Published:Updated:

``தமிழ்நாட்டில் கருணாநிதி, ஸ்டாலின், உதயநிதி என வரிசையாக வருகின்றனர்..!" - ஜே.பி.நட்டா தாக்கு

ஜே.பி.நட்டா

``குடும்ப அரசியல், ஊழல், கட்டப்பஞ்சாயத்து, மாநிலப் பிரிவினைவாதம் பேசும் தி.மு.க-வைப் புறக்கணிப்போம்" என்று பா.ஜ.க தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா காரைக்குடியில் பேசினார்.

``தமிழ்நாட்டில் கருணாநிதி, ஸ்டாலின், உதயநிதி என வரிசையாக வருகின்றனர்..!" - ஜே.பி.நட்டா தாக்கு

``குடும்ப அரசியல், ஊழல், கட்டப்பஞ்சாயத்து, மாநிலப் பிரிவினைவாதம் பேசும் தி.மு.க-வைப் புறக்கணிப்போம்" என்று பா.ஜ.க தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா காரைக்குடியில் பேசினார்.

Published:Updated:
ஜே.பி.நட்டா

இரண்டு நாள் பயணமாக தமிழ்நாடு வந்திருக்கும் பா.ஜ.க தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா, காரைக்குடியில் நடந்த பிரதமர் மோடி பிறந்தநாள்விழா பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.

ஜே.பி.நட்டா
ஜே.பி.நட்டா

அப்போது பேசிய அவர், ``தமிழ்நாடு புண்ணிய பூமி. பல விடுதலை வீரர்களைத் தந்த பூமி. அறிவுஜீவிகள் நிறைந்த மண். தேசிய அரசியலில் தவிர்க்க முடியாததாக தமிழ்நாடு இருக்கிறது. பிரதமர் மோடி ஐ.நா-வில் தமிழ்நாட்டின் சிறப்புகளைப் பற்றி பேசியிருக்கிறார். மோடி அரசு கொரோனா காலகட்டத்தில் சிறப்பாகச் செயல்பட்டதால்தான் நாம் யாரும் முகக்கவசம் அணியாமல் தைரியமாக இருக்கிறோம். இந்தியா பொருளாதாரத்தில் மட்டுமல்ல, சமூகம் சார்ந்தும் முன்னேறியிருக்கிறது. தற்போது நரிக்குறவர்களை எஸ்.டி பட்டியலில் சேர்த்து அங்கீகாரம் கொடுக்கப்பட்டிருக்கிறது. நம் நாடு ஆயுதங்களை இறக்குமதி செய்துவந்தது. தற்போது ரூ.8,400 கோடிக்கு ஆயுதங்களை ஏற்றுமதி செய்திருக்கிறது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

விவசாயத்துறைக்கான நிதி ஒதுக்கீட்டை ஐந்து மடங்கு உயர்த்தியிருக்கிறோம். ரூ.27,000 கோடியிலிருந்து ரூ.1.3 லட்சம் கோடியாக உயர்ந்திருக்கிறது. உலகப் பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்தாலும், இந்தியப் பொருளாதாரம் வளர்ச்சி அடைந்திருக்கிறது. ஏற்றுமதி 15 சதவிகிதம் அதிகரித்திருக்கிறது.

ஜே.பி.நட்டா
ஜே.பி.நட்டா

சமீபத்தில் ரூ.31,500 கோடி மதிப்பீட்டில் தமிழ்நாட்டில் 11 திட்டங்களை பிரதமர் தொடங்கிவைத்திருக்கிறார். சென்னை, மதுரை, திருச்சி, கோயம்புத்தூருக்கு பாதுகாப்பு வழித்தட தொழிற்சாலைகள் கொண்டுவரப்பட்டிருக்கின்றன. 11 மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்பட்டிருகின்றன.

பல திட்டங்களுக்கு பல்லாயிரம் கோடி ரூபாய் நிதியைத் தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு கொடுத்திருக்கிறது. பா.ஜ.க கொள்கை அடிப்படையிலான கட்சி, அனைத்து மாநிலங்களிலும் தேசியக் கட்சியாக இருக்கிறது. மற்ற கட்சிகள் சுருங்கி மாநில கட்சிகளாக மாறிவிட்டன. தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்களில் குடும்ப அரசியல் இருக்கிறது. தமிழ்நாட்டில் கருணாநிதி, ஸ்டாலின், உதயநிதி என வரிசையாக வருகின்றனர். அந்தந்த மாநிலங்களில் குடும்ப அரசியலை எதிர்த்து பா.ஜ.க போராடிவருகிறது.

ஜே.பி.நட்டா மதுரை வந்தபோது
ஜே.பி.நட்டா மதுரை வந்தபோது

தமிழ் இலக்கியங்கள், பாரம்பர்யம், பண்பாட்டை பா.ஜ.க மதிக்கிறது. இதில் தி.மு.க-வுக்கு எந்தப் பங்களிப்பும் இல்லை. நீட் தேர்வால் கிராம மக்கள் எளிதில் மருத்துவப் படிப்பைப் பெறுகின்றனர். தேசிய கல்விக் கொள்கை பற்றி எதுவும் தெரியாமல் பேசுகின்றனர். இதில் மருத்துவப் படிப்பைக்கூட தமிழில் படிக்கலாம். குடும்ப அரசியல், ஊழல், கட்டப்பஞ்சாயத்து, மாநிலப் பிரிவினைவாதம் பேசும் தி.மு.க-வைப் புறக்கணிப்போம். விரைவில் தமிழ்நாட்டில் தாமரை மலரும்" என்றார்.