Published:Updated:

``இந்த முறை தமிழகத்திலிருந்து 25 எம்.பி-க்கள் வேண்டும்!" - கோவையில் அண்ணாமலை பேச்சு

அண்ணாமலை - நட்டா

``தி.மு.க கருணாநிதி குடும்பத்துக்கான கட்சி. காங்கிரஸ் காந்தி குடும்பத்துக்கான கட்சி. அடுத்தமுறை நான் நீலகிரி வரும்போது இங்கு தாமரை மலர்ந்திருக்க வேண்டும்." - ஜே.பி.நட்டா

``இந்த முறை தமிழகத்திலிருந்து 25 எம்.பி-க்கள் வேண்டும்!" - கோவையில் அண்ணாமலை பேச்சு

``தி.மு.க கருணாநிதி குடும்பத்துக்கான கட்சி. காங்கிரஸ் காந்தி குடும்பத்துக்கான கட்சி. அடுத்தமுறை நான் நீலகிரி வரும்போது இங்கு தாமரை மலர்ந்திருக்க வேண்டும்." - ஜே.பி.நட்டா

Published:Updated:
அண்ணாமலை - நட்டா

பா.ஜ.க சார்பில் 2024 நாடாளுமன்றத் தேர்தலையொட்டி, கோவை, நீலகிரி தொகுதிகளுக்கான பிரசார பொதுக்கூட்டம் கோவை காரமடை பகுதியில் இன்று நடைபெற்றது. இதில் பா.ஜ.க-வின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, மத்திய இணையமைச்சர் எல்.முருகன், தமிழக பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை, நயினார் நாகேந்திரன், வானதி சீனிவாசன் போன்ற எம்.எல்.ஏ-க்கள் உட்பட பலரும் கலந்துகொண்டனர்.

பாஜக பொதுக்கூட்டம் - கோவை
பாஜக பொதுக்கூட்டம் - கோவை

பின்னர் பொதுக்கூட்டத்தில் தொடக்கத்தில் மேடையில் பேசிய அண்ணாமலை, ``எம்.பி-க்கள் இல்லையென்றாலும் கோவை, நீலகிரிக்கு பிரதமர் வாரி வழங்கி வருகிறார். தி.மு.க ஆட்சிக்கு வந்ததிலிருந்து கொங்கு மண்டலம் அதிகம் புறக்கணிக்கப்படுகிறது. கொங்கு மண்டலத்திலிருந்து எதை எடுக்கலாம் என தி.மு.க நினைக்கிறது. ஆனால் பா.ஜ.க கொங்கு மண்டலத்துக்கு என்ன கொடுக்கலாம் என நினைக்கிறது.

அண்ணாமலை - ஜே.பி.நட்டா
அண்ணாமலை - ஜே.பி.நட்டா

தி.மு.க பட்டத்து இளவரசருக்கான ஆட்சி. யாரை வேண்டுமானாலும் விலை கொடுத்துவிடலாம் என நினைக்கின்றனர். தி.மு.க-காரர்கள், முதல்வர் `நம்பர் ஒன்' என வெட்கமே இல்லாமல் போஸ்டர் ஒட்டிக் கொண்டிருக்கிறார்கள். அவர் ஊழல் செய்வதில், மக்களை ஏமாற்றுவதில், பொய் சொல்வதில், குடும்ப ஆட்சி நடத்துவதில் நம்பர் ஒன். 2024 நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க 400 தொகுதிகளுக்கு மேல் கைப்பற்றி மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும். 2014, 2019-ல் தவறு செய்துவிட்டோம். இந்தமுறை 25 எம்.பி-க்களை தமிழகத்திலிருந்து அனுப்ப வேண்டும்" என்று கூறினார்.

ஜே.பி.நட்டா
ஜே.பி.நட்டா

அதையடுத்து உரையாற்றத் தொடங்கிய ஜே.பி.நட்டா, ``கொரோனா வைரஸ், உக்ரைன் போருக்குப் பிறகு சீனா உள்ளிட்ட உலக நாடுகள் பொருளாதாரத்தைச் சீர்படுத்தத் திணறி கொண்டிருக்கின்றன. மோடி தலைமையின் கீழ் நம் பொருளாதாரம் முன்னேற்றமடைந்து வருகிறது. உலக அளவில் பல்வேறு துறைகளில் இந்தியா முன்னிலை வகிக்கிறது. நாட்டில் உள்ள அனைவரும் உணவு உட்கொண்டுதான் உறங்க வேண்டும் என்பதற்காக மோடி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். இது நரேந்திர மோடியின் அரசு. இதில் பட்டியலினத்தைச் சேர்ந்த பழங்குடி பெண் ஜனாதிபதி ஆகியிருக்கிறார். பட்டியலினத்தைச் சேர்ந்த பலர் மத்திய அமைச்சராகியிருக்கின்றனர். இப்படி பட்டியலினத்தைச் சேர்ந்தவர்கள், பெண்கள், இளைஞர்களின் வளர்ச்சிக்காகச் செயல்படும் அரசு இது.

பாஜக பொதுக்கூட்டம் - கோவை
பாஜக பொதுக்கூட்டம் - கோவை

தமிழ்நாட்டில்தான் அதிக அளவு மருத்துவக் கல்லூரிகள் திறக்கப்பட்டிருக்கின்றன. பா.ஜ.க ஆட்சிக்கு வரும் முன்பு இந்தியா, மருந்துகளை உற்பத்தி செய்ய முடியாமல் திணறி வந்தது. சீனாவில் என்ன நடக்கிறது... கொரோனாவை கட்டுப்படுத்த முடியாமல் சீன அதிபர் திணருகிறார். மேற்கத்திய நாடுகள்கூட தடுப்பூசி விஷயத்தில் சிறப்பாகச் செயல்படவில்லை. இந்தியாவில் 220 கோடி டோஸ் தடுப்பூசி மற்றும் பூஸ்டர் ஊசி போடப்பட்டிருக்கிறது. உலகுக்கே இந்தியா மருந்துகளை வழங்கும் அளவுக்கு முன்னேறியிருக்கிறது. நாடு பாதுகாப்பானவர்கள் கையிலிருக்கிறது. மாநிலம் பாதுகாப்பாக இல்லை. கையை மாற்ற வேண்டும். நாம் ஒருமைப்பாட்டை வலியுறுத்துகிறோம். அவர்கள் பிரிவினையைத் தூண்டுகிறார்கள். தி.மு.க கருணாநிதி குடும்பத்துக்கான கட்சி. காங்கிரஸ் காந்தி குடும்பத்துக்கான கட்சி. அடுத்தமுறை நான் நீலகிரி வரும்போது இங்கு தாமரை மலர்ந்திருக்க வேண்டும்" என்றார்.