Published:Updated:

விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்காரர் கொலைமிரட்டல் விடுக்கிறார்!

ஹெச்.ராஜா
பிரீமியம் ஸ்டோரி
ஹெச்.ராஜா

ஹெச்.ராஜா பேட்டி

விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்காரர் கொலைமிரட்டல் விடுக்கிறார்!

ஹெச்.ராஜா பேட்டி

Published:Updated:
ஹெச்.ராஜா
பிரீமியம் ஸ்டோரி
ஹெச்.ராஜா

டெல்லியில் சி.ஏ.ஏ ஆதரவு - எதிர்ப்புப் போராட்டக்காரர்களுக்கு இடையிலான கலவரத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 35-ஐ எட்டியிருக்கிறது. இந்த நிலையில், ‘டெல்லியில் நடப்பது வண்ணாரப் பேட்டையில், தமிழகத்தில் ஏற்படலாம்’ என ட்விட்டரில் பதிவிட்டு, வழக்கம்போல் பரபரப்பைப் பற்றவைத்திருக்கிறார் பா.ஜ.க தேசியச் செயலாளரான ஹெச்.ராஜா. அவரிடம் பேசினோம்.

‘‘டெல்லி கலவரம் நாளை வண்ணாரப்பேட்டையிலும் தமிழகத்திலும் நடைபெறலாம் என நீங்கள் பதிவிட்டிருப்பதன் நோக்கம் என்ன?’’

‘‘டெல்லியில் பர்தா அணிந்திருந்த பெண்கள் கல் வீசியதைப் போன்றே, சென்னை வண்ணாரப்பேட்டையிலும் நடைபெற்றது. இதுகுறித்து நம் முதல்வர் சட்டசபையிலேயே பேசியிருக்கிறார். இதுமட்டுமல்ல, இணை கமிஷனர் விஜயகுமாரி நெற்றியில் வெட்டப்பட்டார். இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் பிளேடால் கிழிக்கப்பட்டார். பெண் காவலர் கலா படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆக, போராட்டத்துக்கு வந்திருப்பவர்களின் கைகளில் ஆயுதங்களும் இருக்கின்றன.

இப்போது டெல்லியில் துப்பாக்கியால் சுடும் அளவுக்கு வன்முறைப்பேர்வழிகள் வந்துவிட்டார்கள். தலைமைக் காவலர் ரத்தன் லாலை துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற ஷாரூக் என்கிற நபர் கைதுசெய்யப்பட்டிருக்கிறார். தமிழ்நாட்டிலும் 1984-ம் ஆண்டில் இந்து முன்னணியின் நிறுவனர் ராமகோபாலன் வெட்டப்பட்டதில் ஆரம்பித்து பல்வேறு முஸ்லிம் பயங்கரவாதச் செயல்கள் நடைபெற்றுள்ளன. எனவே, இங்கேயும் கலவரம் நிகழ வாய்ப்புள்ளதால் போராட்டக்காரர்களை வண்ணாரப் பேட்டையிலிருந்து அப்புறப்படுத்தவேண்டும் என்ற எச்சரிக்கையைத்தான் ட்விட்டரில் பதிவிட்டுள்ளேன்.’’

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

‘‘இல்லையே... டெல்லியில் இந்துக்கள், முஸ்லிம்கள் என இரு தரப்பினரும் வன்முறையில் ஈடுபட்டதை கண்கூடாகப் பார்த்தோமே. அதிலும், இந்துக்கள் தரப்பிலிருந்துதான் தாக்குதல் அதிகளவில் நிகழ்ந்ததே?”

‘‘இந்துக்கள் என்றைக்குமே வன்முறையில் ஈடுபட்டதோ, பயங்கரவாதத்தை கையில் எடுத்ததோ கிடையாது. மற்றபடி தனிப்பட்ட சிலரின் குற்ற நடவடிக்கைகளுக்கும், திட்டமிடப்பட்ட கும்பலின் வெறித்தன நடவடிக்கைகளுக்கும் வித்தியாசம் உண்டு. எனவே, இன்றைக்கு டெல்லியில் நடைபெற்றி ருப்பது ‘இந்தியாவுக்கு எதிரான வெறிபிடித்த கும்பலின் கலவரம்’. 1947-ம் ஆண்டில் இந்தத் தேசத்தைப் பிரித்த தீயசக்திகள், இங்கிருக்கும் எதிர்க்கட்சிகளுடன் ஒன்றுசேர்ந்து களமிறங்கியிருக்கின்றனர். எனவே, தேசபக்தர்கள் ஒன்றுசேர்ந்து இதைத் தடுக்க வேண்டும். இல்லை யென்றால் நாட்டுக்கு ஆபத்து!’’

