Published:Updated:

அன்புச்செழியனுடன் தொடர்பில் உள்ளவர்களும் விரைவில் சிக்குவார்கள்!

ஹெச்.ராஜா
பிரீமியம் ஸ்டோரி
News
ஹெச்.ராஜா

ஹெச்.ராஜா அதிரடி

பா.ஜ.க தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா வாய் திறந்தாலே, அதிரடி சரவெடிதான்! சமீபத்தில் கட்சி நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக மதுரை வந்திருந்தபோதும் பல வெடிகளைக் கொளுத்திப்போட்டார்.

‘‘தி.மு.க-வும் அதன் இணைப்புக் கட்சிகளும் இந்து மதத்தின்மீது திட்டமிட்டு தொடர்ந்து தாக்குதல் நடத்திவருகின்றன. அதன் ஒரு பகுதியாகத்தான் தேனியில் ஓ.பி.ரவீந்திரநாத்குமார் மீது பயங்கர தாக்குதல் நடத்தப்பட்டது. குடியுரிமைச் சட்டத்தை ஆதரித்தவருக்கு எதிராகத் தாக்குதல் நடத்தியதுபோல், எதிர்த்த

38 எம்.பி-களுக்கு எதிராக நாங்களும் தாக்குதல் நடத்தினால் தாங்குவார்களா? குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராக தி.மு.க-வினர் மிரட்டி கையெழுத்து வாங்குகின்றனர்.

பிராமணர்களை எதிர்த்து வந்த தி.மு.க, இப்போது பீகார் பிராமணரான பிரஷாந்த் கிஷோரிடம் சரணடைந்துள்ளது. தஞ்சை பெருவுடையார் கோயிலில் தமிழில் பூஜை நடத்த வேண்டும் என நாத்திகவாதிகளும், டேவிட் மணியரசன், செபாஸ்டின் சைமன் போன்றோர்தான் போராடினார்கள். சிவ வழிபாட்டைக் கேலி செய்த சீமான், பெருவுடையார் கோயிலுக்குச் சென்றது ஏன்?’’ என்றெல்லாம் ஆவேசமாக முழங்கிய ஹெச்.ராஜாவிடம் சில கேள்விகளை முன்வைத்தோம்.

‘‘பெரிய கோயில் குடமுழுக்கில் தமிழிலும் வழிபாடு நடத்த எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்தாலும், அ.தி.மு.க அரசுதானே அதற்கு உத்தரவிட்டது?’’

‘‘பொய்யான பிரசாரங்களால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள எல்லா கோயில்களிலும் தமிழ் உள்ளது. `சிவபெருமானின் உடுக்கையில் ஒரு பக்கம் தமிழ், இன்னொரு பக்கம் சம்ஸ்கிருதம்’ என்று காஞ்சி பெரியவர் கூறியிருக்கிறார். அப்படியிருக்கையில், கோயில்களில் தமிழ் இல்லை என்று தொடர்ந்து பொய்யான தகவல் பரப்பப்படுகிறது. அதேநேரம், தமிழர்களான இஸ்லாமியர்களின் மசூதிகளில் தமிழ் வழிபாடு நடத்த வேண்டும் என்று இதே நாத்திகவாதிகள் போராட்டம் நடத்துவார்களா?’’

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

‘‘ `ரஜினி அமைக்கும் கூட்டணியில் பா.ம.க இருக்கும், பா.ஜ.க இருக்கக் கூடாது’ என்று தமிழருவி மணியன் கூறியுள்ளாரே?’’

‘‘இதைச் சொல்ல தமிழருவி மணியன் யார்? ‘இவர்தான் என் செய்தித் தொடர்பாளர்’ என்று ரஜினி அறிவித்துள்ளாரா?’’

ஹெச்.ராஜா
ஹெச்.ராஜா

‘‘தமிழக பா.ஜ.க தலைவர் பதவி ரஜினிக்காகக் காத்திருப்பதாகச் சொல்லப்படுகிறதே?’’

