‘தமிழகத்தில் கூட்டணி அமைச்சரவை... 60 தொகுதிகளில் போட்டி...’ என்றெல்லாம் ‘சவுண்டு’ விட்டுக்கொண்டிருந்த பா.ஜ.க., அ.தி.மு.க கூட்டணியில் 20 தொகுதிகளுக்கு இறங்கிப்போயிருக்கிறது. ஆனால், இதை முன்வைத்துப் பேசும் ஆர்.எஸ்.எஸ் தரப்பினரோ, “சீட்டுகளின் எண்ணிக்கையைவைத்து எங்களுக்குப் பின்னடைவு ஏற்பட்டிருப்பதாகக் கருத வேண்டாம். இனிமேல்தான் எங்கள் ஆட்டமே ஆரம்பமாகப்போகிறது. இதற்குப் பின்னால், மாஸ்டர் பிளானே இருக்கிறது’’ என்கிறார்கள்!

அ.தி.மு.க கூட்டணியில் பா.ஜ.க-வுக்கான தொகுதி ஒதுக்கீடு இழுபறியாகவே இருந்தது. தமிழகத்துக்கு விசிட் செய்த அமித் ஷாவுடன் அ.தி.மு.க தலைவர்கள் மணிக்கணக்கில் பேச்சுவார்த்தை நடத்திய பிறகும், தொகுதி எண்ணிக்கையை இறுதிசெய்வதில் சிக்கல் நீடித்தது. இந்தநிலையில், மார்ச் 5-ம் தேதி இரவு நடந்த பேச்சுவார்த்தையை அடுத்து, 20 தொகுதிகளுக்கு ஒப்புக்கொண்டு கையெழுத்து போட்டுள்ளது பா.ஜ.க. ‘அ.தி.மு.க கூட்டணியில் அதிக இடங்களை பா.ஜ.க பெறும்’ என்று அரசியல் அரங்கில் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 20 தொகுதிகளுக்கு அவர்கள் ஒப்புக்கொண்டது பலருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

இது குறித்து நம்மிடம் பேசியவர்கள், ‘‘டெல்லி பா.ஜ.க தலைமை தமிழக சட்டமன்றத் தேர்தலை 2024-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான ஒரு விசிட்டிங் கார்டாகவே கருதுகிறது. இந்தமுறை பா.ஜ.க சார்பில் சட்டமன்றத்தில் ஓரளவு கெளரவமான எண்ணிக்கையில் உறுப்பினர்கள் இருந்தால் போதும் என்றே எண்ணுகிறது டெல்லி தலைமை. 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக தமிழகத்தில் காலூன்றிவிட வேண்டும் என்பதுதான் பா.ஜ.க-வின் திட்டம். அதற்கு முன்பாக இரண்டு திராவிடக் கட்சிகளில் ஒன்றை காலிசெய்ய வேண்டும் என்ற எங்கள் திட்டத்தில் எந்த மாற்றமும் இல்லை. அ.தி.மு.க-வுடன் இப்போது பா.ஜ.க கூட்டணி வைத்திருந்தாலும், எதிர்காலத்தில் அ.தி.மு.க-வின் வீழ்ச்சிக்குக் காரணமாக இருக்கப்போவதும் பா.ஜ.க-தான்.

வரும் சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க வெற்றிபெறும் என்று மத்திய உளவுத்துறை ஏற்கெனவே ரிப்போர்ட் கொடுத்திருக்கிறது. அதே நேரம், அ.தி.மு.க ஏற்கெனவே இரண்டாக உடைந்திருக்கிறது. இரண்டு அணிகள் இணைப்புக்கு நாங்கள் இப்போது ஆதரவு கொடுத்தாலும், சசிகலாவின் கை அ.தி.மு.க-வில் ஓங்கிவிடக் கூடாது என்பதில் தெளிவாக இருக்கிறோம். சசிகலா வந்தால், வலுவான தலைமையாக அவர் மாறிவிடுவார் என்பது எங்களுக்குத் தெரியும். அதனாலேயே, சசிகலாவை இந்தத் தேர்தலில் ஒதுங்கியிருக்க பா.ஜ.க அழுத்தம் கொடுத்தது.

தேர்தலில் அ.தி.மு.க தோல்வியைத் தழுவினால் கட்சிக்குள் கண்டிப்பாகக் குழப்பம் வரும். அந்தக் குழப்பத்தைவைத்து சசிகலா கட்சிக்குள் மீண்டும் நுழைய நினைக்கிறார். இந்தத் திட்டமும் பா.ஜ.க-வுக்குத் தெரியாமல் இல்லை. அப்படி சசிகலா ரீ-என்ட்ரி கொடுத்தால், அதன் பிறகு பலமான நெருக்கடியை அவர் சந்திப்பார். அ.தி.மு.க தோல்வியடைந்து பலவீனப்படும் நேரத்தில், மேலும் அந்தக் கட்சியைப் பலவீனப்படுத்தும் வேலையை பா.ஜ.க செய்யும்.

