Published:Updated:

`விமர்சனம் வைத்தால் ஏன் தாங்க முடியவில்லை?' - திமுக அரசுக்கு வானதி சீனிவாசன் கேள்வி

வானதி சீனிவாசன்

``விமர்சனம் வைத்தால் இந்த அரசுக்கு ஏன் தாங்க முடியவில்லை. கேள்வி கேட்பவர்களின் குரலை நசுக்குகின்றதா?" - வானதி சீனிவாசன்

`விமர்சனம் வைத்தால் ஏன் தாங்க முடியவில்லை?' - திமுக அரசுக்கு வானதி சீனிவாசன் கேள்வி

``விமர்சனம் வைத்தால் இந்த அரசுக்கு ஏன் தாங்க முடியவில்லை. கேள்வி கேட்பவர்களின் குரலை நசுக்குகின்றதா?" - வானதி சீனிவாசன்

Published:Updated:
வானதி சீனிவாசன்

கோவை தெற்கு சட்ட மன்ற உறுப்பினரும், பாஜக தேசிய மகளிரணித் தலைவருமான வானதி சீனிவாசன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், ``கடந்த வாரம் சட்டமன்றத்தில் பட்ஜெட் தாக்கலின்போது எனக்குப் பேச வாய்ப்பு வழங்கப்பட்டது. அப்போது கோவைக்கு மெட்ரோ ரயில் சேவை,

வானதி சீனிவாசன்
வானதி சீனிவாசன்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஸ்மார்ட் சிட்டி பணிகளை விரைவுபடுத்த நடவடிக்கைகள் இல்லை, புதிய சாலைகள் போடவில்லை, குடிநீர் விநியோகம் சரியில்லை என்பதைப் பதிவுசெய்தேன். சட்டமன்றத்தில் என்னைப் பேச விடாமல் பல்வேறு துறை அமைச்சர்கள் இடையூறு செய்தனர்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

வரிக்கு வரி அமைச்சர்கள் நீண்ட நேரம் விளக்கம் கொடுத்து, என்னுடைய பேசும் நேரத்தைக் குறைக்கின்றனர். நான் பேசியது தொடர்பான வீடியோக்களைக்கூட சட்டப்பேரவையிலிருந்து பெற முடியவில்லை. ஆனால் அமைச்சர்களின் வீடியோக்கள் மட்டும் வருகின்றன.

வானதி சீனிவாசன்
வானதி சீனிவாசன்

பட்ஜெட்டில் கோவை மக்கள் எதிர்பார்த்தது கிடைக்கவில்லை. கோவை புறக்கணிக்கப்பட்டுள்ளது. ஆனால் கொலுசு மட்டும் கிடைத்தது என்று பேசினேன். அதில் கொலுசு என்ற வார்த்தையை மட்டும் நீக்கிவிட்டனர். சிறு, குறு தொழில்களை ஊக்கப்படுத்த எந்த அறிவிப்பும் தமிழக பட்ஜெட்டில் இல்லை.

பாஜக சித்தாந்தத்துக்கு ஆதரவாகப் பேசும், மருத்துவர் சுப்பையா, மாரிதாஸ் போன்றவர்கள் மீது தொடர்ந்து நடவடிக்கை எடுத்துவருகிறார்கள். விமர்சனம் வைத்தால் இந்த அரசுக்கு ஏன் தாங்க முடியவில்லை... கேள்வி கேட்பவர்களின் குரலை நசுக்குகின்றதா? மாநில அரசின் நிதி நிலை அறிக்கையில் இலக்கு வைத்ததைச் செய்ய முடியவில்லை.

மருத்துவர் சுப்பையா
மருத்துவர் சுப்பையா

ஆனால், மத்திய அரசு நிதி வருவாயைப் பகிர்ந்து அளித்துள்ளது. இதனால் 24% உயர்ந்த வரி வருவாயைத் தமிழகத்துக்கு வழங்கியிருக்கிறது. மத்திய அரசு வரியை வசூல் செய்து தமிழகத்துக்குக் கொடுக்கிறது. மாநில அரசு நிதி வருவாயை வசூலிக்க எதுவும் செய்யவில்லை" என்றார்.