‘‘இதெல்லாம் ரூமர். உண்மையல்ல.’’

‘‘பஞ்சமி நிலம் சம்பந்தமாக புகார் அளித்த தமிழக பா.ஜ.க, அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனால் பழங்குடியின சிறுவன் இழிவுபடுத்தப்பட்டதாக கண்டனங்கள் எழுந்தபோது, அமைச்சரைக் கண்டிக்கவில்லை என்ற விமர்சனம் உள்ளதே?’’

‘‘இப்படி விமர்சிப்பவர்கள், திருச்சியில் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த பா.ஜ.க நிர்வாகி விஜயரகு கொல்லப் பட்டதற்கு எந்தக் கண்டனமும் தெரிவிக்க வில்லையே... அது ஏன்?’’

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

‘‘நடிகர் விஜய் படத்தின் ஷூட்டிங் நடைபெறக் கூடாது என, நெய்வேலியில் பா.ஜ.க-வினர் போராட்டம் நடத்தியுள்ளார்களே?’’

‘‘அது விஜய்க்கு எதிராக நடந்த போராட்டம் அல்ல.

என்.எல்.சி நிர்வாகத்துக்கு எதிராக நடந்த போராட்டம். பல வருடங்களுக்கு முன் சரத்குமார் நடித்த `அரவிந்தன்’ படப்பிடிப்பின்போது அங்கு விபத்து நடந்தது. அதுமுதல் அங்கு ஷூட்டிங் நடத்த அனுமதிப் பதில்லை. அதை மீறியதை எதிர்த்துதான் போராட்டம் நடத்தினார்கள்.’’

‘‘நடிகர் விஜய் தொடர்பான இடங்களில் ரெய்டு நடத்தப்படுவது அரசியல் பழிவாங்கல் என்று சொல்லப்படுகிறதே?’’

‘‘விஜய் எல்லாம் எங்களுக்கு ஓர் ஆள் இல்லை. சினிமா உலகில் கறுப்புப் பண முதலீடு அதிகரித்துள்ளது. வருமானவரித் துறைக்கு உறுதிசெய்யப்பட்ட தகவல் கிடைத்தால் நடவடிக்கை எடுப்பார்கள். இது வழக்கமானது. இதை எப்படி பழிவாங்கல் என்று கூற முடியும்? அன்புச்செழியன் என்பவரிடமிருந்து 77 கோடி ரூபாய் ரொக்கமாகக் கைப்பற்றியுள்ளனர். இதெல்லாம் பழிவாங்கலா?’’

‘‘அன்புச்செழியன், உங்கள் கூட்டணிக் கட்சியான அ.தி.மு.க-வில் பொறுப்பில் இருக்கிறாரே?’’

‘‘அதைப்பற்றியெல்லாம் வருமானவரித் துறை பார்க்காது, அன்புச்செழியனுடன் தொடர்பில் உள்ள முக்கியப்புள்ளிகளும் விரைவில் சிக்குவார்கள் என்று தகவல் வருகிறது. அது உண்மையாகிறதா எனப் பார்ப்போம்.’’

‘‘பட்ஜெட் உரையின்போது நிர்மலா சீதாராமன், `சரஸ்வதி சிந்துவெளி நாகரிகம்’ எனக் குறிப்பிட்டதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளதே?’’

‘‘பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் மனித இனமே நம் நாட்டில் தோன்றித்தான் பல நாடுகளுக்குப் பரவியது. அப்படிப்பட்ட நம் கலாசாரத்தில் சரஸ்வதி நதி இருந்திருக்கிறது. கீழடியில் பல்லாயிரம் ஆண்டுக்கு முன் தொன்மையான நாகரிகம் இருந்ததுபோல் சரஸ்வதி நதியும் இருந்திருக்கிறது.’’