ஹெச்.ராஜா
ஹெச்.ராஜா

“நீங்கள் சொல்வதுபோலவே வைத்துக்கொண்டாலும் டெல்லி கலவரத்தில் மசூதியின் உச்சிக்கு ஏறிச் சென்று ஒலிபெருக்கியையும் மதச் சின்னத்தையும் அடித்து நொறுக்குபவர்கள் யார்?’’

‘‘பர்தா அணிந்திருந்த பெண்கள் ஒரு போலீஸை கல்லால் அடித்தே கொன்றிருக்கிறார்கள். என்னமோ குழாயை அடிச்சுட்டான், டவரை இடிச்சுட்டான் எனப் பேசிக்கொண் டிருக்கிறீர்களே... ஊடகத்தினர் ஏன் இப்படி பிரச்னையை திசைதிருப்பு கிறீர்கள்?’’

‘‘சரி, டெல்லி கலவரம் திட்டமிடப்பட்ட ஒன்று என்ற எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டை நிரூபிப்பதாகவே உங்களின் ட்விட்டர் பதிவு இருக்கிறதே?’’

‘‘திட்டமிட்டது யார்? போராட்டம் என்ற போர்வையில் கல்லால் அடிப்பது எனத் திட்டமிட்டது முஸ்லிம் பயங்கரவாதிகள். சி.ஏ.ஏ மூலமாக ஆயிரக்கணக்கான அகதிகளுக்குக் குடியுரிமை வழங்கப்பட்டிருக்கும்போது, இந்தப் போராட்டத்துக்கு என்ன அவசியம்? இது 1947-க்கு முந்தைய கலவரத்தை மீண்டும் இந்தியாவில் ஏற்படுத்துவதற்கான திட்டம்தான். எனவே, திட்டமிடப்பட்ட பயங்கரவாதத்தின் ஓர் அங்கம்தான் டெல்லி கலவரம். இதுமட்டுமல்ல, இந்த வன்முறையின் பின்னணியில் இருப்பது ‘ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏ’ என்று விசாரணையில் கண்டுபிடித்திருக்கிறார்கள்.’’

‘‘உங்கள் கட்சியைச் சேர்ந்த கல்யாணராமனும் உங்களைப் போன்றே கருத்து பதிவிட்டிருக்கிறாரே?’’

‘‘நான் சொல்லியிருக்கிற கருத்தைப் பார்த்துவிட்டு அவரும் இதே கருத்தைச் சொல்லியிருக்கலாம். இது கோடிக்கணக்கான தேசபக்தர்களின் உணர்வு!’’

‘‘மக்களிடையே கலவரத்தைத் தூண்டிவருவதாகக் குற்றம் சாட்டப்படும் பா.ஜ.க தலைவர் கபில் மிஸ்ராவைக் கைதுசெய்யவேண்டும் என்று பா.ஜ.க எம்.பி-யான கவுதம் கம்பீரே பேசியிருக்கிறாரே?’’

‘‘யாராவது ஒருவர் பேசியிருந்ததை நாம் எடுத்துக்கொள்ளத் தேவையில்லை. ஆரம்பத்திலிருந்தே ‘இந்தப் போராட்டமே திட்டமிடப்பட்ட ஒன்று’ என்று நான் சொல்லிவிட்டேன். ‘மதரீதியில் பாதிக்கப்பட்டு வந்திருப்பவர்களுக்குக் குடியுரிமை வழங்கவேண்டும்’ என்று, 2003-ம் ஆண்டு ராஜ்யசபாவில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மன்மோகன் சிங்கே பேசியிருக்கிறார். ஆனால், இப்போது இத்தாலி சோனியா, ‘இண்டியன் அமித் ஷா ராஜினாமா செய்ய வேண்டும்’ என்கிறார். ஆக, காங்கிரஸ் கட்சிக்குள்ளேயே முரண்பாடு இருக்கிறது. இதைப் பற்றி ஊடகத்தினர் யாரும் பேச மாட்டேன் என்கிறீர்களே!’’

ஹெச்.ராஜா
ஹெச்.ராஜா

‘‘அரசுக்கு எதிராகப் போராடினால் உடனே ‘தேசத்துரோகிகள்’ என முத்திரை குத்திவிடுகிறீர்களே?’’

‘‘வண்ணாரப்பேட்டையில் பர்தா அணிந்திருந்த பெண்கள், போலீஸ் மீது கல்லால் அடிப்பதை நீங்கள் பார்க்கவில்லையா? இந்தச் சம்பவம் குறித்து கருணாநிதி என்கிற போலீஸ் அதிகாரியே வருத்தப்பட்டிருக்கிறார். ஆனால், ஊடகத்தினர் ஏன் அவர்களுக்கு வக்காலத்து வாங்குகிறீர்கள்? ‘உன்னைத் தாண்டா கொல்லப் போறோம்’னு விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்காரர் ஒருத்தரே என்னை போனில் மிரட்டுகிறார். அவரின் எண்ணை நான் பத்திரமாகக் குறித்துவைத்திருக்கிறேன்.’’