Published:Updated:

``தகுதி இருந்தும், மக்களுக்கு மத்திய அரசின் திட்டங்கள் சென்று சேரவில்லை" - அண்ணாமலை

பாஜக நிர்வாகிகள்

"பலருக்கும் மத்திய அரசின் திட்டங்களைப் பெறுவதற்கான தகுதி இருந்தும், மக்களுக்கு அரசின் திட்டங்கள் சென்று சேரவில்லை என்ற கசப்பான உண்மை புரிந்தது." - அண்ணாமலை

``தகுதி இருந்தும், மக்களுக்கு மத்திய அரசின் திட்டங்கள் சென்று சேரவில்லை" - அண்ணாமலை

"பலருக்கும் மத்திய அரசின் திட்டங்களைப் பெறுவதற்கான தகுதி இருந்தும், மக்களுக்கு அரசின் திட்டங்கள் சென்று சேரவில்லை என்ற கசப்பான உண்மை புரிந்தது." - அண்ணாமலை

Published:Updated:
பாஜக நிர்வாகிகள்

சிதம்பரத்தில், வரும் 25-ம் தேதி இந்திய அரசியல் அமைப்பு தினம் கொண்டாடப்படவிருப்பதாக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் செய்தி அறிக்கையில்,"மக்கள்நலம் காப்பதற்காக மத்திய அரசு கொண்டுவரும் நல்ல பல திட்டங்கள் நம் மாநிலத்தில் சரிவர கிடைக்கவில்லை என்று பல்வேறு தரப்பிலிருந்தும் புகார்கள் வந்தன. அதன் அடிப்படையில், கட்சியின் நிர்வாகிகள் ஞாயிற்றுக்கிழமை முதல் தமிழகம் முழுவதுமுள்ள பட்டியலின சகோதரர்கள் வசிக்கும் பகுதிக்குச் சென்று சந்தித்துப் பேசினர்.

அண்ணாமலை
அண்ணாமலை

அந்தப் பகுதி மக்கள் அனைவரையும், அந்த ஊரின் பொதுவெளியில் சந்தித்து, கலந்துபேசி அவர்களின் குறைகளைக் கேட்டுத் தெரிந்துகொண்டு, அதற்கான தீர்வுகளை, முறைப்படி ஏற்படுத்தித் தரும் பணியில் ஈடுபட்டனர். நான் கடந்த 9-ம் தேதி, மதுரை மாவட்டம், வாடிப்பட்டி தாலுகா, சாணம்பட்டியில் பட்டியல் இனச் சகோதரர்கள் இல்லத்தில் மதிய உணவு அருந்தி, ஆலய மண்டபத்தில் அமர்ந்து, கிராம மக்கள் மத்தியில் உரையாடினேன். மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், ஞாயிற்றுக்கிழமை வடபழனியில் வசிக்கும் பழக்கடை எஸ்.மணிகண்டன் இல்லத்துக்குச் சென்று உணவருந்தி உரையாடினார்.

இதுபோல அனைத்து நிர்வாகிகளும் அந்தந்தப் பகுதியிலுள்ள பட்டியல் இன மக்களைச் சந்தித்து உரையாற்றினர். இந்த நிகழ்ச்சிகள் மிகச் சிறப்பாக நடைபெற்றன. நம் சகோதரர்கள் வீட்டுக்குச் செல்லும் பா.ஜ.க நிர்வாகிகள் முதலில் அனைவரையும் ஒன்று திரட்டி, அவர்களுக்குள்ள குறைகளைக் கேட்டறிந்தனர். பிறகு, அவர்களுக்கு மத்திய அரசின் திட்டங்களெல்லாம் முறையாகக் கிடைக்கின்றனவா என்றும் கேட்டறிந்தனர். இந்த முயற்சிக்கு மக்கள் மத்தியில் மகத்தான வரவேற்பு கிடைத்தது.

பாஜக தலைவர்கள்
பாஜக தலைவர்கள்

ஒடுக்கப்பட்ட மக்கள் வசிக்கும் பகுதிக்குச் செல்லும் நமது நிர்வாகிகளை அவர்கள் எதிர்கொண்டு அழைத்து, அன்பு பாராட்டி, உரையாடி, உணவு படைத்து, உற்சாகம் காட்டினர். எந்தச் சகோதரர் வீட்டில் உணவு அருந்தினோமோ, அவரை ஒரு நாள் நமது இல்லத்துக்கு வருமாறு அழைப்புவிடுத்தனர். நானும் சாணம்பட்டி ஈஸ்வரன் அவர்களை என் இல்லத்துக்கு உணவருந்த அழைத்திருக்கிறேன்.

இந்த அன்புப் பரிமாற்றம், பரஸ்பரம் மிகப்பெரிய நம்பிக்கையை உருவாக்குகிறது. செல்லும் இடங்களிலெல்லாம் பலருக்கும் மத்திய அரசின் திட்டங்களைப் பெறுவதற்கான தகுதி இருந்தும், மக்களுக்கு அரசின் திட்டங்கள் சென்று சேரவில்லை என்ற கசப்பான உண்மை புரிந்தது.

அண்ணாமலை
அண்ணாமலை

ஆகவே, ஏறத்தாழ சுமார் 8,000 கிராமங்களில் நமது நிர்வாகிகள் பட்டியலினச் சகோதர சகோதரிகளை சந்திக்கும் பணியைச் செய்துள்ளனர். தமிழக மக்களுக்கு மறைக்கப்பட்ட, மறுக்கப்பட்ட நன்மைகளை, மத்திய அரசின் திட்டங்களை, மக்களின் உரிமைகளை அவர்களுக்கு வழங்கும் அதேவேளையில், விழிப்புணர்வு ஊட்டும் நிகழ்வாக வரும் 25-ம் தேதி சிதம்பரத்தில் இந்திய அரசியல் அமைப்பு தினம் கொண்டாடப்படவிருக்கிறது" எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.