‘‘அமைச்சர்கள் செல்லூர் ராஜூவும் ஜெயக்குமாரும் எல்லைமீறிப் பேசுகின்றனர்’’ என்று கண்டித்த கையோடு, ‘‘ராகுல் காந்தி ஒரு அரைவேக்காடு, செமி இத்தாலியன்’’ என்று பேசி அதிரவைத்திருக்கிறார் பா.ஜ.க-வின் தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா. அண்மைக்காலமாக, பரபரப்பான கருத்துகளை ‘உதிர்க்காமல்’ அமைதிகாத்துவந்தவர், சட்டமன்றத் தேர்தல் நெருங்கிவருவதை முன்னிட்டு மீண்டும் வேட்டியை மடித்துக்கட்டி, களத்தில் குதித்திருக்கிறார். இந்த ‘ஏடாகூட’ கருத்துக்கு விளக்கம் கேட்டு, ஹெச்.ராஜாவிடம் பேட்டி கேட்டோம். அவர் அளித்த பதில்கள் இங்கே அப்படியே...

‘‘ `தமிழக அமைச்சர்கள் வரம்புமீறிப் பேசுகிறார்கள்’ என்று கண்டிக்கும் நீங்களே, ‘ராகுல் காந்தி ஒரு அரைவேக்காடு’ என்று பேசலாமா?’’

‘‘எது வரம்பு மீறிப் பேசியது... கூட்டணி தர்மத்தைக் கடைப்பிடிக்க விரும்புகிறவன் நான். விநாயகர் சதுர்த்தி சம்பந்தமாக நான் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், தமிழக அரசுக்கு எதிராக எந்தப் புகாரையும் சொல்லவில்லை. ‘கர்நாடகாவில் தைரியமான ஒரு நடவடிக்கை எடுத்திருக்கிறார்கள்’ என்று என் குழந்தையை ‘வாடா கண்ணே’ என்று கொஞ்சினால், எதிர் வீட்டுக்காரருக்கு அதில் என்ன பிரச்னை இருக்கிறது? இந்த விவகாரத்தில், அமைச்சர் ஜெயக்குமார் என்னைக் குறிப்பிட்டுப் பேச வேண்டிய தேவையில்லை என்பது என் கருத்து.

அடுத்ததாக அமைச்சர் செல்லூர் ராஜூ, ‘டெல்லிக்கே ராஜாவானாலும் இங்கே யாரையாவது குதிரையேறத்தான் வேண்டும்’ என்று பேசியிருக்கிறார். பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான கட்சியை அவர் இப்படிப் பேசியிருப்பதை, மோடியையே இகழ்ந்து பேசியதாகத்தான் கருதுகிறேன். அதனாலேயே ‘அமைச்சர்கள் வரம்புமீற வேண்டாம்’ என்று சொல்லியிருக்கிறேன்... அவ்வளவுதான்!’’

‘‘அரசாங்கத்துக்குச் சிக்கல் ஏற்பட்டுவிடும் என்றால், ‘ஆட்சியைக் கலைத்துவிடுவோம்’ என்று மிரட்டுகிறீர்களா?’’

‘‘அப்படிச் சொல்லவில்லை. இவர்கள் இப்படி எல்லைமீறிப் பேசுவதால், கூட்டணிக்குள் பிரச்னை வந்துவிடக் கூடாதே என்ற எச்சரிக்கை உணர்வோடு பேசியிருக்கிறேன். இதை ஏன், ‘ஆட்சியைக் கலைத்து விடுவது’ என்றெல்லாம் மாற்றிச் சொல்கிறீர்கள்?’’

‘‘ராகுல் காந்தியை, அரைவேக்காடு என்று நீங்கள் சொல்லியிருப்பது வரம்பு மீறல் இல்லையா?’’

‘‘ராகுல் காந்தியும் சோனியா காந்தியும் பிரதமர் மோடியை ‘மரண வியாபாரி’ (மவுத் கா சௌதாகர்) என்று மிக மோசமான வார்த்தைகளைப் பயன் படுத்தியே பேசியிருக்கிறார்கள். அதுமட்டுமல்ல, ராகுல் காந்தியின் பாட்டி காலத்திலிருந்தே காங்கிரஸ் கட்சியில் இருந்துவரும் தலைவர்களை

‘பா.ஜ.க-வுடன் கள்ள உறவு வைத்திருக்கிறார்கள்’ என்று ராகுல் காந்தி பேசுவதை என்ன வென்று எடுத்துக்கொள்ளச் சொல்கிறீர்கள்? இது போன்ற அவரது பேச்சுகளைத்தான் ‘அரைவேக்காட்டுத் தனம்’ என்று நான் உணர்கிறேன்!’’

‘‘ ‘கட்சியிலுள்ள சில தலைவர்கள் பா.ஜ.க தூண்டுதலால் செயல்படுகிறார்கள் என்று ராகுல் எந்த இடத்திலும் சொல்லவில்லை. பா.ஜ.க-தான் இப்படியொரு திட்டமிட்ட செய்தியைப் பரப்புகிறது’ என்று காங்கிரஸ் தரப்பில் குற்றம்சாட்டப்படுகிறதே?’’

