Published:Updated:

``பிரதமர் மோடி எனக்கு பெரிய இன்ஸ்பிரேஷன்!"- `தடையொன்றுமில்லை' புத்தக வெளியீட்டு விழாவில் வானதி

வானதி சீனிவாசன்

``ஒரு சாதாரண தொண்டனைக்கூட பண்படுத்தி எப்படி தலைவர் ஆக்குவது என்கிற வித்தையை பாஜக-வும் , ஆர்.எஸ்.எஸ் அமைப்பும் தங்கள் வசம் வைத்திருக்கின்றன." - வானதி சீனிவாசன்

``பிரதமர் மோடி எனக்கு பெரிய இன்ஸ்பிரேஷன்!"- `தடையொன்றுமில்லை' புத்தக வெளியீட்டு விழாவில் வானதி

``ஒரு சாதாரண தொண்டனைக்கூட பண்படுத்தி எப்படி தலைவர் ஆக்குவது என்கிற வித்தையை பாஜக-வும் , ஆர்.எஸ்.எஸ் அமைப்பும் தங்கள் வசம் வைத்திருக்கின்றன." - வானதி சீனிவாசன்

Published:Updated:
வானதி சீனிவாசன்

பா.ஜ.க மகளிர் அணி தலைவியும் கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் எழுதிய ‘தடையொன்றுமில்லை’ புத்தகம் இன்று வெளியிடப்பட்டது.

கோவை தனியார் கல்லூரியில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி, மூத்த பா.ஜ.க தலைவர்கள் கலந்துகொண்டனர்.

வானதி சீனிவாசன்
வானதி சீனிவாசன்

நிகழ்ச்சியில் பேசிய எம்.எல்.ஏ வானதி சீனிவாசன், ``என் வாழ்க்கையில் ஒரு சிறந்த நாளில் மத்திய அமைச்சர் வந்தது பெருமைக்குரியது. பொதுவாழ்க்கைக்கு உறுதுணையாக இருந்த பெற்றோருக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். பொன்.ராதாகிருஷ்ணன் தலைவராக இருக்கும்போதுதான் முதன்முதலில் கட்சிக்குள் நுழைந்தேன்.

மத்திய அமைச்சர்
மத்திய அமைச்சர்

கட்சியில் பல வேலைகள் கொடுப்பார்கள், அதற்கு உறுதுணையாக அண்ணன் ஹெச்.ராஜா இருந்தார். ஏன் இந்த புத்தகத்தை எழுதினேன் என்றால் ஒரு சாதாரண கிராமத்தில் இருக்கும் பெண்மணிக்கு ஒரு சமூகம் உதவி செய்தால் அவர்களின் பெற்றோர் உதவி செய்தால் சமூகத்தில் உயர் பொறுப்பில் இருப்பவர்கள் உதவி செய்தால் நிச்சயம் இந்த இடத்தை அடைய முடியும் என சமூகத்திற்கு சொல்லத்தான் இந்த புத்தகத்தை எழுதியுள்ளேன் .

நான் என் அனுபவங்களை எழுதியிருக்கிறேன். என்னுடைய கட்சிப் பணி மாணவ அமைப்பில் மேற்கொண்ட முயற்சிகள் என பல்வேறு அனுபவங்களை இந்த புத்தகத்தில் எழுதியிருக்கிறேன். ஒரு சாதாரண தொண்டனைக்கூட பண்படுத்தி எப்படி தலைவர் ஆக்குவது என்கிற வித்தையை பாஜக-வும் , ஆர்.எஸ்.எஸ் அமைப்பும் தங்கள் வசம் வைத்திருக்கின்றன.

வானதி சீனிவாசன்
வானதி சீனிவாசன்

கோவையில் கிடைக்கும் அனுபவங்கள் தேசிய அளவில் பயனாக உள்ளது. நான் அரசியலில் இருப்பது மக்களுக்கு சேவை செய்வதற்காகத்தான். `இந்தியர்கள் ஒவ்வொருவருக்கும் நான் சேவகன் ஆக இருப்பேன்' என்று சொல்வார் பிரதமர் மோடி. எனக்கு பிரதமர் மோடி பெரிய இன்ஸ்பிரேஷன். எப்போதெல்லாம் கடுமையான பணிச்சுமை ஏற்படுகிறதோ... அப்போதெல்லாம் பிரதமர் மோடியைத்தான் நினைத்துக் கொள்வேன். ஒவ்வொரு நொடியும் எத்தனை அவமானங்கள், எத்தனை இழிவு சொற்கள் அனைத்தையும் தாங்கிக் கொண்டு இந்தியாவை வல்லரசு நாடாக்க வேண்டும் என உழைத்துக் கொண்டிருக்கிறார். அவரை முன்மாதிரியாக கொண்டு அனைவரும் இந்த இயக்கத்திற்காக செயல்படுவோம்" என்று பேசினார்.