது மக்கள் தங்கள் எதிர்ப்பைக் காட்டத்தான் செய்வார்கள். சம்பந்தப்பட்ட நபர்கள்தான் தங்களின் செயல்பாடுகளை மாற்றிக்கொள்ள வேண்டும்''

பாஜக நிர்வாகி இர்ஷத்துடன் ரியாஸ் அட்டாரி
பாஜக நிர்வாகி இர்ஷத்துடன் ரியாஸ் அட்டாரி

``உதய்ப்பூர் படுகொலை குற்றவாளிகளில் ஒருவரான ரியாஸ் அட்டாரி பா.ஜ.க-வுடன் நெருக்கமானவர் என்று செய்திகள் வெளியானதே?''

``யார் செய்திருந்தாலும் சரி, இந்த மாதிரியான ஒரு செயல்பாட்டுக்கு எதிராக மற்ற நேரங்களில் எழுவது போன்ற குரல் எழுவதில்லை என்பதுதான் கவனிக்கவேண்டிய விஷயம். ஒட்டுமொத்தமாகக் கண்டித்தால் மட்டுமே இது மாதிரியான அசம்பாவிதங்களைத் தடுத்து நிறுத்தமுடியும்.''

``குற்றப் பின்னணி உடையவர்களைத் தொடர்ச்சியாக தமிழ்நாடு பா.ஜ.க தங்கள் கட்சியில் சேர்த்து வருவதாகக் குற்றச்சாட்டுகள் எழுகின்றனவே?''

``எல்லா தரப்பில் இருந்தும் கட்சிக்குள் நுழைகிறார்கள். புதுவெள்ளம் போல கட்சிக்குள் ஒரு பாய்ச்சல் நடந்துகொண்டிருக்கிறது. யார் கட்சியில் சேர்ந்தாலும் அவர்களின் உழைப்பு, திறமை சார்ந்து கட்சியில் பொறுப்புக் கொடுக்கப்படுகிறது.''

சிலிண்டர்
சிலிண்டர்

`'சிலிண்டர் விலை நாளுக்குநாள் உயர்ந்து ஏழை, நடுத்தர மக்களைப் பிழிந்தெடுக்கிறதே?''

``பெட்ரோல், டீசல், சிலிண்டர் ஆகியவை வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படுபவை. நம்மைச் சுற்றி இருக்கின்ற நாடுகளைப் பாருங்கள், கொரோனாவுக்குப் பின்பாக, அவர்களின் பொருளாதாரம் எவ்வளவு அதலபாதாளத்தில் சென்றுள்ளது என்று. அந்த சூழல் இந்தியாவில் வராமல் காப்பாற்றிக்கொண்டிருப்பது பிரதமர் மோடி அவர்கள். சீரான பொருளாதாரத் திட்டங்களோடு இந்த அரசு செயல்பட்டுக்கொண்டிருக்கிறது என்பதற்கு இதுவே சாட்சி. இரண்டு, முறை பெட்ரோல், டீசல் விலையைக் குறைத்திருக்கிறோம். முடிந்தளவு மக்களின் சுமைகளைக் குறைக்க முயற்சி செய்கிறோம்''

``தமிழ்நாட்டை இரண்டாகப் பிரிக்கவேண்டும் என நயினார் நாகேந்திரன் பேசுவது பிரிவினைவாதம் என்று விமர்சனம் முன்வைக்கப்படுகிறதே?''

``ஏன் இதற்கு முன்பாக மாநிலங்கள் பிரிக்கப்பட்டதே இல்லையா?...வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது மத்தியப் பிரதேசம், உத்தரப்பிரதேசம், பீகார் போன்ற மாநிலங்கள் பிரிக்கப்பட்டிருக்கின்றன. சிறு மாநிலங்களாகப் பிரிக்கும்போது வளர்ச்சி வேகப்பட்டிருக்கிறது. இந்தியாவிலிருந்து தமிழ்நாடு பிரியவேண்டும் என்று பேசுகிற பிரிவினைக்கும் நிர்வாக வசதிக்காக மாநிலங்கள் பிரியவேண்டும் என்பதற்கும் வித்தியாசம் இருக்கிறது. இந்தநாட்டின் ஒற்றுமைக்கு எதிராக பா.ஜ.க என்றும் பேசுவதில்லை.''

திரௌபதி முர்மு
திரௌபதி முர்மு

``ஜனாதிபதி தேர்தலுக்காகத்தான் அ.தி.மு.க-வில் ஓ.பி.எஸ், இ.பி.எஸ் இருவரையும் ஆதரிப்பதுபோல காட்டிக்கொள்கிறார்கள். தேர்தல் முடிந்ததும் ஓ.பி.எஸ்-ஸுக்கு ஆதரவாக பா.ஜ.க களம் இறங்கும் என்று சொல்லப்படுகிறதே?''

``மாற்றுக் கட்சி விவகாரங்களிலும் நாங்கள் எப்போதும் தலையிடுவது கிடையாது. ஆனால், ஒரு விஷயம் இப்போது தமிழ்நாட்டில் புலப்படுகிறது. தமிழ்நாட்டில் பா.ஜ.க எங்கே இருக்கிறது, பா.ஜ.க வளரவே முடியாது என்று பேசியவர்கள் இப்போது எதற்கெடுத்தாலும் பா.ஜ.க-தான் காரணம் எனச் சொல்வது சந்தோசமான விஷயம்தான்.''