‘‘குலாம் நபி ஆசாத், ‘காந்தி குடும்பத்துக்கு வெளியிலிருந்து காங்கிரஸ் தலைவர் வர வேண்டும்’ என்று பேசியிருக்கிறார். ‘இவர்கள் பா.ஜ.க-வுடன் தொடர்பில் இருக்கிறார்கள்’ என்று ராகுல் காந்தி பேசியதும் செய்தியாக வெளிவந்திருக்கிறது. அதன் பிறகு அவர் தன் பேச்சு குறித்துத் தெளிவுபடுத்தியிருக்கலாம். ஆனால், தன் கட்சித் தலைவர்களையே நம்பாமல் இருக்கக்கூடிய ஒரு கட்சித் தலைவரைப் பற்றி நான் என்ன நினைக்க முடியும்?’’

‘‘உணர்ச்சிவசப்பட்டு பேசுகிறீர்களா அல்லது ‘இப்படி அதீதமாகப் பேச வேண்டும்’ என்று திட்டமிட்டே பேசுகிறீர்களா?’’

‘‘இது உணர்ச்சிவசப்பட்ட பேச்சல்ல. தமிழகத்தில் 1838-ல் வந்த கால்டுவெல்லின் கைக்கூலிகள், பல பத்தாண்டுகளாக இந்து மதத்தைப் பற்றி இழிவாகப் பேசிவருவதை நிறுத்தச் செய்வதற்கு சரியான ஒரு வார்த்தைப் பிரயோகம் செய்ய வேண்டிய சூழ்நிலை - கட்டாயத் தால் இப்படிப் பேசுகிறேன். இந்த நிர்பந்தத்துக்கு என்னைத் தள்ளியிருக்கிறார்கள். விநாயகர் சிலையை உடைத்தபோது, நாங்கள் எந்த அளவுக்கு மனம் புண்பட்டோமோ, அந்த அளவுக்கு அவர்கள் மனமும் புண்பட வேண்டும். அப்படிப் புண்பட்டால்தான், அவர்கள் அடுத்தவரைப் புண்படுத்துவதை நிறுத்துவார்கள்.”

‘‘ `பெண்களை உயர்வாக மதிக்கும் கலாசாரத்தைக் கொண்டவர்கள்’ என்று சொல்லும் நீங்களே பெண்களை இழிவுபடுத்தும் ‘வசை’ச் சொற்களைப் பயன்படுத்தலாமா?’’

‘‘எந்த மொழியில் பேசினால் அவர்களுக்குப் புரியுமோ அந்த மொழியில் பேச வேண்டிய நிர்பந்தத்துக்கு என்னைத் தள்ளியவர்கள் இந்த நாத்திகக் கயவர்கள் கூட்டம். ஆண்டாளைப் பற்றி அவதூறாகப் பேசிய வைரமுத்துவை நான் கண்டித்துப் பேசியதால், அவர் மனம் புண்பட்டுவிட்டது என்று சொல்கிறார்கள். ஆனால், அவர் மறுபடியும் ராமரைப் பற்றி இழிவாகப் பேசியிருக்கிறாரே... எனவே, வைரமுத்துவை குண்டாஸில் கைது செய்ய வேண்டும்!’’

‘‘ ‘தனிநபர்களைத் தரக்குறைவாக விமர்சிக்கும் ஹெச்.ராஜாவின் பேச்சு, மல்லாந்து படுத்துக்கொண்டு எச்சில் துப்புவது போன்றது’ என காங்கிரஸ் கட்சியின் பீட்டர் அல்போன்ஸ் கூறுகிறாரே?’’

‘‘இந்துக்களுக்கு விரோதமாக பீட்டர் அல்போன்ஸ் எப்படியெல்லாம் செயல்பட்டுக்கொண்டிருக்கிறார் என்று என்னால் அடுக்கடுக்கான உதாரணங்களைக் காட்ட முடியும். காங்கிரஸ் கட்சியின் தலைவர்களுக்கு என்னைப் பற்றிப் பேச என்ன உரிமையிருக்கிறது? உயிருக்கு பயந்த கோழை வைரமுத்து, எம்பெருமான் ராமனை மனநோயாளி என்று பேசுவார். அவர் பேசுவதைப் பார்த்து மு.க.ஸ்டாலின், ப.சிதம்பரம், வைகோ என எல்லோரும் கைதட்டிக் கொண்டிருக்கிறார்கள். வெட்கம் கெட்ட இந்து விரோதிகள் இவர்கள். அன்றைக்கு, ‘மிஸ்டர் வைரமுத்து ஸ்டாப் இட்!’ என்று ப.சிதம்பரம் அவரது பாணியிலேயே தடுத்து நிறுத்தியிருந்தால், அவர் மனுஷன். ஆனால், சொல்லவில்லையே! அப்படி யிருக்கும்போது என்னைப் பற்றிப் பேச காங்கிரஸ் தலைவர்களுக்கு எந்த உரிமையும் கிடையாது!’’