மற்றொருபுறம், இன்றைக்கு எங்களைத் தீவிரமாக எதிர்க்கும் தி.மு.க., தமிழகத்தில் ஆட்சிக்கு வந்ததும் எங்கள் வழிக்கு வந்துவிடும். அதற்கான திட்டங்கள் ஏற்கெனவே தீட்டப்பட்டுவிட்டன. இப்போதும் தி.மு.க தலைமைக்கு நெருக்கமானவர்கள் எங்கள் டெல்லி தலைமையுடன் தொடர்பில்தான் இருக்கிறார்கள். அ.தி.மு.க-வை முதலில் வீக் செய்துவிட்டு, அதன் பிறகு தி.மு.க-வைக் கையிலெடுப்போம்.

இன்றைக்கு திராவிட அரசியலை முன்வைத்து தி.மு.க பிரசாரம் செய்கிறது. ஐம்பது வயதைக் கடந்தவர்களுக்கு மட்டுமே திராவிடம் குறித்த புரிதல் இருக்கும். இன்றைய தமிழக இளைஞர்களுக்கு திராவிடம் என்றால் என்னவென்றே தெரியாது. அதனால், இளைஞர்களைக் குறிவைத்தே எங்கள் பிரசாரம் இருக்கும். ஏற்கெனவே, தமிழகம் முழுவதும் இளைஞர்களை எங்கள் பக்கம் கொண்டுவரும் வேலையைச் சத்தமில்லாமல் ஆர்.எஸ்.எஸ் அமைப்பு செய்துவருகிறது. ஒவ்வொரு சமூகத்திலும் செல்வாக்கானவர்களை அழைத்துப் பேசி, அவர்களுக்கு மத்திய அரசின் திட்டத்தில் ஏதாவது ஒரு புராஜெக்ட்டைக் கொடுத்துவருகிறோம். அந்த வகையில் தி.மு.க ஆட்களை எங்கள் வழிக்குக் கொண்டுவந்துவிடுவோம்.

தேர்தலுக்குப் பிறகு அ.தி.மு.க-வை வீக் செய்துவிட்டால், அடுத்த கட்டமாக அந்த இடத்தை நிரப்பும் வேலையை பா.ஜ.க செய்யும். அதன் மூலம் 2024-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் 2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க - தி.மு.க இடையில் நேரடிப் போட்டி ஏற்படும். அப்போது தி.மு.க-வை எப்படி பலவீனப்படுத்துவது என்பது எங்களுக்குத் தெரியும். இப்படியான தொலைநோக்குத் திட்டத்துக்காக இந்தத் தேர்தலை ஒரு வாய்ப்பாக நாங்கள் எடுத்துக்கொள்கிறோம்’’ என்று ஷாக் கொடுக்கிறார்கள்.

‘‘அ.தி.மு.க-வில் தற்போதுள்ள அமைச்சர்கள் குறித்த பல ஃபைல்களை டெல்லி மேலிடம் பத்திரமாக வைத்திருக்கிறது. தேர்தல் முடிவுக்குப் பிறகு அவற்றைக் கையிலெடுத்து, எங்கள் இருப்பைத் தமிழகத்தில் வலுப்படுத்தும் திட்டமும் உள்ளது. ‘அரசியலிலிருந்து ஒதுங்குவதாக சசிகலா அறிக்கை கொடுத்தற்குப் பின்னால், பா.ஜ.க இருக்கிறது’ என்பது பலருக்கும் தெரியும். இந்த அழுத்தம் சசிகலா சிறையில் இருந்தபோதே ஆரம்பித்துவிட்டது. டெல்லி மேலிடம் தினகரனை ஒரு மாதிரியாகவும், சசிகலாவை ஒரு மாதிரியாகவும் டீல் செய்துவருகிறது. பா.ஜ.க-வின் இந்த வியூகத்தை நாள்கள் செல்லச் செல்ல புரிந்துகொள்வீர்கள்’’ என்கிறார் ஆர்.எஸ்.எஸ் பொறுப்பாளர் ஒருவர்.

பா.ஜ.க-வின் ராஜதந்திர நடவடிக்கைகள் பலிக்குமா... அ.தி.மு.க-வை அந்தக் கட்சியால் காலி செய்ய முடியுமா? சட்டமன்றத் தேர்தல் முடிவுகள்தான் முடிவு செய்யும்!