Published:Updated:

`இது உரிமை மீறல் இல்லையே..!' - ஆளுநர் விவகாரம் குறித்து வானதி சீனிவாசன் பதில்

கோவை தெற்குத் தொகுதி எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் செய்தியாளர்களைச் சந்தித்தபோது ஆளுநர் விவகாரம் தொடர்பாக பதிலளித்தார்.

கோவை தெற்குத் தொகுதி எம்.எல்.ஏ-வும், பாஜக தேசிய மகளிரணித் தலைவருமான வானதி சீனிவாசன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், ``கோவை மாநகராட்சிப் பகுதியில் குப்பைகள் தேங்கியிருக்கின்றன. மோசமான சாலைகளால் விபத்துகள் நிகழ்கின்றன.

வானதி சீனிவாசன்
வானதி சீனிவாசன்
விவசாயிகளுக்கு ஸ்மார்ட் போன் கொடுங்கள்... 
வானதி சீனிவாசன் கோரிக்கை!

சாக்கடைக் கால்வாய்களை தூர்வார வேண்டும். இவற்றையெல்லாம் அதிகாரிகளின் கவனத்துக்குக் கொண்டு சென்றிருக்கிறோம். சட்டமன்றத்தில் ஏராளமான கோரிக்கைகளை முன்வைத்துள்ளேன். முதல்வரும் அமைச்சர்களும் ஏற்கெனவே பதிலளித்துள்ளனர்.

அவற்றில் சில கோரிக்கைகள் ஏற்கப்பட்டு, பணிகள் தொடங்கியுள்ளன. அதற்குத் தமிழக அரசுக்கு எங்கள் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம். பாஜக சார்பில் கேரளாவுக்கு நிவாரண உதவிகள் அனுப்பப்பட்டுள்ளன. சசிகலாவை வரவேற்பதும், வரவேற்காமல் இருப்பதும் அதிமுக-வின் முடிவு.

வானதி சீனிவாசன்
வானதி சீனிவாசன்

அதில் பாஜக-வுக்கு எந்தப் பங்கும் இல்லை. ஆளுநர் புதிதாகத் தமிழகம் வந்திருக்கிறார். அதன் காரணமாக, மாநில அரசிடம் திட்டங்களைத் தெரிந்துகொள்வதற்காக கோரிக்கை வைத்திருக்கிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

தலைமைச் செயலாளர் அதற்கான கோப்புகளைத் தயார் செய்யச் சொல்லியிருக்கிறார். தமிழகத்தில், அரசுத் திட்டங்களில் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதைத்தானே கேட்டிருக்கிறார்கள்... இதில் எந்தத் தவறுமில்லை.

ஆளுநர் ரவி
ஆளுநர் ரவி

உரிமை மீறலோ, அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரான விஷயமோ கிடையாது. இது வழக்கமாக நடப்பதுதான். ஆளுநரைப் பற்றி ஏதாவது சொல்ல வேண்டுமே என்பதற்காக இப்படி சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்” என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு