Published:Updated:

``ஜின்னா செய்த வேலையைத்தான் ஒவைசி செய்கிறார்!" - எச்சரிக்கும் பாஜக எம்.பி

அசாதுதீன் ஒவைசி ( ட்விட்டர் )

பா.ஜ.க எம்.பி ஹர்நாத் சிங் யாதவ், ஏ.ஐ.எம்.ஐ.எம் தலைவர் ஒவைசியை, ஜின்னாவுடன் ஒப்பிட்டு, ``நாட்டை உடைக்கும் செயலை ஒவைசி நிறுத்தாவிட்டால், இனிவரும் காலங்களை அவர் சிறையில்தான் கழிக்க வேண்டும்" எச்சரிக்கை விடுத்துள்ளார்.

``ஜின்னா செய்த வேலையைத்தான் ஒவைசி செய்கிறார்!" - எச்சரிக்கும் பாஜக எம்.பி

பா.ஜ.க எம்.பி ஹர்நாத் சிங் யாதவ், ஏ.ஐ.எம்.ஐ.எம் தலைவர் ஒவைசியை, ஜின்னாவுடன் ஒப்பிட்டு, ``நாட்டை உடைக்கும் செயலை ஒவைசி நிறுத்தாவிட்டால், இனிவரும் காலங்களை அவர் சிறையில்தான் கழிக்க வேண்டும்" எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Published:Updated:
அசாதுதீன் ஒவைசி ( ட்விட்டர் )

ஏ.ஐ.எம்.ஐ.எம் தலைவர் ஒவைசி, பணவீக்கம், வேலையில்லாத் திண்டாட்டம், எரிபொருள் விலையேற்றம், சமீபத்திய மசூதி விவகாரம் போன்றவற்றில், பா.ஜ.க அரசையும், மோடியையும் கடுமையாக விமர்சித்து வருகிறார். இந்த நிலையில், பா.ஜ.க எம்.பி ஹர்நாத் சிங் யாதவ், ஒவைசியை பாகிஸ்தானை நிறுவிய முகமது அலி ஜின்னாவுடன் ஒப்பிட்டு கடுமையாக விமர்சித்திருக்கிறார்.

இது தொடர்பாக தனியார் செய்தி நிறுவனத்திடம் பேசிய ஹர்நாத் சிங், ``சுதந்திரத்துக்கு முன்னர் ஜின்னா செய்த, நாட்டை அழிக்கும் அதே வேலையைத்தான் ஒவைசி இன்று நன்கு திட்டமிட்டுச் செய்துவருகிறார். ஒவைசியின் இந்த அணுகுமுறையை இந்திய மக்கள் பொறுத்துக்கொள்ளவும் மாட்டார்கள், இதுபோன்ற தவறான செயல்களை அனுமதிக்கவும் மாட்டார்கள்.

பா.ஜ.க எம்.பி ஹர்நாத் சிங் யாதவ்
பா.ஜ.க எம்.பி ஹர்நாத் சிங் யாதவ்

முஸ்லிம் சமூகத்தை ஒவைசி தவறாக வழிநடத்த முயற்சிக்கிறார். நாட்டை உடைக்கும் செயலை ஒவைசி நிறுத்தவில்லையென்றால், இனிவரும் காலங்களை அவர் சிறையில்தான் கழிக்க வேண்டும்" என்று எச்சரித்தார்.

முன்னதாக நேற்று பத்திரிகையாளர்களிடம் பேசிய ஒவைசி, ``பெட்ரோல் விலை உயர்வுக்கு ஔரங்கசீப்தான் காரணம். பணவீக்கம், வேலையில்லாத் திண்டாட்டத்துக்கு அக்பரும், ஷாஜஹானும்தான் காரணம். இதைத்தான் நானும் நம்புகிறேன். இதில் எதற்குமே பிரதமர் பொறுப்பல்ல" என மோடியை விமர்சித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism